நவராத்திரி வழிபாட்டு முறை

 •  முதலாம் நாள் :-
சக்தித்தாயை முதல்நாளில் சாமுண்டியாக கருதி வழிபடவேண்டும். தெத்துப்பல் திருவாயும், முண்டமாலையும் அணிந்தவள். முண்டன் என்ற அசுரனை சம்ஹாரம் செய்த சக்தி அவள். இதனால் சாமுண்டா எனவும் அழைப்பர். இவள் மிகவும் கோபக்காரி. நீதியைக்காக்கவே இவள் கோபமாக உள்ளாள்.
முதல்நாள் நைவேத்தியம் :-சர்க்கரைப் பொங்கல்.
 • . இரண்டாம் நாள் :-
இரண்டாம் நாளில் அன்னையை வராஹி தேவியாக கருதி வழிபட வேண்டும். வராஹ(பன்றி) முகமும் தெத்துபற்களும் உடையவள். சூலமும் உலக்கையும் ஆயுதங்கள் ஆகும். பெரிய சக்கரத்தை தாங்கியிருப்பவள். தனது தெத்து பற்களால் பூமியை தூக்கியிருப்பவள். இவளிற்கு மங்கள மய நாராயணி, தண்டினி, பகளாமுகி போன்ற திருநாமங்களும் உண்டு. இவள் அன்னையின் சேனாதிபதி ஆவாள்.
இரண்டாம் நாள் நைவேத்தியம் :- தயிர்ச்சாதம்.
 •  மூன்றாம் நாள் :-
மூன்றாம் நாளில் சக்தித்தாயை இந்திராணியாக வழிபடவேண்டும். இவளை மாஹேந்தரி, சாம்ராஜ தாயினி என்றும் அழைப்பர். இவள் இந்திரனின் சக்தி ஆவாள். கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை
அழித்தவள். தேவலோகத்தை பரிபாலனம் செயபவளும் இவளேயாகும். பெரிய பெரிய பதவிகளை அடையவிரும்புபவர்களிற்கு இவளின் அருட்பார்வை வேண்டும்.
மூன்றாம் நாள் நைவேத்தியம் :- வெண்பொங்கல்.
 • . நான்காம் நாள் :-
சக்தித்தாயை இன்று வை~;ணவி தேவியாக வழிபடவேண்டும். சங்கு, சக்கரம், கதை, வில் ஆகியவற்றை கொண்டிருப்பவள். தீயவற்றை சம்ஹரிப்பவள். இவளின் வாகனம் கருடன்.
நான்காம் நாள் நைவேத்தியம் :- எலுமிச்சை சாதம்.
 •  ஐந்தாம் நாள் :-

ஐந்தாம் நாளில் அன்னையை மகேஸ்வரி தேவியாக வழிபட வேண்டும். அன்னை மகேஸ்வரனின் சக்தியாவாள். திரிசூலம், பிறைச்சந்திரன், பாம்பு தரித்து இடப வாகனத்தில் எழுந்தருளியிருப்பவள். அளக்கமுடியாத பெரும் சரீரம் உடையவள். சர்வ மங்களம் தருபவள். தர்மத்தின் திருவுருவம். கடின உழைப்பாளிகள் உழைப்பின் முழுப்பலனை பெற அன்னையின் அருள் அவசியம் வேண்டும்.
ஐந்தாம் நாள் நைவேத்தியம் :- புளியோதரை.
 • ஆறாம் நாள் :-
இன்று அன்னையை கவுமாரி தேவியாக வழிபடவேண்டும். மயில் வாகனமும் சேவல் கொடியும் உடையவள். தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரமானவள். ஓங்கார சொரூபமானவள். சகல பாவங்களையும் விலக்கிடுபவள். வீரத்தை தருபவள்.
 ஆறாம் நாள் நைவேத்தியம் :- தேங்காய்ச்சாதம்.
 •  ஏழாம் நாள் :-
ஏழாம்நாள் அன்னையை மகாலட்சுமியாக வழிபடவேண்டும். கையில் ஜெபமாலை, கோடரி, கதை, அம்பு வில், கத்தி, கேடயம், சூலம், பாசம், தண்டாயுதம், சக்தி ஆயுதம், வஜ்ராயுதம், சங்கு, சக்கரம், மணி, மதுக்கலயம், தாமரை, கமண்டலம் ஆகியவற்றைக் கொண்டிருப்பவள். வீ~;ணு பத்தினியாவாள். பவளம் போன்ற சிவந்த நிறத்தையுடையவள். தாமரை ஆசனத்தில் அமர்ந்து சகல ஐசவரியங்களையும் தருபவள் அன்னையாகும்.
ஏழாம் நாள் நைவேத்தியம் :- கல்க்கண்டுச் சாதம்.
 •  எட்டாம் நாள் :-

இன்று அன்னையை நரசிம்ஹி ஆக வழிபடவேண்டும். மனித உடலும், சிம்ம தலையும் உடையவள். கூரிய நகங்களுடன் சங்கு, சக்கர தாரிணியாக சிம்ம வாகனத்தில் காட்சி தருபவள். சத்ருக்கள் தொல்லையில் இருந்து விடுபட அன்னையின் அருள்வேண்டும்.
எட்டாம் நாள் நைவேத்தியம் :- சர்க்கரைப் பொங்கல்.
 •  ஒன்பதாம் நாள் :-
இன்று அன்னையை ப்ராஹ்மி ஆக வழிபடவேண்டும். அன்ன வாகனத்தில் இருப்பவள். வாக்கிற்கு அதிபதியாவாள். ஞானசொரூபமானவள். கல்விச்செல்வம் பெற அன்னையின் அருள் அவசியமாகும்.
ஒன்பதாம் நாள் நைவேத்தியம் :- அக்கர வடசல்.


  இந்த வருடம் நவராத்திரி விரதம் 28 – 09 – 2011 புதன் கிழமை ஆரம்பமாகிறது. அதற்கு முதல் நாளான 27 –09 – 2011 செவ்வாய் கிழமை காலை 10.30 – 11.30 மணிக்குள்ளான நல்ல நேரத்தில் கொலு வைக்க சிறந்த நேரமாகும். பின்னர் விஜயதசமியன்று 06– 10 – 2011  வியாழக்கிழமை   பூசை முடித்த பின்னர் கொலு பொம்மைகளை படுக்க வைத்து விட வேண்டும். மறுநாள் காலையில் அதாவது 07 – 10 – 2011 வெள்ளிக்கிழமை அன்று காலையில் கொலுவை எடுத்து விடலாம்.

நவராத்திரி கொலு

நவராத்திரி என்பது முப்பெருந்தேவியர்களான துர்கா(பார்வதி), லெக்ஷ்மி, சரஸ்வதி ஆகிய தெய்வங்களைப் போற்றிக் கொண்டாடப்படும் விழா என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் இந்த “தசரா” பண்டிகையை வெவ்வேறு முறைகளில் கொண்டாடி வருகிறார்கள். தமிழ்நாட்டில், படிகளில் பொம்மைகள் வைத்து, பூஜைகள் செய்து நவராத்திரியைக் கொண்டாடுவது வழக்கம். புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை அன்று மறுநாள் நவராத்திரி விழா தொடங்கும். 

அமாவாசை அன்றே கொலு வைக்கத் தேவையான படிகளைத் தயார் செய்து, அதற்கு மேல் வெள்ளைத் துணி விரித்து பொம்மைகள் அடுக்கி பூஜைக்கு தயார் நிலையில் வைத்து விடுவார்கள். ஒன்பது படிகள் வைப்பது முறையாகும், ஆனால் அவரவர்கள் வசதிக்கேற்ப ஐந்து, ஏழு, ஒன்பது என்று படிகளை வைத்துக் கொள்ளலாம்

நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். 
ஆன்மரீதியாக மனிதன் தம்மை படிப்படியாக உயர்த்திக்கொண்டு இறுதியில் இறைவனில் கலக்க வேண்டும். இதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை தத்துவம். இதை விளக்கும் பொருட்டே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம். ஒன்பது படிகள் வைத்து ஒவ்வொரு படியிலும் பின்வருமாறு பொம்மைகளை வைத்து வழிபட வேண்டும்.

கொலுவில் முக்கியமானது கலசம். தங்கக் கலசமாய் வைத்தால் கொலு பார்ப்பதற்கும் அழகாயிருக்கும்! நிஜத்தங்கம் இப்போது வாங்குகிற விலை இல்லை ஆகவே தங்கம் போல மினுக்கும் சம்கிகளைக் கொண்டு செய்யலாம். சிறிய ப்ளா‌ஸ்டி குடம் வாங்குங்கள் சொம்பு சைசில் கடைகளில் இது கிடைக்கும்.. ப்ளா‌ஸ்டிக் மாவிலை 5 நல்ல பச்சை நிறத்தில் வாங்கிக்கொள்ளுங்கள்.

தங்க நிற சம்கிகள் சிறு இலை வடிவில் கிடைக்கும் இதை குண்டூசியால் குடம் முழுவதும் நெருக்கமாய் குத்தி விடுங்கள்.குடத்தின் வாய்பகுதிக்கு வெள்ளி நிற லே‌ஸ் கிடைக்கும். அதை குடத்தின் வாய் அளவுக்கு கத்திரித்து பெவிகால் தடவி ஒட்டிவிடுங்கள். மாவிலைகளை குடத்தின் மேல் செருகி விட்டு ஒரு தேங்காயை நடுவில் வையுங்கள்.


 • முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
 • இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
 •  மூன்றாவது படியில் மூவறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
 • நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
 •  ஐந்தாவது படியில் ஐயறிவு கொண்ட நாற்கால் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
 • ஆறாவது படியில் ஆறறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
 • ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
 •  எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்.
 •  ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.

கொலுவிற்கு 4 நாட்கள் முன்னதாகவே தோட்டத்திலோ தொட்டியிலோ கேழ்வரகு கடுகு தெளித்து வையுங்கள். இவை முதல் நாள் கொலுவுக்கு செழித்து வளர்ந்திருக்கும். அந்தப் பயிர்களை அப்படியே தாய்மண்ணோடு எடுங்கள். பழைய அட்டைகளை முக்கோண அ‌ல்லது சதுர அ‌ல்லது செவ்வக வடிவில் கத்திரித்து வளர்ந்த பயிர்களை அதன் மீது சீராக வையுங்கள். இரண்டொரு நாளில் அவை மேலும் வளர்ந்து புது‌ப் பொலிவினைத்தரும்!


பார்க் அமைக்கும் போது உபயோகித்த கொசு மேட்களை தரையில் வைத்தால் ப்ளாட்பார்ம் போல தெரியும். உலர்த்திய காபிப்பொடியால் தார்சாலை நடுவில் அமைக்கலாம்.


சிறு ப்ளா‌‌ஸ்டிக் கிண்ணங்களில் மண்ணை நிரப்பி அதில் வீட்டுத் தோட்டத்தில் வளரும் சிறு செடிகளையோ அல்லது கொத்தாய் புற்களையோ வைத்து பார்க்கில் இயற்கையான தொட்டி செடிகள் செய்யலாம் அவ்வப்போது நீர் தெளித்தால் போதும் இவை பசுமையாய் இருக்கும்.
பு‌த்தக‌த்‌தி‌ன் அ‌ட்டை‌ப் ப‌க்க‌த்‌தி‌ல் வரும் பெரிய கோபுரப் படங்களை அப்படியே கட் செய்து அட்டையில் கவனமாய் ஒட்டி கொலு முகப்பில் fவைக்கலாம்.

கொலுவிற்கு வருபவர்களுக்குக் கொடுக்கும் வெற்றிலை, பாக்கு, மஞ்சள், ஒரு ரூபாய் நாணயம் போன்றவற்றை சிறு கவரில் போட்டு வைத்து விட்டால் தனித்தனியாய் தேட வேண்டிய அவசியம் இருக்காது.

நவராத்திரி விரதம்

அம்பாளுக்குரிய பண்டிகைகள் எவ்வளவோ இருந்தாளும்,
அவற்றுள் முக்கியமானது ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும்
மிகச் சிறப்பு வாய்ந்த நவராத்திரி விழாதான்.முக்கியமாக பார்க்கபோனால் ஒரு வருஷத்தில் நான்கு நவராத்திரிகள் உண்டு
அவற்றில் புரட்டாசி மாதம் அமாவாசை அடுத்த நாள் வரும் நவராத்திரியை எல்லோரும் கொண்டாடுகிறார்கள். ஆஷாட நவராத்திரி ஆடி மாதத்தில் வரும் நவராத்திரியாகும். புரட்டாசி மாதத்தில் சரத்காலம் என்று கூறுவர்.
இந்த சரத்காலத்தில் வரும் நவராத்திரியை சாரதா நவராத்திரி சிறப்பாக
கொண்டாடுவார்கள். இந்த ஒன்பது நாட்களுடன் ஒரு நாளைச் கூடுதலாகச் சேர்த்து தசராகக் கொண்டாடப்படுகிறது. தசம் என்றால் பத்து அத்துடன் ஒரு இரவைச் சேர்த்து (தச+ரா) பத்துநாள் திருவிழாவாக கொண்டாடுகிறார்கள். இந்த பண்டிகை மைசூரிலுள்ள சாமுண்டேஸ்வரி அம்பிகைக்கு சிறப்பாக விழா கொண்டாடப்படுகிறது.
சரத் காலத்தின் முக்கிய மாதமாகிய புரட்டாசி மாதத்தின் வளர் பிறையில் பிரதமை
திதியில் ஆரம்பித்து ஒன்பது திதியுடன் பத்தாவது திதியான தசமி திதியடன் நிறைவுபெறுகிறது நவராத்திரி விழா.
நவராத்திரி விழா இரவு நேரத்தில் தான் பூஜை செய்யப்படும். இந்த பூஜை
தேவர்கள் செய்யப்படுவதாக கருதப்பட்டு இரவில் நாவராத்திரியை வழிபடுவார்கள்.
சக்தி வழிபாட்டுகுரிய விரதங்களில் வெள்ளிக்கிழமை விரதம், பெளர்ணமி விரதம், நவராத்திரி விரதம் என்பன மிகவும் முக்கியமானவை.
நவராத்திரி என்பது விரமிருந்து கொண்டாடப்படுகிறது.
சிவராத்திரி: வழிபடத் தகுந்த ஒரு ராத்திரி சிவராத்திரி. சக்தியை வழிபடத் தகுந்த ஒன்பது ராத்திரி நவராத்திரி. நவம் என்பது ஒன்பது.
வீட்டில் பத்து நாட்கள் கொண்டாடப்படும் விழாவாக நவராத்திரி,
தவிர வேறு விரத விழா இல்லை. வீட்டில் கொண்டாடப்படும் இந்த விழா வீடு
என்ற கோயிலுக்கு ஒரு’பிரம்மோற்சவம்’ என்று கூட சொல்லாம்.
சித்திரை, புரட்டாசி ஆகிய இரண்டு மாதங்களை யமனது கோரப் பற்கள்
என்று சொல்வார்கள். பிணிகள் உடலை துன்புறுத்தி,பிணித்து நலியும்படி செய்யும். சாதாரமாக, உயிரும் உடலும் தாங்கவே முடியாத பல துன்பங்களை இறைவன் அருள்வதில்லை. துன்பங்கள் உடலுக்கு ஏற்படும்போது, அவற்றிலிருந்து போக்குவாய் சக்தி வழிபாடு.
நவராத்திரி வழிபாடு பெண்களுக்கே உரியது. எல்லா வயதுடைய, பருவத்தைச்
சார்ந்த பெண்கள் நவராத்திரி வழிபாட்டில் ஈடுபடலாம். நவராத்திரி வழிபாட்டால் பெண் குழந்தைகள் பெறுவது மகிழ்ச்சியின் பயன். கன்னிகள் பெறுவது திருமணப் பயன். சுமங்கலிகள் பெறுவது மாங்கலயப் பயன். மூத்த சுமங்கலிகள் பெறுவது மனமகிழ்ச்சி, மன நிறைவு; எல்லோரும் பெறுவது பரிபூரண திருப்தி.புரட்டாசி மாத வளர்பிறைப் பிரதமையில் தொடங்கி விஜயதசமியில் நவராத்திரி முடிகிறது. முதல் ஒன்பது நாட்களில் முப்பெரும் தேவியரைவழிபடவேண்டும்.
முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் வழிபாடு.
இடை மூன்று நாட்கள் லட்சுமி வழிபாடு.
இடை மூன்று நாட்கள் சரஸ்வதி வழிபாடு.
துர்க்கை : இவள் நெருப்பின் அழகு. ஆவேசப் பார்வை. வீரத்தின் தெய்வம். சிவபிரியை. இச்சா சக்தி. ”கொற்றவை ” , ”காளி” என்றும் குறிப்பிடுவர். வீரர்களின் தொடக்கத்திலும், முடிவிலும் வழிப்படும் தெய்வம். துர்க்கை, மகிஷன் என்ற அசுரனுடன் ஒன்பது இரவுகள் போரிட்டாள். இவையே ‘ நவராத்திரி ‘ எனப்படும்.
அவனை வதைத்த பத்தாம் நாள் ‘ விஜயதசமி

நவதுர்க்கை: வன துர்க்கை, சூலினி துர்க்கை , ஜாதவே தோதுர்க்கை, ஜ்வாலா துர்க்கை, சாந்தி துர்க்கை சபரி துர்க்கை, தீப் துர்க்கை, சூரி துர்க்கை லவண துர்க்கை . இவர்கள் துர்க்கையின் அம்சங்கள்.

இலட்சுமி : இவள் மலரின் அழகு. அருள் பார்வையுடன் அழகாக விளங்குகிறாள். செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி.
இலட்சுமி அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள்.
பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் வீற்றிருக்கிறாள்.
இவளை நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது.
முக்கியமாக, இவள் செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள்.
இவளுக்குத் தனிக் கோயில் இருக்குமிடம் திருப்பதியிலுள்ள திருச்சானூர்.
அஷ்ட இலட்சுமி : ஆதி லட்சுமி, மாக இலட்சுமி, தன இலட்சுமி, தானிய இலட்சுமி , சந்தான இலட்சுமி, வீர இலட்சுமி, விஜய இலட்சுமி , கஜ இலட்சுமி .
இவர்கள் இலட்சுமியின் அம்சங்கள்.

சரஸ்வதி : இவள் வைரத்தின் அழகு. அமைதிப் பார்வையுடன் அழகாகப் பிரகாசிக்கிறாள். கல்வியின் தெய்வம். பிரம்பிரியை. ஞான சக்தி.
தமிழ் நூல்கள் சரஸ்வதியை, ‘ற்றங்கரைச் சொற்கிழத்தி ‘
என்று குறிப்பிடுகிறது.
இவளுக்குத் தனி கோயில் இருக்குமிடம் ஊர் கூத்தனூர். கம்பருக்காக கொட்டிக் கிழங்கு விற்றவள்.சரஸ்வதி பூஜை : நவராத்திரியின் ஆறாவது, ஏழாவது நாளில் மூல நட்சத்திரம் உச்சமாக இருக்கும்போது, சரஸ்வதியை வாகனம் செய்வது முறையாகும். இது தேவியின் அவதார நாள்.

சரஸ்வதி பூஜை சிரவணம் என்ற நட்சத்திரம் உச்சமாகும் நாளில் நிறைவு
பெறுகிறது. சிரவணம் – திருவோணம் அன்றே விஜயதசமி.
சமுதாயத்தில் தொழில் , புலமை என்ற இரண்டே பிரிவுகளில் அடங்குகிறது.
ஒன்று புலமை ஞானம், இரண்டு தொழில் ஞானம். புலமை பெறுவதும் ஒரு தொழில்தான். இது ஞானத்துடன் தொடர்புடையது.
எனவே, ஞானத்தின் தெய்வமான சரஸ்வதியைப் பூஜிப்பது சரஸ்வதி பூஜை.
நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை
மகா நவமி என்றும் குறிப்பிடுவது வழக்கம். இவை மேலான நாட்களாகும்.
விஜய தசமி: ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி , பத்தாம் நாள்
அவனை வென்றாள். இந்நாளே விஜயதசமி – வெற்றி தருகிற நாள்.
பல குழந்தைகள் கல்வியினை இன்றுதான் ஆரம்பிப்பார்கள். இன்று தொடங்கும் அனைத்து
நற்காரியங்களும் வெற்றி தரும்.

அஷ்ட சரஸ்வதி: வாகீஸ்வரி, சித்ரேஸ்வரி, துளஜா, கீர்த்தீஸ்வரி, அந்தரிட்ச சரஸ்வதி, கடசரஸ்வதி, நீலசரஸ்வதி, கினி சரஸ்வதிஒன்பது சக்திகள்: முப்பெரும் சக்திகளில், ஒவ்வொரு சக்திக்கும் மும்மூன்று அம்சங்கள்
சிறப்பாக உள்ளன.
வீடுகளில் கொலுவைத்தல் நவராத்திரியின் விசேஷ அம்சமாகும். படிப்படியாக அமைக்கப்பட்ட விசேஷமான பீடங்களில் அல்லது மாடிப்படிகளில் விதவிதமான பொம்மைகள் வைத்து இக் கொலு அலங்கரிக்கப்படுகிறது. 5, 7 என்ற ஒற்றைப்படையாகப் படிகளின் எண்ணிக்கையை வைத்து கொலு அமைக்கப்படுகிறது. அருகிலேயே கும்பம் வைத்து சுவாமிப்படங்களையும் மாட்டி அணையா விளக்குகள் ஏற்றி ஒன்பது நாட்களும் விதவிதமான பட்சணங்களை நைவேந்தியம் செய்து பூஜிப்பது முறை.

சுமங்கலிப் பெண்களை இவ்விரத நாட்களில் வீட்டுக்கு அழைத்து அவர்களைப் பராசக்தியாகப் பாவித்துக் கொலுவின் அருகில் அமரச் செய்து வணங்கி
மஞ்சள், குங்குமம், பட்டு, நாணயம், தாம்பூலம் என்பவற்றை வழங்குவர்.

நவராத்திரியின் ஒன்பதாம் நாளாகிய மஹாநவமியன்று சரஸ்வி பூஜை அல்லது கலைமகள் விழா அல்லது ஆயுத பூஜை என்றும் சிறப்பாக கூறுவர். புத்தகங்கள் சரஸ்வதி தேவியின் உறைவிடம், கலைப் பொருட்கள், இசைக்கருவிகள், தொழிற்கருவிகள் முதலிய ஆயுதங்களுக்கும் அதிபதி அவளே. அதனால் மஹாநவமி அதாவது 9வது நாள் இவற்றை பூஜையில் வைத்து வழிபடுவர். அது மட்டுமல்லாமல் அத்தினத்தில் அவற்றை பயன்படுத்துவதும் தவிர்க்கப்படுகிறது.

நவராத்திரி காலத்தில் எண்ணெய் தேய்த்து முழுகுதல் விலக்கப்பட்டுள்ளது. ஊசிநூல்கொண்டு தைத்தலும் கூடாது. புரட்டாசி சனி விரதம் இந்த நவராத்திரி நாளினுல் வரும்போது எண்ணெய் தேய்காது நீராடி அந்த விரதத்தையும் கைகொள்ளலாம். எண்ணெய எரித்து வழிபடுதலும் செய்யலாம்.

நவராத்திரி விரதத்தை முறையாகக் கைக்கொள்ள விரும்புவோர் முதலெட்டு நாட்களிலும் பகலில் உணவின்றி இரவில் பூஜை முடித்தபின் பால்பழம், பலகாரம் என்பவற்றை உண்டு, நவமியில் உபவாசமிருந்து பத்தாம் நாள் விஜயதசமியன்று காலை எட்டரை மணிக்கு முன் பாரணை செய்தல் வேண்டும். முடியாதவர்கள் முதலெட்டு நாளிலும் ஒரு நேர உணவுண்டு, கடைசி நாளில் பால் பழம் மட்டும் கொள்ளலாம்.


விஜய தசமியன்று காலை அறுசுவை உண்டி சமைத்து அதனை நிவேதித்து விசேஷ பூஜை செய்த பின்நாட்படிப்பு நாட்கருமங்களை ஆரம்பித்த பின் பாரணை செய்வது முறையாகும்.

ஷஷ்டி விரதம்

                                கந்த ஷஷ்டி விரத மகிமை


எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள்.
 
முருகனுக்குரிய மூன்று விரதங்களில் (செவ்வாய்க்கிழமை விரதம், கார்த்திகை விரதம், ஷஷ்டி விரதம்) மிகச் சிறந்தது ஸ்கந்த ஷஷ்டி விரதமாகும். ஐப்பசி மாதத்துத் தீபாவளி அமாவாசையை அடுத்த வளர்பிறைப் பிரதமை முதல் ஷஷ்டி ஈறாகவுள்ள ஆறு நாட்கள் ஸ்கந்த ஷஷ்டி விரதம் அனுசரிக்கப்படுகிறது. மாதம் தோறும் ஷஷ்டி திதியிலும் விரதம் இருக்கலாம்.
இவ்விரதம் உடலையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தும் மகத்தான விரதமாகும்.
முதல் நாள் அமாவாசை முதல் தொடர்ந்து ஆறுநாட்களும் அனுசரிக்கப்படும் இவ்விரதத்தில் சிலர் மூன்று வேளையும் உண்ணா நோன்பு இருப்பர். சிலர் பகல் மட்டும் விரதம் இருந்து இரவில் பால், பழம் உண்டு விரதம் மேற் கொள்வர். விரத நன்னாளில் தர்ப்பை அணிந்து சங்கல்பம் செய்துகொண்டு ஆறு நாட்களும் முழு உபவாச விரதமிருந்து இறுதி நாளில் தர்ப்பையை அவிழ்த்து தாம்பூலத் தட்சணையுடன் அர்ச்சகரிடம் அளித்து விரதத்தை நிறைவு செய்பவர்களும் உண்டு. இவர்களில் பலர் முருகன் ஆலயத்திலேயே தங்கி விரதம் இருப்பர். உண்ணா நோன்பு மட்டுமல்லாமல் மௌன விரதம் இருப்போர்களும் உள்ளனர்.

விரத காலத்தில் முருக நாம ஜெபம், கந்த புராணம் படித்தல் நற்பலன் அளிக்கும். ஆறாம் நாள் கந்தஷஷ்டி அன்று துயிலாமல் விழித்திருந்து முருகன் பெருமைகளை நினைந்தும், பேசியும் வழிபடுதல் சிறப்பு. முழு உபவாசம் இருக்க முடியாதவர்கள், கந்த ஷஷ்டி தினத்தில் மட்டுமாவது உபவாசம் இருத்தல் நன்மையைத் தரும். ஏழாம் நாளன்று நீராடி, முருகனை வழிபட்டு வெல்லமும், பச்சைப் பயறும் கலந்து களி செய்து உண்டு விரதத்தை முடிக்கலாம். ஆறு நாள்களும் கந்த புராணத்தை முழுமையாகப் படிக்கலாம். கந்தர் ஷஷ்டிக் கவசம், ஸ்கந்த குரு கவசம், ஷண்முக கவசம் இவற்றைப் பாராயணம் செய்யலாம். திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், கந்தர் கலிவெண்பா, வேல் மாறல் பதிகம், திருவடித் துதி முதலியவற்றைப் பாராயணம் செய்தலும் சிறப்பு தரும். ஆதிசங்கரர் அருளிய சுப்ரமண்ய புஜங்கத்தை உள்ளன்போடு பாராயணம் செய்ய எண்ணிய காரியம் வெற்றி பெறும்
சஷ்டியில் ஷண்முகன் தரிசனம் !

ஆறு என்ற எண், முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது. அவனது திருமுகங்கள் ஆறு, கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன்; அவனது மந்திரம் ஆறெழுத்து - நம: குமாராய அல்லது சரவண பவ; அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள், அவனுக்குரிய விரத நாட்களில் சஷ்டி விரதம், மஹா ஸ்கந்த சஷ்டியின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் என இப்படியாகப் பல விஷயங்கள் ஆறுமுகனுடன் தொடர்புடையன.

சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம் நாள். இதற்கு சஷ்டி திதி என்று பெயர். இத்திதிக்கு நாயகனாகவும், இத்திதியைக் குறித்த விரதத்துக்கு முக்கிய தெய்வமாகவும் விளங்குபவன் குகப் பெருமான். சுப்ரமண்யருடைய மாலா மந்திரத்தில், சஷ்டி ப்ரியாய என்னும் மந்திரம் இடம் பெறுகிறது. சஷ்டி எனும் திதியில் விருப்பமுள்ளவன் என்றும், சஷ்டிதேவியை விரும்புபவன் என்றும் இதற்குப் பொருள். ஒரு நாளைக்கு உரிய ஆறுகால வழிபாடுகளுள் ஆறாவதாக விளங்குவது அர்த்தஜாம பூஜையாகும். பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலம் சிதம்பரம், அங்கு உஷத் காலத்தில் பெருமானின் கலைகள் எல்லாம் எல்லாத் தலங்களுக்கும் சென்று தெய்வப் பொலிவூட்டுகின்றன என்றும், அர்த்தஜாம காலத்தில் ஆயிரம் கலைகளும் பெருமானிடம் ஒடுங்குகின்றன என்றும், எனவே எல்லாத் தலங்களையும் சென்று தரிசிக்கும் புண்ணியத்தை, சிதம்பரத்தில் அர்த்தஜாமத்தில் வழிபடுவதால் பெற முடியும் என்று சிதம்பர மஹாத்மியம் குறிப்பிடப்படுகிறது. சஷ்டிபதி என்றால் இந்த வேளையில் (அர்த்தஜாமத்தில்) செய்யப்பெறும் வழிபாட்டில் மிகவும் விருப்பம் கொள்பவன் என்றும் பொருள். திருவிடைக்கழி திருத்தலத்தில், குரா மரத்தடியில் முருகன் பூஜித்த பத்ரலிங்கத்துக்கு, தினமும் அர்த்தஜாமத்தில் முதலில் பூஜை நடைபெற்று, பின்னரே, மூலஸ்தானத்தில் வழிபாடு செய்வர்.

சண்முக தத்துவம் என்ன ?


ஒரு முகம் - மஹாவிஷ்ணுவுக்கு,
இரு முகம் - அக்னிக்கு,
மூன்று முகம் - தத்தாத்ரேயருக்கு,

நான்முகம் - பிரம்மனுக்கு,
ஐந்து முகம் - சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்ப கணபதிக்கு
ஆறு முகம் - கந்தனுக்கு.சத்ரு சம்ஹாரத்திற்கு ஒரு முகம்
முக்தி அளிக்க ஒரு முகம்
ஞானம் அருள ஒரு முகம்
அக்ஞானம் அழிக்க ஒரு முகம்
சக்தியுடன் இணைந்து அருள ஒரு முகம்
பக்தர்களுக்கு அருள ஒரு முகம்.

 
ஸரவணபவ - என்பது ஷடாக்ஷர மஹாமந்திரம் (6 எழுத்துகள்). இதன் மகிமை என்ன ?
ஸ - லக்ஷ்மிகடாக்ஷம்
ர - ஸரஸ்வதி கடாக்ஷம்
வ - போகம் - மோக்ஷம்
ண - சத்ருஜயம்
ப - ம்ருத்யுஜயம்

வ - நோயற்ற வாழ்வு
ஆக, பிரணவ ஷடாக்ஷரம் கூறி இவ்வாறு பயன்களும் பெறலாம். நம: சிவாய என்பது பஞ்சாக்ஷரம். ஓம் நம: சிவாய என்பது ஷடாக்ஷரம் நம: குமாராய என்பதும் ஷடாக்ஷரம் ஓம் நம: கார்த்தகேயாய என்பது குஹ அஷ்டாக்ஷரம்  ஓம் நம; குருகுஹாய என்பதும் குஹ அஷ்டாக்ஷரம். ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதரின் முத்திரை அடி குருகுஹ. இதய குகையில் அமர்ந்து அஞ்ஞானம் அழித்து ஞானம் அளிக்கும் வள்ளல் குகன்.


ஓம் நம: ஸரவணபவாய என்பது ம்
குஹ தசாக்ஷரம்.
ஓம் நம ஸரவணபவ நம ஓம் என்பது குஹ த்வாதசாக்ஷரம்

துளசியின் சிறப்பு

எத்தனை வகைப்பூக்கள் இருந்தாலும், துளசி செடி இல்லாவிட்டால் அது நந்தவனம் ஆகாது.
 • துளசி மட்டுமிருந்தால் கூட அது சிறந்த நந்தவனமாகிவிடும்.
 •  துளசி படர்ந்த இடம் பிருந்தாவனமாகும். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தை.
 • துளசி மாலை அணிந்தோ, துளசி மாலையை கையில் பிடித்தோ பூஜிப்பவர்களுக்கு, 1000 அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
 •  மரண காலத்தில் துளசி தீர்த்தம் அருந்துபவர்களை பெருமாள் தன்னுடன் சேர்த்து கொள்கிறார்.
 •  பவுர்ணமி, அமாவாசை, சஷ்டி, தீட்டு காலங்கள், துவாதசி, மாதப்பிறப்பு, உச்சி வேளை, இரவு வேளை, எண்ணை தேய்த்து   கொண்டு துளசி பறிக்க கூடாது.
 •  அதிகாலைப்பொழுதும், சனிக்கிழமைகளிலும் விரல் நகம் படாமல் விஷ்ணு பெயரை உச்சரித்து கொண்டு துளசி பறிக்க வேண்டும்.
 •  துளசி பறித்த 3 நாள் வரை உபயோகப்படுத்தலாம்.
 •  விரதநாள், மூதாதையரின் திதி நாள், தெய்வ பிரதிஷ்டை நாள், இறைவனை வணங்கும் வேளை, தானம் செய்யும் போது ஆகிய     இடங்களில் துளசி பயன்படுத்துவதால் அந்த செயல் பரிபூரண பலன் கொடுக்கும்.
 • துளசியின் வேறு பெயர்கள்
துளசியின் மந்திரப்பெயர்கள் பிருந்தா, பிருந்தாவனி,விஸ்வபாவனி, புஷ்பசாரை, நந்தினி, கிருஷ்ணஜீவனி, பிருந்தாவனி, விஸ்வபூஜிதா.
துளசியின் நதி ரூபப்பெயர் கண்டகி.
துளசியின் தாவரப்பெயர் சேக்ரட் பேசில் பிளான்ட்.
துளசியின் கணவன் பெயர் சங்க சூடன்.
 சங்காபிஷேகத்தில் துளசி

சங்கு, துளசி, சாளக்கிராமம் (புண்ணிய நதிகளில் கிடைக்கும் கல் வடிவ சிலை) மூன்றையும் ஒன்றாக பூஜிப்பவர்களுக்கு மஹாஞானியாகும் பாக்கியமும், முக்காலமும் உணரும் சக்தியும் கிடைக்கும் என்பது ஐதீகம். சங்கில் தீர்த்தம் நிரப்பி துளசி மேல் வைத்து சங்காபிஷேகம் செய்வது மிகவும் சிறந்தது. சிவபெருமானுக்கு பிடித்த அபிஷேகங்களில் உயர்ந்தது சங்காபிஷேகம்.

 துளசியின் கதை

கிருஷ்ணாவதாரத்தில் மகாவிஷ்ணுவின் அம்சமாக சுதர்மரும், லட்சுமியின் அம்சமாக ராதையும் அவதாரம் செய்கிறார்கள். இவர்களிருவரும் கிருஷ்ணனை அதிகம் நேசிக்கிறார்கள். ஒரு முறை ராதை சுதர்மர் மீது கோபம் கொண்டு சாபமிடுகிறார். இதனால் சுதாமர் சங்கசூடன் என்ற வேறொரு பிறப்பு எடுக்க வேண்டியதாயிற்று. அதேபோல் ராதையும் மாதவி என பிறப்பெடுக்கிறாள். மாதவியின் மகள் தான் துளசி. சங்கசூடனும், துளசியும் திருமணம் செய்து கொள்கிறார்கள். பின் கிருஷ்ணரால் துளசியின் ஆயுள் காலமும், சிவனால் சங்கசூடனின் ஆயுளும் முடிவடைந்தது. இதனால் சங்கசூடன் விஷ்ணுவுடனும், துளசி மகாலட்சுமியுடனும் மீண்டும் கலந்து விட்டார்கள். இதனாலேயே துளசியும் சங்கும் இருக்குமிடத்தில் பெருமாளும், லட்சுமியும் வாசம் செய்வதாக கூறப்படுகிறது.

 உண்மையான பக்தி

கிருஷ்ண பகவான் பாமா, ருக்மணி இருவர் மீதும் சமமாக அன்பு வைத்திருந்தார். இதில் ருக்மணி கிருஷ்ணன் மீது அளவில்லாத அன்பும், ஆழமான பக்தியும் கொண்டிருந்தாள். அத்துடன் கிருஷ்ணனை தன் மனதில் வைத்து எப்போதும் பூஜித்து வந்தாள். ஆனால் பாமாவோ, விஷ்ணு தன்னை மார்பில் சுமந்திருப்பதாலும், கண்ணனுக்கு தேரோட்டியாக இருந்ததாலும், தனது திருமணத்தின் போது ஏராளமான செல்வம் கொண்டு வந்தாலும் நாரதரின் உதவியோடு கண்ணனை தனக்கே உரிமையாக்கிகொள்ள நினைத்தாள். இதற்காக கண்ணனை, துலாபார தராசு தட்டின் ஒரு புறமும், மற்றொரு தட்டில் தனது செல்வம் முழுவதையும் வைத்தாள். ஆனால் தராசு சமமாகவில்லை. அப்போது அங்கு வந்த ருக்மணி, கண்ணனுக்காக கொடுக்க தன்னிடம் ஒன்றுமில்லையே என வருந்தி, கண்ணனுக்கு பிடித்த துளசி இலை ஒன்றை தராசு தட்டில் வைத்த போது தராசு சமமாகியது. கண்ணன் புன்முறுவலுடன், நான் இப்போது யாருக்கு சொந்தமானவன் என்பது உங்களுக்கே புரிந்திருக்கும். நான், எனது என்ற அகந்தையை ஒழித்து, உண்மையான பக்தியுடன் என்னை சரணடைபவருக்கே நான் சொந்தம், என்றார். தனது அகந்தை நீங்கிய நிலையில் கண்ணனின் பாதத்தில் விழுந்து மன்னிப்பு கேட்ட பாமா, அந்த துளசி இலையை தன் தலையில் சூடிக்கொண்டாள்.

அட்சய திருதி

ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியை திதி சிறப்பு வாய்ந்தது. சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் திருதியைதான் அட்சய திருதியை எனப்படுகிறது. இந்த ஆண்டில் அட்சய திருதி மே  மாதம் 5 , 6 ம்  தேதி வருகிறது. அட்சயம் என்றால் வளருதல், அள்ள அள்ளக் குறையாமல் வளர்ந்துகொண்டே இருத்தல். அட்சய பாத்திரம் என்பதுபோல. அன்றைய தினம் செய்கிற எந்த காரியமும் வளர்ந்துகொண்டே இருக்கும், வெற்றிகரமாக நடந்து முடியும் என்பது வேத வாக்கு. 
         நாம் எது செய்தாலும் அதை ஒன்று பல மடங்காக பெருக்கி நமக்கு வளமும் நலமும் சேர்க்கும் திருநாள்தான் அட்சய திருதியை. இந்த நன்னாளில் தங்க நகை, ஆடை, அணிகலன்கள், ஆடம்பர பொருட்கள்தான் வாங்க வேண்டும் என்று இல்லை. அது சமீப ஆண்டுகளில் ஏற்பட்ட, ஏற்படுத்தப்பட்ட வழக்கம்தான். வீட்டுக்கு தேவையான அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள், மங்கள காரியங்களுக்கு தேவையான பொருட்கள், புதிய தொழில், வியாபாரத்துக்கு தேவையான கருவிகள், சாதனங்கள் என எது வேண்டுமானாலும் வாங்கலாம். அனைத்து சுப காரியங்களுக்கும் இந்த நன்னாளில் பிள்ளையார்சுழி போடலாம். புதுக்கணக்கு ஆரம்பித்தல், வங்கியில் பணம் செலுத்துதல், கல்வி துவக்கம், விரதம் ஆரம்பித்தல், புகழ்பெற்ற கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வருதல். சொந்த பந்தங்கள், நண்பர்கள், அக்கம்பக்கத்தினருக்கு விருந்து, பரிசு அளித்து உறவு பாராட்டுதல், கஷ்டப்படுவோருக்கு உதவிகள் செய்தல், அன்னதானம், தானதர்மங்கள் செய்தல் இன்னும் விசேஷம். இதில் முக்கியமாக நோயாளிகளுக்கு உதவுவது மிகச் சிறந்த தர்மமாக சொல்லப்பட்டுள்ளது. இல்லாதோர், இயலாதோருக்கு அவர்கள் தேவையறிந்து செய்யும் உதவிகள் உத்தமமான பலன்களை தரும். ‘பிறருக்கு ஒருவன் கொடுப்பதெல்லாம் தனக்கே கொடுத்துக் கொள்கிறான்’ என்று சிறப்பித்து கூறுகிறது ரமண வாக்கியம்.


             அட்சய திருதியை பற்றிய புராணக் கதைகளும் உண்டு. பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பால்ய நண்பர் குலேசன் வறுமையில் வாடுகிறார். உதவிகள் கேட்டு வரலாம் என்று அவரை சந்திக்க ஒரு பிடி அவலை மேலாடையில் முடிந்துகொண்டு புறப்படுகிறார். அவரை நன்கு உபசரித்த கிருஷ்ண பரமாத்மா அவர் அன்போடு கொண்டுவந்த அவலை ஆசையோடு வாயில் எடுத்துப் போடுகிறார். நட்பு, அன்பு கலந்த அவலின் ருசியில் மகிழ்ந்துபோன கிருஷ்ணன், “அட்சயம் உண்டாகட்டும்” என்று வாழ்த்தி அனுப்புகிறார். இன்னொரு கவளம் அவல் தின்னவிடாமல் கிருஷ்ணனை தடுக்கிறாள்

லட்சுமியின் அம்சமான ருக்மணி. காரணம் கேட்கிறார் கிருஷ்ணன். “அன்புடன் கொடுத்த அவலை ஒரு பிடி தின்றதற்கே குசேலனின் குடிசை வீட்டை மாட மாளிகையாக மாற்றி சகல ஐஸ்வர்யங்களையும் வழங்கிவிட்டீர்கள். இனியும் ஒரு பிடி தின்றால் லட்சுமி தேவியான நானே குலேசன் வீட்டுக்கு போய்விட வேண்டியதுதான்” என்கிறாள். குலேசன் கேட்காமலேயே அவருக்கு அனைத்து ஐஸ்வர்யங்களையும் செல்வச் செழிப்பையும் கொடுத்து அருளியவன் கண்ணன். வீடு திரும்பிய பிறகுதான் இவை அனைத்தும் குசேலனுக்கு தெரியவருகிறது. கண்ணனின் அன்பை நினைத்து வியக்கிறார். அவருக்கு எல்லா ஐஸ்வர்யங்களும் கிடைத்த தினமே அட்சய திருதியை.

       கவுரவர்கள் சபையில் திரவுபதியின் துகிலுரியப்பட்டபோது ஆடைகளாக அள்ளி வழங்கி கண்ணன் அருள்பாலித்ததும் இந்த நாளே என்கிறது வியாச புராணம். அப்போதும் “அட்சய” என்று சொல்லியே ஆடைகளை பெருக்கெடுக்கச் செய்துள்ளார் கண்ணன். மதுரை மீனாட்சி  சுந்தரேஸ்வரர் திருமணம் நடந்த நாள், தசாவதாரங்களில் பரசுராமர் அவதரித்தது, திரவுபதிக்கு சூரியன் அட்சய பாத்திரம் அளித்த நாள், சிவனுக்கு காசி அன்னபூரணி அன்னபிட்சை அளித்த நாள், ஐஸ்வர்ய லட்சுமி அவதரித்த நாள், சங்க நிதி, பத்ம நிதி ஆகிய நிதிகளை குபேரன் பெற்ற நாள், மகாவிஷ்ணுவின் வல மார்பினில் மகாலட்சுமி இடம்பிடித்த நாள் என அட்சய திருதியைக்கு பல்வேறு பெருமைகள் கூறப்படுகின்றன.

            ஸ்ரீ என்பது லட்சுமியை குறிக்கும், வைகுண்டத்தில் மகாலட்சுமியாக, பாற்கடலில் ஸ்ரீதேவியாக, இந்திரனுடைய இடத்தில் சுவர்க்க லட்சுமியாக, அரசர்களிடத்தில் ராஜலட்சுமியாக, குடும்பத்தில் கிரக லட்சுமியாக, வீரர்களிடத்தில் தைரிய லட்சுமியாக, பசுக்களிடத்தில் காமதேனுவாக சகல யோகங்களை வாரி வழங்கும் ஆதார சக்தியான லட்சுமி தேவிக்கு உகந்த நாளாக அட்சய திருதியை கருதப்படுகிறது. இந்நாளில் லட்சுமி குபேர பூஜை செய்வது மிகவும் சிறப்பானது.

வேறு என்ன செய்யலாம்?

தீராத வியாதியுள்ளவர்கள் ஆல இலையை தலையணைக்கு அடியில் வைத்து தங்களுக்கு தெரிந்த மந்திரம் அல்லது நாம ஜெபம் செய்து படுப்பதால் வியாதிகள் தீரும். கைக்குழந்தை முதல் 6 வயது குழந்தைகள் படுக்கும் தலையணையின் அடியில் ஆல இலையை வைப்பதால் திருஷ்டி, பாலாரிஷ்ட தோஷங்கள் கழியும். சகல தடங்கல், தடைகள், இடர்ப்பாடுகள், எதிர்ப்புகளையும் அழித்து வளமும் நலமும் தரும் மிருத்யுஞ்ஜய மந்திர ஹோமத்தை வீட்டில் செய்யலாம். வாழ்வு வளம் பெற தங்கம், வெள்ளி, ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். ஆடை தானம் தருவதால் சுகபோக வாழ்வு கிட்டும், தயிர் சாதம் தானம் செய்வதால் ஆயுள், ஆரோக்கியம் கூடும். இனிப்பு வழங்குவதால் திருமணத் தடை நீங்கும். அரிசி, பருப்பு, தானியங்கள் தருவதால் விபத்துக்கள் நேராமல் இறைவன் காத்தருளுவார். பசுக்கள், பட்சிகள், நாய்களுக்கு உணவளிப்பதால் மன அமைதி, செல்வ வளம் ஏற்படும். தர்ம குணம் மேலோங்கும்

கணபதி ஹோமம்

கணபதி ஹோமத்தின் முக்கியத்துவம்


ஹோமங்களில் பல வகை உண்டு. அதில் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்பு பலன் இருக்கிறது. பொதுவாக ஹோமங்களை விளை நிலங்களில்தான் நடத்த வேண்டும். அப்படித்தான் பழங்காலத்தில் நடத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக செங்கரும்பு, செவ்வாழை விளைந்த நிலத்தில் ஒரு பகுதியை ஒதுக்கி, பசுவைக் கொண்டு சுத்தப்படுத்தி (அதாவது பசுவை வலம் வரச் செய்தல்), அதன் பின்னர் யாக குண்டம் அமைத்து ஹோமம் செய்வதுதான் முறையானது.
தற்போது சிமெண்ட் அல்லது டைல்ஸ் தரையின் மீது வீடு கட்டுவதற்கு பயன்படுத்தும் மணலைப் பரப்பில், செங்கற்களை அடுக்கி பெயருக்கு ஹோமம் செய்கின்றனர். 
புது வீடு அல்லது அலுவலகத்திற்காக குடிபுகும் போது கணபதி ஹோமம் செய்ய வேண்டும்
வினைகளை தீர்க்கக் கூடியவர் விநாயகர் என்பது ஐதீகம். விநாயகர் உருவமற்றவர். இதற்குக் காரணம் மஞ்சளைப் பிடித்து வைத்து கூட விநாயகராக வணங்கலாம். பழங்காலத்தில் பசும் சாணத்தை விநாயகராகப் பிடித்து வழிபட்டுள்ளனர். பசுவின் சாணத்தை தேவப்பிரசாதம் என்று பழைய நூல்கள் கூறுகின்றன.
நிலத்தில் படாமல் புல், செடி கொடிகளின் மேல் விழும் காராம்பசுவின் சாணத்தை பஸ்பமாக்கி, அதனை நெற்றியில் விபூதி போல் பூசினால் அது நோய்களைத் தீர்க்கும் மருந்தாக விளங்கும் எனக் கூறப்பட்டுள்ளது. சைனஸ், சளித் தொந்தரவுகளுக்கு இது நல்ல பலனை அளிக்கும்.
கிரகப் பிரவேசத்தின் போது, வெற்றிலையின் மேல் பசுஞ்சாணத்தைப் பிள்ளையாராகப் பிடித்து வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் இட்டு, விநாயகர் அகவலைப் பாடி, தாராளமாக கிரஹப் பிரவேசம் செய்யலாம். எனவே, கணபதி ஹோமம் செய்து விட்டுதான் கிரஹப் பிரவேசம் செய்ய வேண்டும் என்பதெல்லாம் கிடையாது.
விநாயகரை மனதார வழிபட்டாலே முழுமையான பலன்களை எதிர்பார்க்கலாம். கணபதி ஹோமம் செய்யவில்லை என்பதால் பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. எந்த ஒரு காரியமாக இருந்தாலும் விநாயகரை வணங்கி விட்டுத் துவங்க வேண்டும். அதற்கு இதெல்லாம் எளிய முறைகள்.
நல்ல முகூர்த்த தினத்தில் கணபதி ஹோமம் செய்ய குருக்கள் கிடைக்கவில்லை என்றால், மேற்கூறிய முறைகளைப் பின்பற்றி விநாயகரை வணங்கலாம். புதிய வீட்டில் குடிபுகுந்த பின்னர் 2 அல்லது 3 மாதம் கழித்து கணபதி ஹோமம் செய்தாலும் தவறில்லை.
எனவே, பசுவின் சாணத்தையும், அருகம்புல்லையும் விநாயகராகப் பிடித்து, தெரிந்த விநாயகர் மந்திரங்களை சொல்லி வழிபட்ட பின்னர் பால் காய்ச்சி குடிபுகுந்தாலும் எந்த பாதிப்பும் வராது.

வெந்தயத்தின் மருத்துவக்குணம்


வெந்தயத்தை வறுத்து பொடி செய்து 1 டம்ளர் நீரில் ஊற வைத்து உட்கொள்ள வயிற்று வலி, வயிற்றுப் பொருமல், சுரம், உட்சூடு, வெள்ளை, சீதக்கழிச்சல் முதலியவைகள் போகும்.


வெந்தயம் 17 கி எடுத்து 340 கி பச்சரிசியுடன் சேர்த்து சமைத்து உப்பிட்டுச் சாப்பிட குருதி பெருகும். 


கஞ்சியில் வெந்தயத்தைச் சேர்த்து காய்ச்சிக் கொடுக்க பால் சுரக்கும்.
வெந்தயத்தை ஒரு கைப்பிடியளவு எடுத்து ஊற வைத்து தலை முழுகிவர முடி வளரும். அது முடி உதிர்ந்து போவதைத் தடுக்கும்.
வெந்தயத்தை உலர்த்தி பொடி செய்து மாவாக்கிக் களி கிண்டிக் கட்ட புண், பூச்சி நோய்களைப் போக்கும்.


வெந்தயத்தை வறுத்து இத்துடன் வறுத்த கோதுமையைச் சேர்த்து காப்பிக்குப் பதிலாக வழங்கலாம் இதனால் உடல் வெப்பம் நீங்கும்.


வெந்தய லேகியம்: வெந்தயம், மிளகு, திப்பிலி, பெருங்காயம் இவற்றை சமஅளவு எடுத்து உலர்த்தி நன்றாக வறுத்துப் பொடி செய்து சர்க்கரைப் பாகில் போட்டு இலேகியமாகச் செய்து சாப்பிட சீதக்கழிச்சல், வெள்ளை, மேல் எரிச்சல், குருதியழல், தலைகனம், எலும்பைப் பற்றிய சுரம் தீரும்.
நீர் வேட்கை இளைப்பு நோய், கொடிய இருமல் இவைகளை விலக்கும். ஆண்மை தரும்.


வெந்தயம், கடுகு, பெருங்காயம், கறிமஞ்சள் இவைகளை சமபாகம் எடுத்து நெய் விட்டு வறுத்து பொடி செய்து சோற்றுடன் கலந்துண்ண வயிற்றுவலி, பொருமல், வலப்பாடு இடப்பாட்டீரல் வீக்கங்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வரும்.


மிளகாய், கடுகு, வெந்தயம், துவரம்பருப்பு, பெருங்காயம், கருவேப்பிலை இவைகளைத் தக்க அளவு எடுத்து நெய்விட்டு வறுத்து புளிக்குழம்பை இதில் கொட்டி உப்பு சேர்த்து சட்டியிலிட்டு அரைப்பாகம் சுண்டிய பின் இறக்கி சூட்டுடன் சாப்பிட வெப்பத்தால் நேரிடும் சிற்சிலப் பிணிகள் தணியும்.


இத்துடன் வாதுமை பருப்பு, கசகசா, கோதுமை நெய், பால், சர்க்கரை சேர்த்து கிண்டி உட்கொள்ள உடல் வலுக்கும். வன்மையுண்டாகும். இடுப்பு வலி தீரும்.


வெந்தயத்தை, சீமை அத்திப்பழம் சேர்த்தரைத்து கட்டிகளின் மீது பற்றுப்போட அவைகள் உடையும். படைகள் மீது பூச அவைகள் மாறும்.
வெந்தயத்தை, சீமைப்புளி, அத்திப்பழம், திராட்சை ஒரே எடையாகச் சேர்த்து குடிநீரிட்டு தேன் சிறிது கலந்து சாப்பிட இதயவலி, மூச்சடைப்பு இவை போகும்.


வெந்தயத்தை வேக வைத்து தேன் விட்டுக்கடைந்து உட்கொள்ள மலத்தை வெளியேற்றும். இது மார்புவலி, இருமல், மூலம், உட்புண் இவைகளைப் போக்கும்.

கிராம்பு மருத்துவ குணங்கள்


கிராம்பில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின், வைட்டமின் சி மற்றும் ஏ போன்றவை உள்ளன. கிராம்பின் மொட்டு, இலை,தண்டு போன்றவற்றிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது.
 •  கிராம்பில் பலவித மருத்துவ குணங்கள் உள்ளன. இவை பெரும்பாலும் ஊக்கு வித்தல், தூண்டுதல் உண்டாக்கும் பொருளாக உள்ளது. பல வலிகளைப் போக்கு வதுடன் வயிற்றுப் பொருமல், குதவழிக் காற்றேhட்டம் போன்றவற்றுக்கும் மிகச் சிறந்த நிவாரணி.
 • உடலைப் பருமடையச் செய்யவும், வளர்ச்சிதை மாற்றப்பணிகளுக்கு உதவவும், சுட்டை சமப்படுத்தவும், ரத்த ஓட்டத்தை முறைப்படுத்தவும் இது பலன் அளிக்கிறது.
 •  ஜீரண உறுப்புகளில் சுரக்கும் நொதிகளை கிராம்பு ஊக்குவிக்கிறது. இதனால் ஜீரணக்கோளாறுகள் நீங்குகின்றன.
 • கிராம்புப் பொடியை வறுத்து அரை கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டால் வாந்தி நிற்கும். கிராம்பில் உள்ள விறைக்கப் பண்ணும் ஒரு பொருள் வயிற்றிலுள்ள சில உறுப்புகளை விரைப்படையச் செய்து வாந்தியைத் தடுக்கிறது.
 • * நான்கு கிராம் கிராம்பை மூன்று லிட்டர் தண்ணீரில் போட்டு அரை பங்காக சுண்டும் அளவிற்கு கொதிக்க வைத்துப் பருகினால் காலரா குணமடையும்.
 •  சிறிது சமையல் உப்புடன் கிராம்பை சப்பிச் சாப்பிட்டால் தொண்டை எரிச்சல், கரகரப்பு நீங்கி தொண்டை சரியாகும். தொண்டை அடைப்பால் ஏற்படும் எரிச்சலைத் தவிர்க்க, சுட்ட கிராம்பு மிகச் சிறந்தது.
 • முப்பது மில்லி நீரில் ஆறு கிராம்புகளைப் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தில் தேன் கலந்து குடித்தால் ஆஸ்துமா கட்டுப்படும்.
 • * கிராம்புப் பொடியை பற்பொடியுடன் கலந்து பயன்படுத்தி வர, வாய் நாற்றம், ஈறு வீக்கம், பல்வலி ஆகியவை குணமாகும். கிராம்பு எண்ணெயை பாதிக்கப்பட்ட ஈறுகளில் தடவிவர குணம் கிடைக்கும்.
 • * 3-5 துளி நல்லெண்ணெயில் ஒரு கிராம்பை சூடு காட்டி அந்த எண்ணெயை வலியுள்ள காதில் இட்டால் சுகம் கிடைக்கும்.
 •  தசைப்பிடிப்புள்ள இடத்தில் கிராம்பு எண் ணெயைத் தடவி வர குணம் கிடைக்கும்.
 •  கிராம்பு மற்றும் உப்பை பசும்பாலில் அரைத்து அந்தப் பசையைத் தடவினால் தலைவலி பறந்துவிடும். தலையிலுள்ள நீரை உப்பு உறிஞ்சி எடுப்பதால் தலைபாரம் குறைந்து குணம் கிடைக்கிறது.
 •  கண் இமைகளில் ஏற்படக்கூடிய அழற்சிகளை போக்க கிராம்பை நீரில் உரசி அந்த நீரைப் பயன்படுத்தினால் குணம் கிடைக்கும்.
 • சமையலுக்கும், கறிகளுக்குச் சுவையூட்டவும், கறி மசாலா வகைகள் தயாரிக்கவும் கிராம்பு முக்கியம். வாசனைத் தயாரிப்பு, சோப்புத் தயாரிப்பிலும் இது பயன்படுகிறது.

வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்

வெங்காயத்தை ஆனியன் என்கிறார்கள். இது யூனியோ என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து தோன்றியது. இதற்கு பெரிய முத்து என்று அர்த்தம்.
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் அலைல் புரோப்பைல் டை சல்பைடு என்ற எண்ணெயாகும். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும் நமது கண்களில் பட்டு கண்ணீர் வரவும் காணமாக இருக்கிறது. சிறிய வெங்காயம், பெல்லாரி வெங்காயம் இரண்டும் ஒரே தன்மையை உடையன. ஒரே பலனைத்தான் தருகின்றன.

பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியத்திலும், வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. விஞ்ஞானிகள் வெங்காயத்தின் மகிமையைப் பாராட்டுகிறார்கள்.
வெங்காயத்தை எப்படி பயன்படுத்தினால், என்ன பலன்கள் கிடைக்கும்?
 •  நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
 • சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.
 •  வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.
 •  வெங்காயத் தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
 •  வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்
 • வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
 • வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
 •  வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
 • வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.
 •  வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.
 •  வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
 •  வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
 •  படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.
 •  திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.
 • வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
 • குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
 •  வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
 • பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.
 •  வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.
 •  வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
 • பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
 •  வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
 •  வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
 •  தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
 •  வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
 • நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
 •  வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
 •  வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.
 •  ஜலதோஷ நேரத்தில் வெங் காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.
 • .வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.
 •  பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.
 •  ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.
 •  வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.
 •  வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.
 • காலரா பரவியுள்ள இடத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.
 •  ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.
 • சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
 • தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.
 •  காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.
 •  வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.
 •  வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.
 •  தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும். 
 • வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.
 •  வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.
 •  தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்
 • . வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.
 •  வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.
 • . மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
 •  சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.
 •  வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.
 •  வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

அத்திப்பழத்தின் மருத்துவ குணங்கள்

 • அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து, கரும் பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரை யீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தைத் தின்பதால் வெட்டையின் ஆணிவேர் அற்றுப்போகிறது. கால் விரல்களில் உண்டாகும் ஒருவித நோயையும் வராமல் தடுக்கிறது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது

 • தினசரி 2 பழங்களை சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும்,
 •  மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்,
 • . நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும்.
 •  போதைப் பழக்கம் மற்றும் இதர வியாதிகளால் ஏற்படும் கல்லீரல் வீக்கத்தைக் குணமாக்க அத்திப்பழங்களை காடியில் (வினிகர்) ஒருவாரம் வரை ஊற வைக்க வேண்டும். அதன்பின் தினசரி இரண்டு பழங்களை ஒருவேளை சாப் பிடலாம்.
 • தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சி கரமாக வளரும். இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது.
 • விஞ்ஞானிகள் அத்தி பழத்தை ஆராய்ச்சி செய்து பார்த்தார்கள். இதில் புரோட்டீன், சர்க்கரை சத்து, கால் ஷீயம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருப்பதாகவும், மற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வில் கூறியுள்ளனர். இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவி லும் இருப்பதாகக் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பழத்தைப் பொதுவாக உடல் பலவீனத்திலும், ஜுரங்களிலும் பரவலாகப் பயன்படுத்துகிறார்கள். பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி, நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள
 சீமை அத்திப்பழம்
 • சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. அரை கிராம் காட்டு அத்திப்பழத்தை தினசரி ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள், வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாகும். அதைப் பவுடராக்கி பன்னீரில் கலந்து வெண் புள்ளிகள் மீது பூசலாம். இதை தயாரிக்க முடியாதவர்கள் யுனானி நாட்டு மருந்துக்கடைகளில் விற்கப்படும் சபூப் பாஸ் என்னும் மருந்தை வாங்கிப் பயன்படுத்தலாம்