முகம் பளபளக்க...

 • ரோஜா இதழ் மற்றும் பாதாம் பருப்பை அரைத்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி வர, கரும்புள்ளிகள் மறையும்.
 •  கடலை எண்ணெய் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சம அளவு கலந்து அவற்றை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.
 •  எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவி வர, அவை நாளடைவில் மறைந்து விடும்.
 •   கோதுமை தவிடுடன் பால் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.
 •   வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.
 •   பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவு எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.
 •   தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினாலும், முகம் பொலிவுடன் காணப்படும்.
 •   தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை நன்கு நைசாக அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், கரும்புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
 •   சந்தனத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சம அளவுடன், பால் கலந்து பேஸ்ட் போல் குழைத்து கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளில் தடவி, காய்ந்த பின் தண்ணீரால் கழுவ வேண்டும்
 •   வெள்ளரிச்சாறு, புதினா சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவைகளை சம அளவில் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மீது தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள் போய்விடும்.
 • ருங்கை இலைச்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தடவினால், கரும்புள்ளிகள் நீங்கும். அதே போல் பப்பாளி பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் தடவினாலும், நல்ல பலன் கிடைக்கும்.
 •  எலுமிச்சம் பழச்சாற்றை வெதுவெதுப்பான பாலேட்டில் கலந்து முகத்தில் பூசி பதினைந்து நிமிடங்கள் ஊறிய பின் கழுவி வரவும்.
 •  பப்பாளிப் பழத்தை முகத்தில் பூசி ஊற வைத்துப் பதினைந்து நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும்.
 •  தக்காளிப் பழத்தை அரைத்து கொஞ்சம் பால், எலுமிச்சம் பழச்சாறு கலந்து முகத்தில் பூசி ஊற வைத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து கழுவி வரவும்.
 •  பச்சைப் பயறைத் தோலுடன் அரைத்து மாவாக்கி அதை நீரில் குழைத்து முகத்தில் நன்றாகத் தடவி ஊற விட்டு பதினைந்து நிமிடங்கள் கழித்துக் கழுவி வரவும். முகத்தில் எண்ணெய் வழியாது.
 • தக்காளியை அரை வேக்காடாக சமைத்து உண்டு வரவும். புத்துணர்ச்சியும் அளிக்கும்.

கர்ப்பிணிகள் செய்யக்கூடாதவை

 • வேக வைக்காத, அரை வேக்காட்டுப் பொருட்களை கர்ப்பிணிகள் உண்ண வேண்டாம். ஏனென்றால் நன்கு வேக வைத்த பொருட்களில் அழிக்கப்படும் கிருமிகள், வேக வைக்கப்படாத பொருட்களில் அழிவதில்லை. மேலும், அன்றைய தினம் சமைத்த உணவுப் பொருட்களை மட்டுமே சாப்பிட வேண்டும். 
 • அழுகிய, கொஞ்சம் கெட்டுப்போன காய்கறி, பழங்களை நறுக்கிவிட்டு நல்ல பாகத்தை சாப்பிடும் பழக்கம் அறவே வேண்டாம்.
 •  அதிக குளிர்ச்சி, அதிக உஷ்ணத்தை ஏற்படுத்தும் பொருட்களை அளவோடு எடுத்துக் கொள்ளுங்கள். பழச்சாறுகளை அதிகமாகக் குடிக்க வேண்டாம். ஏனெனில் அதன் மூலம் உங்கள் உடலுக்கு தேவையற்ற சர்க்கரை சேர்வதால் நீரிழிவு ஏற்படலாம்.
 • மிகவு‌ம் சூடான பொருட்களை சாப்பிட வேண்டாம். இது கர்ப்பத்தின் போதும், குழந்தை பிறந்த பிறகும் கடைபிடிக்கலாம்.
 • உடலுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும் செயல்களை செய்யக் கூடாது. குணிந்து எடை அதிகம் கொண்ட பொருட்களை தூக்குவது, இடுப்பில் வைப்பது, எட்டாத பொருளை எட்டி எடுப்பது, குதிப்பது, வேகமாக நட‌ப்பது, வாகனம் ஓட்டுவது, நீண்ட தூரப் பயணம் செல்வது, அதிகமான எடையை தூக்கிக் கொண்டு படி ஏறுதல் போன்றவற்றை தவிர்த்தல் நலம்.
 • மல்லாக்காகப் படுப்பது கூடாது என்பார்கள். ஏனெனில் குழந்தையின் எடை உங்களது ரத்தக்குழாய்களை அழுத்துவதால் உங்களுக்கு மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்படும். உங்கள் மூச்சுக் காற்றின் அளவு குறையும்போது அது குழந்தையின் உடலையும் தாக்கும். எனவேதான் மல்லாக்காகப் படுக்கக் கூடாது என்கிறார்கள்.
 • உடலுக்கு இறுக்கமான ஆடைகள் மற்றும் உள்ளாடைகளை தவிர்க்க வேண்டும். கர்ப்ப காலத்திற்கு என்று தளர்த்தியான ஆடைகளை வாங்கி அணியவும். கர்ப்ப காலத்தில் உள்ளாடைகளின் அளவுகளிலும் மாற்றம் ஏற்படும். எனவே அதற்கேற்ற உள்ளாடைகளைத் தேர்வு செய்யவும்.
 • முகத்திற்கோ, தலைக்கோ, உடலுக்கோ எந்த வித புதிய க்ரீம்களையும் பயன்படுத்தக் கூடாது. நீங்கள் எப்போதும் பயன்படுத்தி வந்த பொருட்களையும் அளவோடு பயன்படுத்துங்கள்.
 • சாதாரண காய்ச்சல், பேதி போன்ற எந்த நோய்க்கும் மருந்துக் கடைக்காரரிடம் சென்று மருந்து வாங்கி சாப்பிடக் கூடாது. உங்களது மகப்பேறு மருத்துவரிடம்தான் செல்ல வேண்டும். அப்படி இல்லாமல் அவசரத்திற்கு சாதாரண் மருத்துவரிடம் செல்ல வேண்டி இருந்தால் நீங்கள் கர்ப்பமுற்று இருப்பதை முதலில் தெரிவித்துவிட வேண்டும்.
 • ரத்தப் போக்கு, நீர்க்கசிவு, வயிற்றின் இரு புறத்திலும் லேசான வலி, மலச்சிக்கல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், அஜீரணம் போன்றவற்றை உங்களது மகப்பேறு மருத்துவரிடம் சொல்லி உரிய மருத்துவம் பெறுவது அவசியம். இதில் எதையும் அலட்சியப்படுத்தக் கூடாது.
 • உங்களது கர்ப்பத்தில் ஏதேனும் சிக்கலோ அல்லது உறுதித்தன்மை குறைவோ இருந்தால் உடலுறவை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
 • விரதம் இருப்பதோ, மிகவும் இருளான அல்லது கரடுமுரடான இடத்திற்கு செல்வதோ, ஓடுவதோ, கூட்டத்தில் செல்வதோ தவிர்த்தல் வேண்டும்.
 • மிகவும் குளிர்ந்த மற்றும் மிகவும் சூடான தண்ணீரில் குளிக்க வேண்டாம். அதிகமான கவலை மற்றும் மன அழுத்தம் பிறக்கும் குழந்தையின் மனநிலையை பாதிக்கும். எனவே எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முயலுங்கள் அவ்வாறு இல்லாவிட்டாலும் மனதில் கண்டதையும் போட்டு குழப்பிக் கொள்ளாமலாவது இருக்க முயற்சி செய்யுங்கள்.
 • நீண்ட பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் போகக் கூடாது. பேருந்தை தவிர்த்துவிட்டு ரயிலில் செல்லலாம்.
 • சாதாரண எக்ஸ்-ரே எடுப்பதை தவிர்க்க வேண்டும். அதிகமான அலைச்சல், அதிகமான மன, உடல் அழுத்தம் போன்றவையும் தவிர்த்தல் நலம்.
 • மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் போன்றவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். அதிக உயரம் கொண்ட குதிகால் செருப்புகள், காற்றுப்புகாத ஆடைகள், அதிக வாசனை திரவியங்கள் வேண்டாம்.

குழந்தைகளுக்கு, என்ன மாதிரியான உணவு கொடுக்க வேண்டும்

      0-6 மாதங்கள் வரை :
 • தாய்ப்பால் மட்டுமே கொடுக்கவேண்டும். தாய்ப்பால் பற்றாக்குறை எனும் பட்சத்தில் அரிசிக்கஞ்சி, பருப்புத் தண்ணீர், ஆப்பிள், ஆரஞ்சு ஜூஸ், காய்கறி சூப் கொடுக்கலாம். அதிலும் பாதிக்குப் பாதி ஆறிய வெந்நீர் சேர்த்து, முதன் முறையாக கொடுக்கும்போது அரை டீஸ்பூன் மட்டுமே கொடுக்க வேண்டும். 
 • குழந்தை உடல் அதை ஏற்றுக் கொண்டு, மறுநாள் எந்தத் தொந்தரவுமின்றி ஆரோக்கியமாக இருந்தால், அதே அரை டீஸ்பூன் மறுநாளும் கொடுங்கள். மெது மெதுவாக அதை ஒரு டீஸ்பூன் அளவாக உயர்த்திக் கொள்ளலாம். .
     6 லிருந்து 8 மாதம் வரை :
 • இந்தத் தருணத்தில் குழந்தைக்கு இரும்புச் சத்து, புரதச்சத்து அதிகம் தேவைப்படும். எனவே கொழுப்பில்லாத மட்டன் சூப்பில் மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து முதல் நாள் சிறிதளவு கொடுத்துப் பாருங்கள். 
 • குழந்தைக்கு ஜீரணமானால் இந்த சூப்பை வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் கொடுக்கலாம். இதைத்தவிர சிக்கன் சூப், வேகவைத்து மசித்த பசலைக்கீரை, முருங்கைக்கீரை, பருப்புசாதம் கொடுக்கலாம்.
    9லிருந்து 10 மாதம் வரை :
 • இந்த சமயத்தில்தான் குழந்தைக்குப் பல்முளைக்கும். மென்று சாப்பிடும் உணவுகளை ரசித்துச் சாப்பிட ஆரம்பிப்பார்கள். சிப்ஸ் போன்றவைகளை அதிகம் வாங்கிக் கொடுத்துப் பழக்கிவிட்டால், குழந்தைகள் லைஃப்லாங் அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகிவிடுவார்கள்
 • குழந்தைகள் கடிப்பதற்கு வசதியாக ஆப்பிள், காரட் போன்று கொடுத்துப் பழக்குங்கள். வீட்டில் செய்த இனிப்பு, லேசான காரம், லேசான புளிப்பு உணவு வகைகளையும் கொடுத்து பழக்கப்படுத்துங்கள். அப்போதுதான் குழந்தை எல்லா சுவைக்கும் பழக்கப்படும்.
    10லிருந்து 12 மாதங்கள் வரை :
 •  இந்தப் பருவத்தில் குழந்தைகள் உணவின் கலரை பிடித்துப்போய் சாப்பிட ஆசைப்படுவார்கள். இந்த தருணத்தில் நமது பாரம்பரிய உணவையே வகைவகையாக சமைத்துச் சாப்பிடக் கொடுக்கலாம். 
 • கலர்கலரான காய்கறிகளைச் சாப்பிட வைக்கலாம். ஸ்நாக்ஸுக்கு கடைகளில் விற்கும் சிப்ஸ் அது இதுவென்று கொடுக்காமல், வேகவைத்த வேர்க்கடலை, எண்ணெயின்றி வறுத்த வேர்க்கடலை, எனர்ஜி மில்க், வேகவைத்த தானியங்கள், முளை கட்டிய தானியங்களை பவுடராக்கி கஞ்சி வைத்து, இப்படி விதவிதமாகக் கொடுக்கலாம்.
  1லிருந்து 3 வயது வரை :
 • இந்தக் காலகட்டத்தில் குழந்தைகளுக்கு உணவின்மேல் ஈர்ப்பை உருவாக்கி உணவு ஊட்டுவது என்பது மிகக் கடினமான வேலை. புதிது புதிதாக சுவையை மாற்றி மாற்றிக் கொடுத்து உணவின்மேல் ஈர்ப்பை உருவாக்கவேண்டும். 
 • நிறைய கலர்ஃபுல்லான காய்கறிகள், பழங்கள் என்று சாப்பிடும் ஆசையைத் தூண்டிவிடலாம். சாண்ட்விச், முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை, வேகவைத்த வேர்க்கடலை போன்ற கால்சியம், புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடக் கொடுக்க வேண்டும்.
.
    3 வயதிற்கு மேல் :
 • குழந்தைகள் பள்ளி செல்ல ஆரம்பிக்கும் வயது. என்னதான் நீங்கள் பார்த்துப் பார்த்து லன்ச் கட்டிக் கொடுத்தாலும், அவர்கள் சாப்பிடுகிறார்களா, கொட்டிவிடுகிறார்களா என்று தெரியாது. எனவே காலை ப்ரேக் ஃபாஸ்ட், மாலை ஸ்நாக்ஸ், இரவு டின்னரில் நீங்கள் வெகு அலர்ட்டாக இருக்கவேண்டும்.
 • நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டீர்கள் என்றால் போதிய நியூட்ரிஷியன்ஸ் இல்லாமல் குழந்தைகள் நார்மல் சுறுசுறுப்பை இழந்து எப்போதும் தூங்கிவழிந்து கொண்டே இருப்பார்கள். ரொம்ப அசதியாகவும் காணப்படுவார்கள். மூளைத்திறனும் குறைவாகவே இருக்கும்.
 • இட்லி, தோசை, பால் குறைவான மில்க்ஷேக் சப்பாத்தி, எனர்ஜி மில்க், தானிய சுண்டல், முட்டை, பருப்புசாதம், மிக்ஸ்ட் ரைஸ், பழங்கள் சாப்பிடக் கொடுத்துப் பழக்க வேண்டும்.
 • புளிக்காத, ஃப்ரிட்ஜில் வைக்காத தயிர்சாதம் குழந்தைகளுக்குக் கட்டாயம் கொடுக்க வேண்டும். இதுபோன்ற தயிரில் நல்ல பாக்டீரியா இருப்பதால் உடல்நலனுக்கு மிகவும் நல்லது.
    12லிருந்து 14 வயது வரை :
 • இந்தப் பருவத்தில் குழந்தைகளுக்கு அபார வளர்ச்சி உண்டாகும். பெண் குழந்தைகளுக்குத்தான் அபாரவளர்ச்சி இந்த சமயத்தில் ஏற்படும். எனவே நிறைய நியூட்ரிஷியன்ஸ், புரதம், இரும்புச்சத்து, விட்டமின்ஸ், மினரல்ஸ் என எல்லாவிதமான சத்துகளும் தேவைப்படும். 
 • சில பெண் குழந்தைகள் பூப்பெய்துவிடும் வயது என்பதால் நிறைய அயர்ன் தேவைப்படும். இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் (முருங்கைக் கீரை, பேரீச்சை, வெல்லம்) போன்றவற்றை உணவில் அதிகம் சேருங்கள்.
 • அதே சமயம் நிறைய ஊளைச்சதைபோடும் இந்த வயதில் ஜங்க் ஃபுட் தவிர்த்தால்தான் உடலில் எதிர்ப்புச்சக்தி கூடும். பின் நாட்களில் நோய் அணுகாமல் தடுக்க இந்த வயதில் குழந்தைகள் சாப்பிடும் உணவுதான் தாங்கிப் பிடிக்கும். எனவே கவனமாக இருங்கள்.
 •   வீட்டிலேயே விதவிதமான உணவுகளை குழந்தைகளுக்குத் தயாரித்துக் கொடுத்து அவர்களை சாப்பிட வைத்து அவர்களின் வளர்ச்சியைப் பார்த்து ரசியுங்கள்.

குழந்தை ஏன் அழுகிறது?

குழந்தைகள் சில சமயம் காரணம் இல்லாமல் அழுது கொண்டு இருக்கும் . சில பொதுவான காரணங்கள் 
 • வயிற்று வலி :: இது மிக முக்கிய காரணம் . பாட்டிலில் பால் குடிக்கும் குழந்தைகளுக்கு அதிகமாக வரும் . விட்டு விட்டு வரும்
 • . இடை பட்ட நேரத்தில் நன்றாக விளையாடும் . வயிறு சிறிது ஊப்பிஇருக்கும் .          பால் குடிக்காது . பொதுவாக இது மாலைஇரவு நேரங்களில் வரும் .
 • முதல் நாள் வலி வந்த அதே நேரத்தில் அடுத்த நாளும் வரும் .4- 6 வார குழந்தைகளுக்கு இது அதிகமாக காணப்படும் .
 • அழும் போது குழந்தயை வலது புறமாகவோ ,குப்புற படுக்க வைத்தாலோ வலி குறையும்
 • காது வலி :இதுவும் மிக முக்கிய காரணம் . பாட்டிலில் பால் தருவது , சளி ,
    மூக்கு  அடைப்பு ஆகியவை முக்கிய காரணங்கள் ஆகும் . காது மடலை      தொட்டால் வலி  அதிகமாகி அழும் .
 • மூக்கு அடைப்பு : படுக்க வைத்தால் குழந்தை அழும் , நேராக வைத்தால் அழுகை குறையும் . மூச்சு விட திணறும் . பால் குடிக்க முடியாது . சளி இருக்கும் . அழுகை தொடர்ச்சி ஆக இருக்கும்

 • பூச்சி கடி: குழந்தை விடாமல் அழுதால் உடனே உடைகளை கழட்டி ஏதேனும் சிறு சிறு பூச்சி,
             எறும்பு உடலில் கடித்து சிவந்து உள்ளதாஎன பார்க்க வேண்டும் .

 • இதர காரணங்கள் :
 • தடுப்பூசி போட்டபின் வரும் வலி
 •      ஆசன வாய், பிறப்பு உறுப்பு ஆகிய இடங்களில் வரும் அரிப்பு .
 • சிறு சிறு கட்டி , கொப்புளங்கள்    
 •     இறுக்கமான உடைகள்      
 •     வெப்பநிலை மாறுபாடு -சூடான அல்லது குளிர்ச்சியான சூழ்நிலை                              
 •                வயிற்று வலி    .(drugs- colimex drops, cyclopam drops, coicaid drops, anafortan drops)
             காது வலி            (drugs- otogesic drops, ciplox drops, candibiotic drops)                      
 • மூக்கு அடைப்பு         treatment-nasoclear drops, nasion drops, otrivin drops)
                   
                    தாய்ப்பால் கொடுப்பது எப்படி

 •  தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கும் முன் குழந்தையை மார்பகத்தோடு ஒட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகுதான் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும்.
 • குழந்தையானது மார்பகக் காம்பை நன்றாக சப்பி பால் குடிக்க வேண்டும். அதற்கு ஏற்ற வகையில், குழந்தையானது தாயின் மார்பகக் காம்பை தனது வாயால் சரியாக பற்றி இருக்கிறதா என்று சரிப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
 • குழந்தை விருப்பப்படும் போதெல்லாம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அது எவ்வளவு நேரம் விரும்பி பால் குடிக்கிறதோ, அதுவரை பொறுமையாக இருக்க வேண்டும்
 •  தாய்ப்பால் குடித்த குழந்தைக்கு தண்ணீர் கொடுக்க முயற்சிக்கக்கூடாது.
 •  குழந்தையை படுக்க வைக்கும்போது, அதை அரவணைத்தபடி தாயும் படுத்துக்கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் சுரக்க.

 • குழந்தை பெற்றெடுத்த ஒரு நலமான பெண்ணுக்கு சுமார் 850 மில்லி லிட்டர் தாய்ப்பால் தினமும் சுரக்கும். இந்த தாய்ப்பால் சுரப்பு காரணமாக அந்த தாயானவள் தினமும் சுமார் 600 கலோரியை கூடுதலாக இழக்க வேண்டியது இருக்கிறது 

 • . பசலைக் கீரையைச் சுத்தம் செய்து கைப்பிடி அளவு எடுத்துக் கழுவி அம்மியில்வைத்து அரைத்து ஒரு டம்ளர் பசுவின் பாலில் கலந்து காலையில் மட்டும் ஐந்து நாள் குடித்தால் தாய்ப் பால் சுரக்கும்.
 •  சீரகத்தையும், வெல்லத்தையும் சம அளவு கலந்து சாப்பிட்டு வந்தால் பால் பெருகும்.
 • வைட்டமின்கள் தாதுப் பொருட்கள் அதிகமாக உள்ள கேரட், பீட்ருட், கோ‌ஸ், பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள் முதலியவற்றை தினமும் உணவுடன் ஒரு வேளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
 • கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரையில் அதிக புரதமும், மாவுச் சத்தும், வைட்டமின்களும் இருப்பதோடு பிரோக‌ஸ்ட்ரான் ஈ‌ஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் உற்பத்தியை இது பெருக்குகிறது. இதனால் பால் நிறைய சுரக்கிறது.
 • மேலும் தினமும் சுமார் 5 அல்லது 6 கப் பால் உட்கொண்டால் தாய்ப்பால் பற்றாக் குறையே இருக்காது.

  • கீரை வகைகளில் பொன்னாங்கண்ணி கீரையில் அதிக புரதமும், மாவுச் சத்தும், வைட்டமின்களும் இருப்பதோடு பிரோக‌ஸ்ட்ரான் ஈ‌ஸ்ட்ரோஜன் போன்ற ஹார்மோன்கள் உற்பத்தியை இது பெருக்குகிறது. இதனால் பால் நிறைய சுரக்கிறது.
  • மேலும் தினமும் சுமார் 5 அல்லது 6 கப் பால் உட்கொண்டால் தாய்ப்பால் பற்றாக் குறையே இருக்காது. 
  •  கீரை வகைகள், காய்கறிகள், பால், பழங்கள், புரதம் மிகுந்த உணவு பொருட்கள், தேவையான நீர் போன்றவற்றை சரியான விகிதத்தில் அந்த தாயானவள் எடுத்து வந்தால், அவளது தாய்ப்பால் சுரப்பால் ஏற்படுகின்ற கலோரி இழப்பு ஈடு செய்யப்படும் 
  • தாய்ப்பால் சீராக சுரக்க வேண்டும் என்றால், அந்த தாய்க்கு முதலில் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்பட வேண்டும். அதன்பின், குழந்தையானது மார்புக் காம்பை சுவைக்கும் போது புரோலாக்டின், ஆக்ஸிடோஸின் ஆகிய இரு ஹார்மோன்கள் அவர்களது உடலில் சுரக்கின்றன. 
  • புரோலாக்டின் பால் சுரக்க உதவுகிறது. இதே போல், ஆக்ஸிடோஸின் பால் சுரப்பித் திசுக்களில் இருந்து பாலை வெளியில் கொண்டு வருவதற்கு உதவுகிறது.

  கர்ப்பத்திற்கான அறிகுறிகள்

    திருமணம் ஆன எல்லாத் தம்பதியரும் ஆவலோடு எதிர்பார்ப்பது ஒரு குழந்தையைத்தான்.

  . ஒரு பெண் கர்ப்பம் ஆனதை உறுதி செய்வது எப்படி?

  ஆணின் உயிரணுவும், பெண்ணின் கரு முட்டையும் இணைந்து கருத்தரித்தல் நிகழ்கிறது. கருத்தரித்தல் நடந்த 4 நாட்களுக்குப் பிறகே கருவானது கருப்பை நோக்கி நகர்ந்து வருகிறது.
  • கருவானது கருப்பைக்குள் பதியமாகாமல் மிதந்து கொண்டிருக்கும் இந்த நிலையிலேயே சில ரசாயன மாற்றங்களை உண்டாக்குகிறது.
  • இவை, கருமுட்டையைப் பதியம் செய்வதற்கு கருப்பையைத் தயார்படுத்தும் சில அறிகுறிகள் ஆகும். கருத்தரித்த ஒரு வாரம் அல்லது அதற்குப் பிறகுதான் கருப்பையுடன் கரு பதியமாகும்.
  • த்தகைய சிக்கலான வேளையில் சில அறிகுறிகள் தோன்றும். அவற்றுள் குறிப்பிடத்தக்கவை :
        * மாத விலக்கு தள்ளிப்போகுதல்
        * குமட்டல்
         * இரவிலும், பகலிலும் அடிக்கடி சிறுநீர் கழித்தல்
        * புண்ணோ, அழற்சியோ இல்லாமல் வெள்ளைப்படுதல்
         * வாசனையைக் கண்டால் நெடி
       * மார்பகம் பெரிதாவது. அதில் தொட்டால் வலி ஏற்படும். மற்றும் மார்பக நரம்புகள்    புடைத்துத் தெரியும். மார்பகக் காம்புகள் கருப்பாக மாறும்
    * மலச்சிக்கல் இருப்பது போன்ற உணர்வு
     * புளி, ஐஸ், மாங்காய் போன்றவற்றின் மீது திடீரென ஏற்படும் ஆசை
  • - குழந்தையை எதிர்நோக்கும் ஒரு பெண்ணுக்கு இந்த அறிகுறிகள் இருந்தால் அவர் கருத்தரித்திருப்பதை உணர்ந்து கொள்ளலாம்.
      இத்தகைய அறிகுறிகள் தெரிந்தவுடன் சம்பந்தப்பட்ட பெண் மிகவும் எச்சரிக்கையாக     இருக்க வேண்டும்.


    முதல் சில மாதங்கள் மிகவும் சிக்கலான மாதங்களாகும். இந்தக் காலத்தில்  குழந்தையின் மூளை, நரம்பு மண்டலம், இதயம் போன்ற முக்கிய உறுப்புகளும், கை-கால்களும் உருவாகின்றன.

  இந்தக் காலக்கட்டத்தில் மருந்து, மாத்திரைகள் சாப்பிடுவது, எக்ஸ்-ரே எடுப்பது, மது மற்றும் புகைப்பழக்கம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் கருக் குழந்தை பாதிக்கப்படும்.
  மேலும், கர்ப்பம் ஆனதாக உணர்ந்து கொள்ளும் அறிகுறிகள், சிலநேரங்களில் வேறு சில காரணங்களுக்காகவும் ஏற்படலாம். அதனால் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.

  கர்ப்பத்தை சில அறிகுறிகளை வைத்தே உறுதி செய்து கொள்ளலாம். அவை பற்றி இங்கே விரிவாகப் பார்ப்போம்

  1. மாதவிலக்கு நிற்பது

  கர்ப்பம் தரித்திருப்பதற்கான முதல் அடையாளம் சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு மாதவிலக்கு நிற்பதுதான். என்றாலும், சில பெண்களுக்கு கருத்தரித்த முதல் மூன்று மாதங்கள் வரைகூட மாதவிலக்கு ஏற்படுவது உண்டு. சில வேளைகளில் கருத்தரிக்காமலேயே மாதவிலக்கு நின்றிருக்கும்.
  இதற்கு உடல் இயக்கங்களும், நோய்களும் முக்கியக் காரணமாக இருக்கும்.

  குறிப்பாக, புதிய இடங்களில் குடியேறுதல், புதிய சூழல்களில் பணியாற்றுதல், டீன் ஏஜ் பருவ வயதின் இறுதியில் இருத்தல், அதிக கவலை, டென்ஷன் போன்ற மனநிலைகளில் இருத்தல், குறிப்பிட்ட காலத்தில் ஹார்மோன்கள் கரு முட்டைகளை வெளியிடாத நிலை ஆகிய காரணங்களாலும் மாதவிலக்கு நின்றிருக்கும்.

  2. களைப்பு

  பல பெண்களுக்கு காலை நேரத்தில் தூக்கக் கலக்கம், இயல்புக்கு மாறான உடல்சோர்வு, மாலை வேளையில் தலை பாரமாக இருப்பதுபோன்ற உணர்வு போன்றவை உண்டாகும். சில வேளைகளில் தாமாகவே இந்த அறிகுறிகள் மறைந்துவிடும். சிலருக்கு இத்தகைய சோர்வு கருத்தரித்த 12-வது வார வாக்கிலும், சிலருக்கு மிக விரைவாகவும் தெரியும்.

  3. மசக்கை

  இதை ஆங்கிலத்தில் `மார்னிங் சிக்னெஸ்’ என்பார்கள். முதல் முறையாகத் கருத்தரிக்கும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை நிச்சயம் வரும். அடுத்தடுத்த குழந்தை பெறும் பெண்களுக்கு இந்தப் பிரச்சினை வரும் வாய்ப்பு குறைவு. பொதுவாக கருத்தரித்த இரண்டாம் மாதத் துவக்கத்தில் இந்த அறிகுறியை உணரலாம். மாதவிலக்கு நிற்பதோடு, மேற்கண்ட அறிகுறிகளும் இருந்தால், தாங்கள் கர்ப்பம் தரித்திருப்பதை பெரும்பாலும் உறுதி செய்துகொள்ளலாம்.
  சில கர்ப்பிணிகளுக்கு உறங்கி எழுந்தவுடனோ, காலை உணவுக்குப் பிறகோ குமட்டல், வாந்தி போன்றவை இருக்கும். எதைச் சாப்பிட்டாலும் நெஞ்சின் மீதே இருப்பதாகத் தெரியும். சாப்பிட நினைத்தாலே குமட்டும்; வாந்தியும் வந்துவிடும். இந்தப் பிரச்சினைகள் காலை நேரத்திற்குப் பிறகு சரியாகும். மீண்டும் அடுத்த நாள் காலையில் மீண்டும் வந்து விடும். இந்த நிலை மாதவிலக்கு நின்ற அடுத்த நாளோ அல்லது இரண்டு வாரங்களுக்குப் பின்னரோ தோன்றும்.

  4. அடிக்கடி சிறுநீர் கழித்தல்

  சிறுநீர்த்தாரைத் தொற்றோ, அதிகமான சிறுநீர் சேமிப்போ இல்லாதபோதிலும் கர்ப்பிணிகளுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படும். இடுப்புக் கூட்டுப் பகுதியில் ஏற்படும் மாற்றங்களால் சிறுநீர்ப்பையில் தோன்றும் அழற்சிகளே இதற்குக் காரணம். இத்தகைய அறிகுறிகள் கருக்காலத்தின் இரண்டாவது, மூன்றாவது மாதங்களில் ஆரம்பிக்கும். வளரும் கருவானது கருப்பையை அழுத்தி, கருப்பை அருகில் இருக்கும் சிறுநீர்ப்பையையும், அழுத்துவதால் இந்த நிலை உண்டாகி, மாதங்கள் செல்லச் செல்ல இந்தப் பிரச்சினைகள் குறைந்து மறைந்து விடும்.

  5. மார்பகப் பகுதி மாற்றங்கள்

  முதல் முறையாக கர்ப்பம் தரிக்கும்போது மார்பகத்தில் பல்வேறு மாற்றங்கள் உண்டாகின்றன. மார்பகத்தில் உள்ள ரத்த நாளங்களும், மொத்த சுரப்பிகளும் பெரிதாகின்றன. மார்பகக் காம்புகள் நீண்டு, குமிழ்களுடன் பருத்துக் காணப்படும். தொட்டால் வலிக்கும். மார்பகக் காம்புகளில் இருந்து சீம்பால் போல பழுப்பு நிறத்தில் திரவம் சுரக்கும்.
  கர்ப்பக் காலம் தவிர, கருப்பை மற்றும் சினைப்பைகளில் கட்டிகள் ஏற்பட்டிருந்தாலும் மார்பகத்தில் இந்த மாற்றங்கள் தோன்றும். எனவே, மார்பக மாற்றங்களையும் கருத்தரிப்புக்கு அடையாளமாகக் கொள்ள சில வேளைகளில் இயலாமல் போய்விடுகிறது.

   6 .வயிறு பெரிதாகுதல்  


  கருக்குழந்தை உருண்டு திரண்டு வளரும்போது இடுப்புக் கூட்டுக்கு மேல் வயிறு பெரிதாக ஆரம்பிக்கிறது. இந்த நிலையில் குழந்தையின் அங்க அசைவுகள் போன்றவை தெரிய ஆரம்பிக்கும். குறிப்பாக 18 முதல்20-வது வாரங்களில் இந்த அசைவு தெரிய ஆரம்பித்து குழந்தை பிறக்கும்வரை நீடிக்கும்.
  கட்டிகள் இருந்தாலும் வயிறு பெரிதாகி, அசைவு தெரியும் நிலைகளும் உண்டு.
  இந்த கர்ப்பக்கால அறிகுறிகள் சிலருக்கு நோயின் அறிகுறிகளாகவும் இருக்கலாம். அதனால், கரு தரித்திருப்பதை பரிசோதனைகள் மூலம் உறுதி செய்வது அவசியம்.
  அறிகுறிகளை வைத்துக் கர்ப்பத்தைக் கண்டறிவதைவிட, நம்பகமான அறிவியல் முறையான பரிசோதனைகளை மேற்கொள்வதுதான் சிறந்தது.
  பெண் உறுப்பில் ஏற்படும் மாற்றங்கள், கருப்பை வளர்ச்சி, அதன் மிருதுத்தன்மை ஆகியவற்றைக் கொண்டு மருத்துவரால் முதல் முன்று மாதங்களில் கருத்தரித்திருப்பதை உறுதி செய்து கொள்ள முடியும் என்றாலும், சிறுநீர் பரிசோதனை, ஹார்மோன் பரிசோதனை, அல்ட்ரா சவுண்டு பரிசோதனை போன்றவற்றின் முலமே கர்ப்பம் தரித்திருப்பதை நிச்சயமாக உறுதி செய்ய முடியும்.

  அந்த பரிசோதனை முறைகள் :

  1. சிறுநீர்ப் பரிசோதனை

  இந்த பரிசோதனையின்போதே எளிதில் கர்ப்பத்தை உறுதி செய்துவிட முடியும். இந்த பரிசோதனைக்கு தேவையான பெர்க்னன்ஸி டிப் மருந்து கடைகளிலேயே கிடைக்கும். காலையில் விழித்து எழுந்ததும், முதல் சிறுநீரை சுத்தமான பாட்டிலில் பத்திரப்படுத்தி, அதில் ஓரிரு துளிகளை எடுத்து, இந்த டிப்பின் குறிப்பிட்ட பகுதியில் விடவேண்டும். கரு உறுதி செய்யப்பட்டதற்கான அடையாளமும், கரு பதியவில்லை என்பதற்கான அடையாளமும் அந்த டிப்பில் இருக்கும். அதை வைத்து கர்ப்பத்தை உறுதி செய்து கொள்ளலாம்.

  2. ஹார்மோன் பரிசோதனை

  இது இரண்டாவது பரிசோதனை வகை. ஒரு பெண் கருத்தரித்திருந்தால், ஹிமன் கோரியானிக் கொனடோட்ரோபிக் ஆன்டிசீரம் எனப்படும் சோதனை முலம் அறியலாம். காலையில் எழுந்ததும் வெளிவரும் முதல் சிறுநீரைப் பிடித்து இந்த சோதனையை செய்ய வேண்டும். அதில் சிறுசிறு கட்டிகள் கலந்து வந்தால் பெண் கருத்தரிக்கவில்லை என்றும், அவ்வாறு இல்லாமல் இருந்தால் பெண் கருதரித்திருப்பதையும் அறிந்து கொள்ளலாம். இந்த பரிசோதனையின்போது சிறுநீர் கலங்கலாகவோ, ரத்தம் கலந்து வந்தாலோ பரிசோதனை முடிவில் தவறுகள் நிகழவும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதைத் தவிர்ப்பதற்காக அல்ட்ரா சவுண்டு பரிசோதனை முறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

  3. அல்ட்ரா சவுண்டு பரிசோதனை

  மாதவிலக்கு நின்ற ஐந்தாவது வாரத்திலேயே ஒரு பெண் கருவுற்றிருக்கிறாளா இல்லையா என்பதைத் துல்லியமாக இந்த முறையில் கூறிவிடலாம். கருவுற்ற எட்டாவது வாரத்தில் குழந்தையின் இதயம் துடிப்பதையும் இக்கருவியின் முலம் அறிந்து கொள்ளலாம். குழந்தை வளர, வளர அதன் இதயத் துடிப்புகள், வளர்ச்சி போன்ற அனைத்து நிலவரங்களையும் தெரிந்து கொள்ளலாம். பெரும்பாலான மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்டு பரிசோதனையை மேற்கொள்கிறார்கள். ‌

  கர்ப்ப காலம் ஆரோக்கியமாய் அமைய பத்து வழிகள்.

  1. சமவீத உணவை உட்கொள்ளல்:

  பாண், தானிய வகைகள், பழவகைகள், காய்கறி வகைகள், இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை உண்ண வேண்டும்.

  2. போலிக் அமிலம் மாத்திரைகள்:

  நீங்கள் கற்பம் தரிக்க தீர்மானிக்கும் போதிலிருந்து கற்பம் தரித்து பன்னிரண்டாவது வாரம் வரை தினமும் 400 அப மாத்திரையைத் தவறாமல் உட்கொள்ள வேண்டும். முதுகெலும்பில் ஏற்படும் குறைபாட்டைத் தடுக்க போலிக்கமிலம் உதவுவதால் சுகாதார அமைப்புக்களில் இதைச் சிபார்சு செய்து வருகிறார்கள். கீரை வகைகள், புறோக்கோழி, தானியங்கள் சேர்க்கப்பட்ட பாண், தானியங்கள் மற்றும் மாமையிற் போன்ற உணவுகள் போலிக் அமிலம் நிறைந்தவையாகும்.

  3. தவிர்க்க வேண்டிய உணவுப்பொருட்கள்:

  மென்மையான பதப்படுத்தப்படாத பாற்கட்டிகள்(ஸீஸ்), நன்றாக வேகவைக்கப்படாத இறைச்சி, அவிக்கப்படத முட்டை போன்றவற்றை தவிர்ப்பதன் மூலம் லிஸ்டீயா, சால்மனெல்லா போன்ற கிருமிகளால் பரவும் நோய்களைத் தடுக்கலாம். விற்றமின் ஏ மாத்திரைகள் மற்றும் ஈரல் போன்ற விற்றமின் ஏ நிறைந்த உணவுப்பொருட்களை தவிர்ப்பதன் மூலம் குழத்தைக்கு பிறப்பில் ஏற்படும் குநைபாடுகளைத் தடுக்கலாம்.

  4. ஓய்வுக்காக நேரம் ஒதுக்குங்கள்:

  சிறிது நேரமேனும் ஓய்வு எடுக்காமல் வேலை செய்யின் குறைமாதப்பிரசவமாக வாய்ப்பிருக்கிறது. ஆகவே கற்பிணிகள் ஓய்வு எடுப்பது அவசியமாகும். தியானம், யோகாசனம் போன்றவை உங்களுக்கும், உங்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கும் மிகவும் சிறந்ததாகும். தினமும் எளிய உடற்பயிற்கிகளைச் செய்வதன் மூலம் உற்சாகமாக இருப்பதுடன் இலகுவில் பிரவசமாகவும் உதவும். (சிலருக்கு தவிர்க்க முடியாத சில காரணங்களால் உடற்பயிற்சியைத் தவிர்க்கும்படி மருத்துவர் ஆலோசனை கூறி இருப்பின் தவிர்க்கலாம்.)

  5. தவிர்க்கவேண்டிய மருந்துகள்:

  கற்பகாலத்தின் போது மருத்துவரின் ஆலோசனையின்றிக் கடைகளிலே வாங்கி மருந்துகள் ஏதும் உட்கொள்ளக் கூடாது. நீங்கள் நீண்டகால மருந்து உபயோகிப்பவராயின் கற்பம் தரித்துவிட்டதாகத் தெரிந்தவுடனேயே மருத்துவரின் ஆலோசனையைப் பொறுவது மிகவும் அவசியம். போதை மருந்துகளுக்கு அடிமையாய் இருப்பவராயின் உங்கள் குழந்தையையும் அம்மருந்துக்கு அடிமையாக்குவது மட்டுமல்ல அக்குழந்தையின் இறப்புக்கும் காரணமாகிவிடுவீர்கள். எனவே அப்பழக்கம் இருப்பவர்கள் நிறுத்தவேண்டும்.

  6. மருத்துவரை உடனே அணுகவேண்டிய நிலைகள்:

  உங்கள் உடல்நலனைப்பற்றி ஏதேனும் சந்தேகம் ஏற்படினும், யோனிமடல் வழியே குருதி அல்லது நீர் கசிதல், கை கால் முகம் வீக்கம், பார்வையில் ஏதேனும் மாற்றம் அல்லது அதிக ஒளி வீசுவது போன்ற உணர்வு, வயிற்றுவலி அல்லது தலைவலி முதலிய அறிகுறிகள் காணப்படின் உடனே மருத்துவரை அணுகவும்.

  7. டோக்சோ பிளாஸ்மோசிஸ்

  இது ஒரு ஒட்டுண்ணியால் ஏற்படும் நோய். இந்நோய் கற்பகாலங்களில் ஏற்படின் குழந்தைக்குப் பலவகை உடற்கோளாறுகளை ஏற்படுத்தும். இதைத் தவிர்க்க, தோட்ட வேலைகள் செய்யும்போது புனையின் எச்சம் கைகளில் படாமல் இருக்க கை உறைகளை அணியுங்கள். நன்றாக வேகவைக்கப்படாத இறைச்சியினை உண்ணாதீர்கள்.

  8. பரிசோதனை நேரம்:

  கற்பகாலத்தின்போது மருத்துவரும் தாதியும் சில பரிசோதனைகள் செய்வதற்காக உங்களை அழைப்பார்கள். இதற்காக ஒதுக்கப்பட்ட நேரத்தை தவிர்க்காதீர்கள். இப்பரிசோதைனைகள் செய்வதன் மூலம் உங்கள் உடலிலும் உங்கள் குழந்தைக்கு ஏற்படக்கூடிய பல பிர்சனைளக் முற்கூட்டியே கண்டறிந்து நிவர்த்ர்தி செய்ய வாய்ப்பிருக்கின்றது.

  9. மது அருந்துவதைக் குறைக்க வேண்டும்:
  அதிக அளவில் மது அருந்தினால் குழந்தையின் மூளை பாதிக்கப்படும். அதனால் ஒன்று அல்லது இரண்டு அலகளவே (யுனிட்) அனுமதிக்கப்பட்டுள்ளது. (ஒரு யுனிட் என்பது அரை பயின்ட் பீயர் அல்லது ஒரு திராட்சைரசக் கிண்ணம்(வயின்) அளவு என அளவிடப்படும்.

  10. புகை பிடித்தலை தவிர்த்தல்:

  எமது கலாசாரத்திற்கு அப்பாற்பட்டதாயினும் மேலைநாடுகளில் வாழ்ந்து வரும் நாம் இதனையும் கருத்தில் கொள்ள வேண்டும். கற்பம் தரிக்க வேண்டும் என தீர்மானிக்கும் போதே புகை பிடிப்பதை நிறுத்திவிடுவது நன்று. இல்லையேல் குறைப்பது மிகவும் அவசியம். புகைபிடித்தலினால் குழந்தைக்கு ஆபத்து மட்டுமன்றி குறைமாதப்பிரசவம் ஆகவும் வாய்ப்பிருக்கின்றது.

  மேலும் சில துணுக்குகள்:

  • . நீங்கள் எங்கு செல்வதானாலும் உங்கள் கைப்பைக்குள் கற்பகால கையேட்டை எடுத்து செல்ல மறவாதீர்கள். இது ஏதும் பிரச்சனைகள் வந்தால் எந்த ஒரு மருத்துவரும் உங்களுக்கு சிகிச்சை அளிக்க முடியும்.
  • முதல் மூன்று மாதங்கள் வரை அதிகாலையில் வாந்தி வருவது வளக்கமான ஒரு அறிகுறியாகும். வாட்டிய பாண், கிரக்கர் பிஸ்கட், உலர் தானிய வகைகள்(சீரியல்) போன்ற உணவுகளைக் காலையில் எழுந்ததும் முதல் வேலையாக உட்கொண்டால் வாந்தி குறையும். உணவுகளை சிறிய அளவில் அடிக்கடி உண்ணுவதாலும் பொரித்த உணவுப் பதார்த்தங்களை தவிர்ப்பதாலும் வாந்தியைக் கட்டுப்படுத்தலாம்.

  •  நீங்கள் கற்பம் தரித்த நாள் முதல் உங்கள் குழந்தைக்கு ஒரு வயதாகும் வரை உங்களுக்கு மருத்துவச் செலவும் பல் வைத்தியச் செலவும் இலவசமாக அளிக்கப்படும் என்பதை ஞாபகத்தில் வைத்து அதைப் பயனபடுத்தலாம்.
  • சிறு வயதில் ருபெல்லா தடுப்புசி போடப்படாமல் இருப்பின் நீங்கள் கற்பமாக வேண்டும் என தீர்மானிக்கும் முன்னே உங்கள் மருத்துவரை அணு;கி தடுப்புசியைப் பெற்றுவிட்டு கற்பமாவது அவசியம்.

   ஆணின் பங்கு என்ன?

  ஒரு குழந்தையை உருவாக்க ஆணின் பங்கும் அவசியம் என்பது மறுக்க முடியாத உண்மை. இது முழுமை பெற ஆண்களும் பின்வருவனவற்றில் கவனம் செலுத்தவேண்டும்.
  • . நல்ல ஆரோக்கியமான உணவு
  • .புகைபிடிப்பதைத் தவிர்த்தல் - புகை பிடிப்பின் ஆரோக்கியமான அணுக்கள் உருவாகாது.
  • . மது அருந்துவதில் அளவைக் குறைத்தல்
  • 4. இறக்கமான உள்ளாடைகள், அதிக வெப்பமான நீரில் குளித்தல், சில மருந்து வகைகளைத் தவிர்த்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

  கர்ப்ப காலத்தில் ஸ்கேன்.

  • முதலில் ஸ்கேன் என்பது என்ன?
  ஒரு பொருளை, ஒரு உடலை, ஒரு உறுப்பை ஆராய்ந்து பார்ப்பது ஸ்கேன்.  இந்த ஸ்கேனில், அல்ட்ரசவுண்டு ஸ்கேன், சி.டி ஸ்கேன், எம்.ஆர்.அய் ஸ்கேன் என்று பலவகை உண்டு. கர்ப்ப காலத்தில் நாம் உபயோகிப்பது அல்ட்ராசவுண்டு ஸ்கேன் மட்டுமே. மிகவும் அத்தியாவசியமானால் மட்டும் எம்.ஆர்.அய் ஸ்கேன் எடுப்பதுண்டு.

  • ஸ்கேன் எப்படி செய்யப் படுகிறது ?
  ஒலி அலைகள் உடலுக்குள் செலுத்தப்பட்டு  அவை திரும்பிப்பெறப்படுகிறது. கண்ணாடியில் ஒளி பட்டு திரும்பும்போது உருவம் கிடைப்பது போல, அல்ட்ராசவுண்டு ஸ்கேனில் ஒலி அலைகள் உபயோகப்படுத்தபடுகிறது. இவை எக்ஸ்ரே போன்றது கிடையாது. எக்ஸ்ரே கர்ப்பகாலத்தில் முடிந்தவரைக்கும் தவிர்க்கப்படுகிறது. எக்ஸ்ரேயில் தீமைகள் உண்டு. ஆனால் அல்ட்டராசவுண்டு ஸ்கேனில் தீமைகள் கிடையாது.

  • ஸ்கேன் எப்பொழுது எடுக்க வேண்டும்? ஏன் எடுக்கவேண்டும்?

  முதலில் ஏன் எடுக்க வேண்டும் என்று பார்ப்போம்.
  முதல் மூன்று மாதங்களில் பெண் பரிசோதிப்பதின்
  மூலமோ, சிறுநீர்ப்பரிசோதனை மூலமோ, குழந்தை நன்றாக
  இருக்கிறதா, ஒன்றா அல்லது இரண்டா, வளர்ச்சி சரியாக
  இருக்கிறதா? என்ற விஷயங்கள் தெரியாது. இவற்றை
  கண்டுபிடிக்க ஸ்கேன்  அவசியமாகிறது. ஒன்றுமே பிரச்சனை
  இல்லையென்றால், முதல்  கேன்11-14 வாரங்களில்
  எடுக்கலாம். ஆனால் கர்ப்பமாயிருக்கும் பெண்ணிற்கு வயிறு
  வலி அல்லது சிறிது  இரத்தபோக்கு ஏற்பட்டால்
  உடனடியாக ஸ்கேன் எடுக்க வேண்டும். அது 6
  வாரமாயிருந்தலும், 8 வாரமாகயிருந்தாலும்
  பரவாயில்லை.

  முதல் கர்ப்பம் டியூபில் தங்கியிருந்ததாகவோ, அல்லது அபார்ஷன் ஆகியது என்றாலும் அடுத்த கர்ப்பத்தில் சீக்கிரமே (கர்ப்பம் என்று கண்டுபிடித்தவுடனே ) ஸ்கேன் செய்து கொள்வது நல்லது.

  மாதவிடாய் சரியாக மாதாமாதம் வராமல் இரண்டு மூன்று மாதத்திற்கு ஒருமுறை மாதவிடாய் ஆகிறவர்களும் சீக்கிரமே ஸ்கேன் எடுப்பது அவசியம். சீக்கிரமே எடுக்கும் ஸ்கேன் மூலம், டெலிவரி ( பிரசவ ) தேதியை சரியாக குறிக்க முடியும். சீக்கிரமே எடுக்கும் ஸ்கேனால் எந்தபிரச்சனையும் ஆகாது.
  சீக்கிரமே எடுக்கும் ஸ்கேன் வயிறு வழியாக அல்லாமல்,
  பிறப்புறுப்பு (VAGINAL SCAN) வழியாகவும் எடுக்க
  வேண்டி இருக்கலாம். அதனாலும் ஒன்றும் பயமில்லை.
  கர்ப்பத்திற்கு எந்தவிதமான கெடுதலும் ஆகாது.


  சில சமயங்களில் முதல் மாதத்திலேயே இரண்டு, மூன்று
  முறை ஸ்கேன் எடுக்க நேரிடலாம். உதாரணத்திற்கு முதல் முறை பார்க்கும் போது குழந்தையின் இதயத்துடிப்பு தெரியவில்லை என்றால் இரண்டு வாரம் கழித்து பார்க்க வேண்டியிருக்ககும். தொடர்ந்து சிறிது சிறிது இரத்தப்போக்கு  இருந்து கொண்டேயிருந்தால், குழந்தை நன்றாக இருக்கிறதா  என்று ஒவ்வொரு முறையும் ஸ்கேன் எடுக்க வேண்டி  இருக்கலாம். இவ்வாறு ஆரம்பத்திலேயே அடிக்கடி ஸ்கேன் எடுப்பதால் எந்தப் பிரச்சனையும் கிடையாது.

  11முதல்14 வாரங்கள் வரை எடுக்கும்  ஸ்கேனில் குழந்தையின் முழு உருவத்தையும் பார்க்கலாம். தலை, முகம், கால், முதுகெலும்பு, இதயம், வயிறு என எல்லாவற்றையும் பார்க்க முடியும். ஆம் இந்த மாதத்திலேயே எல்லா உறுப்புகளும் வந்து விடும். அதன் பிறகு ஒவ்வொரு உறுப்பும் பெரிதாவதும், வேலை செய்ய முதிர்ச்சிஅடைவதும் நடக்கும். இந்த சமயத்தில் குழந்தையின் கழுத்துக்குப் பின்புறம் இருக்கும் தோலின் தடிமனை அளப்பார்கள். (NUCHEAL THICKNESS). இது அதிகமாக இருந்தால், குழந்தைக்கு சில குறைகள் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். அம்மாதிரி இருந்தால் இன்னும் சில இரத்த பரிசோதனைகள், உள்ளுக்குள் இருக்கும் குழந்தையினுடைய இரத்த பரிசோதனை ஆகியவை செய்ய நேரிடலாம்
  .
  DOWN’S SYNDROME  என்பது மரபணுக்கள் பாதிப்பினால் ஏற்படும் ஒரு நிலை. இதனால் பாதிக்கப்பட்டவர்கள், முகம் சற்று சீனாக்காரர்கள் போல் இருக்கும். கண்கள் குறுகி, மூக்கு சப்பையாக, நாக்கு தடித்து, கழுத்து சிறிதாக, மூளை வளர்ச்சி குறைந்து காணப்படுவார்கள். இந்த நிலையில் குழந்தையின் கழுத்து தோல் (NUCHEAL THICKNESS) தடித்து காணப்படும்.

  • அடுத்து எந்த மாதம் ஸ்கேன் எடுக்க வேண்டும் ?

  20-22 வாரங்களில் எடுக்க வேண்டும்.
  இது மிகவும் முக்கியமான ஸ்கேன். உடல் உறுப்புகள்
  ஒவ்வொன்றையும் நன்றாக ஆராய இது சரியாண தருணம். இதற்கு முந்தைய ஸ்கேனில் உடல் உறுப்புகள் மிகவும் சிறியதாக இருப்பதால் அதனை ஆராய்வது கடினமாக இருக்கும். கடைசி சில வாரங்களில் (பிரசவ தேதி நெருங்கும் சமயத்தில்) எடுக்கும் போது குழந்தை மிகவும் பெரிதாக வளர்ந்து இருக்கும். நீர் குறைவாக இருக்கும். அந்த சமயத்தில் பார்ப்பதும் கஷ்டம்.
  எனவே குழந்தைக்கு ஏதேனும் ஊனம், குறைபாடு இருக்கிறதா
  என்று கண்டறிய 20-22 வாரங்களில் செய்யும் ஸ்கேனே தகுந்தது.
  மேலும்  தீர்க்க முடியாத குறைபாடுகள் உள்ள குழந்தை இருக்கும்
  பட்சத்தில், அபார்ஷன் செய்யவும் இந்த சமயத்தில் முடிய்ம். 20-22
  வாரங்களில் எடுக்கும் ஸ்கேனை TARGETTED SCAN (அதாவது
  குறைபாடுகள் இருக்கிறதா என்பதை குறிப்பாக கவனித்தல்) என்று
  சொல்வார்கள்.

  கர்ப்ப காலத்தில் ஒரே ஒரு ஸ்கேன் தான் என்னால் எடுக்க
  முடியும் என்று யாராவது சொன்னால் அவர்களை இந்த மாதத்தில்
  செய்து கொள்ளச் செய்வது நல்லது. 5 ஆம் மாதத்தில் (20 – 22
  வாரங்களில்)  செய்யும் இந்த ஸ்கேன் மிக முக்கியமானது என்பதால்
  சில விஷயங்களை கவனத்தில் கொள்வது நல்லது. இந்த ஸ்கேனை
  நல்ல பெரிய மெஷின் வைத்து கர்ப்ப ஸ்கேன்கள் அதிகம் செய்யும்
  அனுபவமுள்ள டாக்டரிடம் செய்து கொள்வது நல்லது. கட்டாயம்
  படங்கள், ரிப்போர்ட்டுகள் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்.
  அடுத்த ஸ்கேன் பிரசவ தேதிக்கு அருகாமையில் எடுத்தால் போதும்.

  • இந்த ஸ்கேன் எதற்காக பயன்படும்?

  பிரசவ தேதிக்கு அருகாமையில் எடுக்கும் ஸ்கேன் குழந்தையின்
  தலை கீழே இருக்கிறதா, குழந்தையின் எடை எவ்வளவு,
  குழந்தையின் அசைவுகள் நன்றாக இருக்கிறதா?, குழந்தையைச்
  சுற்றி இருக்கும் நீர் போதுமான அளவு இருக்கிறதா?
  என்பவற்றைச் சொல்லும். இந்தத்தகவல்களை வைத்துக்கொண்டு
  டாக்டர் எவ்வளவு நாள் காத்திருக்கலாம், தானே வலி எடுக்கும்
  வரை பொறுத்திருக்கலாமா?

  ஆபரேஷன் செய்ய வேண்யிருக்குமா என்று முடிவெடுப்பார்கள்.
  சிலசமயங்களில், குழந்தையின் வளர்ச்சி குறைந்திருப்பதாக
  சந்தேகம் வந்தாலோ, நீர் குறைவாக இருக்கிறது என்று
  நினைத்தாலோ, குழந்தையின் அசைவு குறைவாக இருந்தாலோ, எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஸ்கேன் எடுக்க வேண்டி வரலாம்.
  கடைசி வாரங்களில் எடுக்கும் இந்த ஸ்கேனில் குழந்தைக்கு
  குறைபாடுகள் இருந்தால் கண்டுபிடிப்பது கடினம். பிரசவ
  தேதியும் எப்பொழுதுமே முதல் மூன்று மாதங்களில் செய்யும் ஸ்கேன் வைத்து நிர்ணயிக்கப்படுவது தான். கடைசி வாரங்களில் பிரசவ தேதியை மிகச்சரியாக நிர்ணயிக்கமுடியாது.

  ஆகவே ஒவ்வொரு கால கட்டத்தில் எடுக்கும் ஸ்கேனுக்கு ஒவ்வொரு முக்கியத்துவம் உண்டு. ஸ்கேன்  என்பது  நிச்சயமாக  ஒரு  உபயோகமான பரிசோதனை. ஆனால் அது 100 % நம்பகூடியது அல்ல. ஸ்கேன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சி, கண் பார்வை, காது கேட்கும் திறன், சில தோல் வியாதிகள், சில இருதய வியாதிகள் மற்றும் சில வியாதிகளும் கண்டுபிடிக்க முடியாது. பார்க்கும் போது குழந்தை எந்த நிலையில் உள்ளது, என்ன மாதிரி ஸ்கேன் மிஷின் வைத்து பார்க்கிறோம், எந்த கால கட்டத்தில் பார்க்கிறோம் என்பதை பொறுத்து ரிசல்ட் மாறலாம்.

  க‌ர்‌ப்ப கால ‌பிர‌ச்‌சினைக‌ள்...

  • க‌ர்‌ப்ப கால‌த்‌தி‌லவரு‌ம் ‌பிர‌ச்‌சினைக‌ளல... அ‌தி‌லஒரு ‌சிஒரு ‌சிலரு‌க்கம‌ட்டுமஏ‌‌ற்படு‌ம். பொதுவாஏ‌ற்படு‌மமச‌க்ககூஒரு ‌சிலரு‌க்கஇரு‌க்காது.

  • ஒரு ‌சிபெ‌ண்க‌ளமச‌க்கஎ‌ன்பதை ‌எ‌ன்னவெ‌ன்றதெ‌ரியாம‌லஇரு‌ப்பா‌ர்க‌ள். எ‌ப்போது‌மபோ‌லசா‌ப்‌பி‌‌ட்டு‌ககொ‌ண்டஇரு‌ப்பா‌ர்க‌ள். வா‌ந்‌தி ‌பிர‌‌ச்‌சினையு‌மஇரு‌க்காது.
  • . மச‌க்கை‌யிலு‌மஒரு ‌சிலரு‌க்கஅ‌திக‌ப்படியாவா‌ந்‌தி, மய‌க்க‌மஏ‌ற்படு‌ம். ஒரு ‌சில‌ரு‌க்கஎ‌ப்போதாவதவா‌ந்‌தி ஏ‌ற்படு‌ம்.

  • அதுபோ‌ல் கருவுற்ற இரண்டாவது மூன்றாவது மாதங்களில், வளரும் கருப்பை உண்டாக்கும் அழுத்தம் மற்றும் சிறுநீர்ப்பைகளின் உள்ளடுக்கில் ஏற்படும் அழு‌த்த‌த்‌தி‌ன் காரணமாக அடி‌க்கடி ‌சிறு‌நீ‌ர் வருவது போ‌ன்ற உண‌ர்வு ஏ‌ற்படு‌ம். அதுபோ‌ல் அடி‌க்கடி ‌சிறு‌நீ‌ர் க‌ழி‌‌க்கு‌ம் ‌நிலை ஏ‌ற்படு‌ம்.
  •  ‌ஒரு ‌சில க‌ர்‌ப்‌‌பி‌ணிகளு‌க்கு க‌ர்‌ப்ப கால‌த்‌தி‌ல்‌ ‌சிறு‌நீ‌ர் தொ‌ற்று‌ம் ஏ‌ற்பட வா‌ய்‌ப்பு உ‌ள்ளது. இது உடலுற‌வி‌ன் மூலமாகவோ அ‌ல்ல‌து ‌பிற‌ப்புறு‌ப்புக‌ள் சு‌த்த‌மி‌ன்‌றி இரு‌ப்பதாலோ ஏ‌ற்படலா‌ம். ‌சிறு‌நீ‌ர் தொ‌ற்று ஏ‌ற்ப‌ட்டா‌ல், ‌சிறு‌நீ‌ர் க‌ழி‌க்கு‌ம்போது வ‌லி அ‌ல்லது எ‌ரி‌ச்ச‌ல் ஏ‌ற்படும். வ‌யி‌ற்‌றி‌ன் இர‌ண்டு ப‌க்க‌ங்க‌ளிலு‌ம் வ‌லி ஏ‌ற்படு
  • . ‌சிறு‌நீ‌ர் தொ‌ற்று ‌‌தீ‌விரமடை‌ந்தா‌ல் கடுமையான கு‌ளி‌ர் கா‌ய்‌‌ச்ச‌ல் போ‌ன்றவை ஏ‌ற்பட‌க்கூடு‌ம். இதனை‌த் தடு‌க்க க‌ர்‌பி‌ணிக‌ள் உடலுறு‌ப்புகளை சு‌த்தமாக வை‌த்து‌க் கொ‌ள்வது‌ம், அ‌திகமாக த‌ண்‌ணீ‌ர் அரு‌ந்துவது‌ம் அவ‌சியமா‌கிறது.
  •  ஆ‌ங்‌கில‌த்‌தி‌ல் மா‌ர்‌னி‌ங் ‌சி‌‌க் எ‌ன்று சொ‌ல்லுவா‌ர்க‌ள். அதாவது க‌‌ர்‌ப்ப கால‌த்‌தி‌ல் காலை வேலை‌யி‌ல் அ‌திகமான மய‌க்க ‌நிலை இரு‌க்கு‌ம். ‌சில நேர‌ங்க‌ளி‌ல் ‌தீ‌விரமான தூ‌க்க‌ம் ஆ‌க்ர‌மி‌க்கு‌ம். எ‌ந்த வேலை செ‌ய்து கொ‌ண்டிரு‌ந்தாலு‌ம் எ‌ல்லாவ‌ற்றையு‌ம் ஒது‌க்‌கி‌வி‌ட்டு தூ‌ங்க செ‌ன்று ‌விடுவா‌‌ர்க‌ள். 

  • க‌ர்‌ப்‌பி‌ணிகளு‌க்கு நூ‌ற்‌றி‌ல் ஒருவரு‌க்கு தோ‌ல் அ‌ரி‌ப்பு‌ப் ‌பிர‌‌ச்‌சினை உருவாகு‌ம் எ‌‌ன்பது பலரு‌க்கு‌ம் தெ‌ரியாது. தோ‌ல் முழுவது‌ம் ‌சிறு ‌சிறு கொ‌ப்புள‌ங்க‌ள் போல ஒ‌ன்‌றிர‌ண்டு தோ‌ன்‌றி அது உட‌ல் முழுவது‌ம் பர‌வி ‌மிகவு‌ம் ‌சிரம‌ப்படு‌த்து‌ம். இது நூ‌ற்‌றி‌ல் ஒருவரு‌க்கு‌த்தா‌ன் வரு‌ம் எ‌ன்பதுதா‌ன் கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
  •  ‌சில மரு‌‌த்துவ குண‌ம் வா‌ய்‌ந்த சோ‌ப்புகளு‌ம், ஆ‌யி‌ல்மெ‌ன்‌ட்டுகளு‌ம் பலன‌ளி‌க்கு‌ம்.

  •  க‌ர்‌ப்‌பி‌ணிக‌ள் பலரு‌க்கு‌ம் க‌ர்‌ப்ப கால‌ம் முதலே ச‌ளி‌ ‌பிடி‌ப்பது வழ‌‌க்கமா‌கி உ‌ள்ளது. கு‌ளி‌ர் த‌ன்மை கொ‌ண்ட பழ‌ங்க‌ள், கு‌ளி‌ர்‌ச்‌சியான பொரு‌ட்களை அ‌திக‌ம் சா‌ப்‌பிடாம‌ல் த‌வி‌ர்‌ப்பது ச‌ளி‌‌த் தொ‌ல்லை‌யி‌ல் இரு‌ந்து ‌விடுபட உதவு‌ம்.

  குழந்தை பெற்றுக்கொள்ள 6 விஷயங்கள்

  ஒரு பெண்ணின் வாழ்வில் மிகப் பெரிய விஷயம், குழந்தை பெறுவது. திருமணத்தை விடவும் சவாலான அதேநேரம் திருப்தி அளிக்கும் விஷயம். திருமணமான ஒரு பெண் கர்ப்பம் தரிப்பது முதல் குழந்தை பெறும் வரை அதை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டும். அதற்கான 6 படிகள்...
  • ஆரோக்கியமாக இருங்கள்
  முதலில், கர்ப்பம் தரிக்க விரும்பும் பெண் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். தமது மகப்பேறு மருத்துவரைப் போய் பார்த்து, கர்ப்பம் தரிப்பதற்கு ஏற்றவகையில் தனது உடல்நிலை உள்ளதா என்று அறிந்துகொள்ள வேண்டும். நோய்த் தொற்று ஏதும் இருக்கிறதா, எடை, ரத்த அழுத்தம் சரியான அளவில் உள்ளதா என்று அறிந்துகொள்வது அவசியம்.
  • சரியான விதத்தில் சாப்பிடுங்கள்
  மகப்பேறுக்குத் தயாராகும் பெண் நாக்குக்குச் சுவையான உணவுகளைக் கொஞ்சம் தள்ளிவைத்து, ஆரோக்கியம் காக்கும், சத்துகள் செறிந்த உணவுகளைச் சாப்பிடுவதில் கவனம் செலுத்த வேண்டும். பிரசவத்துக்கு முன்பும் பின்பும் நிறைய பழங்கள், பச்சைக் காய்கறிகள், முழுத் தானிய உணவுகள், புரதச் சத்து மிக்க உணவுகள் ஆகியவற்றைச் சாப்பிடுவது அவசியம். கால்சியம், இரும்பு சத்துகளும், வைட்டமின்களும் அத்தியாவசியமானவை.
  • தீய பழக்கங்கள் கூடாது
  புகைத்தல், மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்கள் கூடவே கூடாது. அதேநேரம் உடற்பயிற்சியில் கவனம் செலுத்த வேண்டும். அது உங்களின் எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைப்பதுடன், கர்ப்பம் தரிப்பதால் ஏற்படும் மாற்றங்களில் இருந்தும் உடம்பைக் காக்கும். சுறுசுறுப்பான ஒரு நடை அல்லது சிறுபயிற்சி, மகிழ்ச்சி ஹார்மோன் எனப்படும் எண்டார்பினை வெளியிடச் செய்து உங்களின் மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
  • சரியான நேரம்
  ஒரு சராசரிப் பெண் தனது வாழ்நாளில் 400 கருமுட்டைகளை வெளியிடுகிறார். ஒரு பெண் மகப்பேறுக்கு மிகவும் வாய்ப்பான நாட்களை அறியவேண்டும். பிசுபிசுப்பான திரவ சுரப்பைக் கொண்டும் ஒரு பெண் அதை அறியலாம். பெண்களின் உடல் கருமுட்டையை வெளியிடும் முன் உயிரணுவை வரவேற்கும் விதமாக அதற்கேற்ற சூழலை உருவாக்குகிறது. அவற்றில் ஒன்றுதான், உயிரணு பயணத்துக்கு ஏற்ற வகையிலான திரவ சுரப்பு. அது ஒட்டக்கூடியதாகவோ, பசை போலவோ, கிரீம் போலவோ இருக்கலாம். கர்ப்பம் தரிக்கும் திறன் உச்சத்தில் இருக்கும்போது அது முட்டைவெள்ளை நிறத்தில் இருக்கும்.
  • பாலியல் அறிவு அவசியம்
  படுக்கையறை உறவு என்பது எந்த நிர்ப்பந்தங்கள் இல்லாததாகவும், ஓர் இன்ப விளையாட்டாகவும் இருக்க வேண்டும். உறவுக்குப் பின் உடனே எழுந்து விட வேண்டாம். உறவுக்குப் பின் சிறிதுநேரம் அப்படியே மல்லாந்து கிடப்பது கர்ப்பம் தரிக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்று பாலியல் நிபுணர்கள் கூறுகின்றனர். குறைந்தபட்சம் ஐந்து நிமிடங்கள் அப்படிப் படுத்திருந்தால் போதும். உயிரணு கருமுட்டையைத் தேடி அடைய அது உதவும்.
  • உணர்வு ரீதியாகத் தயாராகுங்கள்
  கர்ப்பம் தரிக்கும் பெண் உடல் ரீதியாக மட்டுமின்றி, உணர்வுரீதியாகவும் அதற்குத் தயாராக வேண்டும். தனது முழுக்கவனத்தையும் மகப்பேறில் செலுத்தியாக வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு குழந்தையைப் பெற்று வளர்ப்பது என்பது கடினமும், பொறுப்பும் சேர்ந்த வேலை என்பதை உணர வேண்டும். குழந்தையைப் பெற்று வளர்ப்பதில் கணவரை விட மனைவிக்குப் பொறுப்புகளும் அதிகம். உடல்ரீதியாகவும், உளரீதியாகவும் அவர் சவால்களை எதிர்கொள்ள நேரும் என்பதைப் புரிந்துகொண்டு நடக்க வேண்டும்.