தாய்பாலின் அதிசயங்கள்.

. பிறந்த குழந்தைக்கு இயற்கையான உணவு, ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்புக் கவசம்  தாய்பால் .தாய்ப்பால் தாய்க்கும், குழந்தைக்கும் இறைவன் தந்த வரப்பிரசாதம்!
 தாய்பால் கொடுக்கும் ஒரு தாய்க்கு ஒரு நாளைக்கு அரை லிட்டர் முதல் ஒன்றரை லிட்டர் வரை பால் சுரக்கிறது.குழந்தை பாலை உறிஞ்சும்போதுபிட்யூட்டரி சுரப்பி, `ஆக்சிடோசின்’, `புரோலாக்டின்’ ஆகியவற்றை உற்பத்திசெய்கிறது, பால் உற்பத்தியைத் தூண்டுகிறது.ரத்தத்தில் இருந்து குளுக்கோஸை கிரகிப்பதற்கு பால் சுரபிகளை `புரோலாக்டின்’ தூண்டு கிறது. அந்த குளுக்கோஸானது லாக்டோஸாகவும் மற்ற சர்க்கரை களாகவும் மாற்றபடுகிறது. கால்சியம், அமினோ அமிலங்கள், புரதங்கள், கொழுப்பு ஆகியவையும் பெறப்படுகின்றனரத்தத்தில் இருந்து குளுக்கோஸை கிரகிப்பதற்கு பால் சுரபிகளை `புரோலாக்டின்’ தூண்டு கிறது. அந்த குளுக்கோஸானது லாக்டோஸாகவும் மற்ற சர்க்கரை களாகவும் மாற்றபடுகிறது.தாய்ப்பாலிலுள்ள ஹேம்லெட் என்ற பொருள், 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் பெற்றுள்ளது என, ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கண்டறிவதற்காக ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது தான், ஹ்யூமன் ஆல்பா லாக்தல்பூமின் மேட் லெதல் டூ ட்யூமர்! இதன் சுருக்கம்தான், ஹேம்லெட்! மனித உடலில், ஹேம்லெட் என்ன பங்காற்றுகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. சமீபத்தில், ஸ்வீடன் நாட்டின் லுண்ட் பல்கலை மற்றும் கோத்தென் பெர்க் பல்கலையின் ஆய்வாளர்கள் இணைந்து நடத்திய ஆய்வில், இந்த ஹேம்லெட் மனித உடலிலுள்ள 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் போது, சிறுநீர்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு, ஹேம்லெட் கொடுக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சிறுநீருடன் புற்றுநோய் செல்கள் இறந்த நிலையில் வெளியேறியது கண்டறியப்பட்டது. இதன் மூலம், புற்றுநோய்க்கான சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படக் கூடும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். 

ஹேம்லெட் புற்றுநோய் செல்களை மட்டுமே அழிக்கிறது; மற்ற செல்களை பாதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹேம்லெட் எப்படி புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது குறித்து, ஆய்வு நடந்து வருகிறது. குழந்தையின் வயிற்றில் செல்லும் தாய்ப்பாலில் உள்ள, ஹேம்லெட் அங்கு, அமிலத் தன்மையை உருவாக்குகிறது. அதன் மூலமே, கேன்சர் செல்கள் அழிக்கப்படுகின்றன என்று தெரிய வந்துள்ளது. தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒவ்வாவை நோய் வரும் வாய்ப்பை குறைக்கிறது. ஒவ்வாமையினால் வரும் ஆஸ்த்மா நோயைத் தடுக்கும் சக்தி தாய்ப்பாலுக்கு இருக்கிறது குழந்தைகளுக்கு தாய்ப்பால் பல வழிகளிலும் ஆரோக்கியத்தைத் தருகின்றது. பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு முதலில் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கின்றனர் ஆனால் சில வாரங்களிலேயே பல்வேறு காரணங்களைக் காட்டி நிறுத்திவிடுகின்றனர்.. இது மிகவும் தவறானதாகும். ஆறுமாதங்கள் முதல் ஒரு வயது வரை தாய்ப்பாலில் குழந்தைகள் வளர்வதே ஆரோக்கியமானது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் மருத்துவமனைகளுக்குச் செல்லும் வாய்ப்பு 80% குறைகிறது. 

தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அதிக எடையுடன் வளரும் ஆபத்திலிருந்தும் தப்பிக்கிறது. குழந்தையின் தாடை வளர்ச்சிக்கும் இது பயனளிக்கிறது. குழந்தைப் பருவத்தைக் கடந்து வாலிப வயதை அடையும் போது கூட குழந்தைகள் சரியான எடையில் வளர சிறு வயதில் குடிக்கும் தாய்ப்பால் உதவுகிறது. தாய்ப்பாலை குறைந்தது முதல் ஆறுமாதங்கள் குடித்து வளரும் குழந்தைகள் நீரிழிவு நோயினின்றும் தப்பி விடுகின்றன. குறிப்பாக குடும்பத்தில் யாருக்கேனும் நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைக்கு ஆறுமாதங்கள் வெறும் தாய்ப்பாலை மட்டுமே கொடுத்து வர வேண்டும். அது பரம்பரையாய் நோய் தாக்காமல் தடுக்கும் என்பது ஆனந்தமான செய்தி. தாய்ப்பால் ஆரோக்கியமான நோய் எதிர்ப்புச் சக்தியை குழந்தைகளின் உடலில் உருவாக்குகிறது. வணிக நிறுவனங்கள் தரும் எந்த சத்துப் பொருளும் தாய்ப்பாலின் குணாதிசயங்களுக்கு வெகு தொலைவிலேயே நின்று விடுகின்றன என்பதே உண்மை. வணிக நிறுவனங்கள் தங்கள் விற்பனைப் பொருட்களை பிரபலப்படுத்த தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துமாறு ஊக்கப்படுத்து கிறது. தாய்ப்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள் வலிகளைத் தாங்கும் வலிமை படைத்ததாகவும் இருக்கின்றன. . தாய்ப்பாலில் இருக்கும் அமிலத் தன்மை எண்டோர்பின் எனப்படும் வலி நிவாரணி அதிகம் சுரக்க வழி செய்வதே இதன் காரணமாம். 
தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளும் அடங்கியிருக்கின்றன. அது இயற்கையாகவே அமைந்து விட்டதனால் மிக எளிதாக இயல்பாகவே செரிமானமாகி விடுகிறது. வயிறு தொடர்பான நோய்கள் குழந்தைகளுக்கு வருவதைத் தடுக்கிறது. 

குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளெனில் அவர்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பது மிக மிக அவசியம். ஆரோக்கியத்தை மீண்டெடுக்கவும், துவக்க கால சிக்கல்களிலிருந்து விடுபடவும், நீடிய ஆயுளுக்கும் அது வழி செய்யும். தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் அறிவு வளர்ச்சியில் சற்று முன்னே நிற்கின்றன. போதிய மூளை வளர்ச்சியும், சுறுசுறுப்பும் அத்தகைய குழந்தைகளுக்கு இருப்பதே இதன் காரணமாகும். குறிப்பாக கணிதவியல், பொது அறிவு, நினைவாற்றல், துல்லியமான பார்வை போன்றவற்றுக்கு தாய்ப்பால் துணை நிற்கிறது. SIDS (Sudden Infant Death Syndrome) எனப்படும் திடீர் மரணங்களிலிருந்து குழந்தைகளளக் காப்பாற்றும் சக்தி தாய்ப்பாலுக்கு உண்டு. பாலூட்டுவது குழந்தைகளுக்கு மட்டுமன்றி தாய்க்கும் பல வகைகளில் பயனளிக்கிறது. குறிப்பாக பிரசவ காலத்திற்குப் பின் உடலின் எடை குறையவும், தேவையற்ற கலோரிகளை இழக்கவும் பாலூட்டுதல் உதவி செய்கிறது. ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு முறிவு நோய் வரும் வாய்ப்பையும் பாலூட்டுதல் குறைக்கிறது. பெரும்பாலான பெண்கள் தங்கள் மாதவிலக்கு காலம் முடிந்தபின் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்குள் விழுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பிரசவ காலத்தில் நிகழும் உதிரப்போக்கு பாலூட்டும் தாய்மாருக்கு கட்டுக்குள் இருக்கிறது. அத்துடன் கருப்பை தன்னுடைய பழைய நிலைக்கு வருவதற்கு பாலூட்டுதல் பெருமளவு துணை நிற்கிறது. திரும்ப மாதவிலக்கு வரும் காலத்தையும் 20 முதல் 30 வாரங்கள் வரை நீட்டித்து வைக்கும் வல்லமையும் பாலூட்டுதலுக்கு உண்டு. பாலூட்டும் தாய்க்கு மார்பகப் புற்று நோய், கருப்பை புற்று நோய் வரும் வாய்ப்புகள் பெருமளவு குறைகின்றன. தாய்க்கும் குழந்தைக்குமான உன்னதமான உறவை பாலூட்டுதல் ஆழப்படுத்துகின்றது.

பிறந்த உடன் குழந்தைகளால் பன்னிரண்டு முதல் பதினைந்து இஞ்ச் தொலைவு மட்டுமே பார்க்க முடியும். அதாவது தாயின் மார்புக்கும் முகத்திற்கும் இடைப்பட்ட தூரம் ! தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை தாயின் முகத்தையே பாசத்துடன் பார்த்து பந்தத்தைப் பலப்படுத்திக் கொள்கிறது. முதல் ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளை வைரஸ், பாக்டீரியா தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறது. மழலைக்காலங்களில் வரும் இத்தகைய தாக்குதல்களினால் ஏராளமான உயிரிழப்புகள் நேரிடுகின்றன என்பது கவலைக்குரிய செய்தியாகும். தாய்ப்பால் இதையனைத்தையும் எதிர்க்கும் கவசமாகச் செயல்படுகிறது. தாய்ப்பால் கொடுக்க முடியாதசூழலில் பசுவின் பால் கொடுக்கும் வழக்கம் பலருக்கும் இருக்கிறது. 

இது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள். பசுவின் பால் எளிதில் செரிமானமாவதில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர். பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்ட தாய்மார்கள் நல்ல தரமான குழந்தைகளுக்குரிய பால் பொருட்களை பயன்படுத்த வேண்டும்தாய்ப்பாலிலுள்ள ஹேம்லெட் என்ற பொருள், 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன் பெற்றுள்ளது
. தாய்ப்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள் வலிகளைத் தாங்கும் வலிமை படைத்ததாகவும் இருக்கின்றன. . தாய்ப்பாலில் இருக்கும் அமிலத் தன்மை எண்டோர்பின் எனப்படும் வலி நிவாரணி அதிகம் சுரக்க வழி செய்வதே இதன் காரணமாம். தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து விதமான சத்துகளும் அடங்கியிருக்கின்றன. அது இயற்கையாகவே அமைந்து விட்டதனால் மிக எளிதாக இயல்பாகவே செரிமானமாகி விடுகிறது. வயிறு தொடர்பான நோய்கள் குழந்தைகளுக்கு வருவதைத் தடுக்கிறது. 

நவக்கிரக கோவில்கள்


நலம் அருளும் நவக்கிரக நாயகர்கள் தனிக் கோயில் கொண்டு அருளும் நவக்கிரக பரிகார திருத்தலங்கள்

   நவக்கிரக நாயகர்கள் வழிபட்டு தம் பாவங்கள் தீர்த்த "திருமங்கலக்குடி"

 நவக்கிரக வழிபாட்டில் முதலில் வணங்கப்பட வேண்டிய தலம் " திருமங்கலக்குடி ". இத் தலம் சூரியனார் கோவில் அருகில் அமைந்துள்ளது. மூலாவராக " பிராணவரதேஸ்வரரும்". அம்பாளாக " மங்கள நாயகியும் " அருள் புரியும் இத் திருத் தலம், மங்கலக்குடி, மங்கல விநாயகர், மங்கல நாதர், மங்கல் நாயகி, மங்கல தீர்த்தம் என " பஞ்ச மங்கல ஷேத்ரமாக" வழிபடப்படுகிறது.. திருநாவுக்கரசராலும், திருஞானசம்பந்தராலும் பாடப் பெற்ற புண்ணிய பூமி இது."

 சூரியபகவான், உஷா தேவி, சாயா தேவியுடன் அருளும் "சூரியனார் கோயில்"


கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் ஆடுதுறையை அடுத்து அமைந்துள்ளது சூரிய பரிகார தலமான " சூரியனார் கோவில் ". மேற்கு நோக்கி அமைந்துள்ள இத் திருக் கோயிலின் 50 அடி உயர ராஜ கோபுரம் மூன்று நிலைகளையும், ஐந்து கலசங்களையும் கொண்டது. கோபுரத்தில் எழில்மிகு புராணச் செய்திகள் சுதைச் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரே பிரகாரமும் , நாற் புறமும் நெடும் மதில் சுவர்களையும் உடைய ஆலயத்தின் மத்தியில் அமைந்துள்ள கர்ப்ப கிரகத்தில் மூலவராக " சூரிய தேவன் " இடப் புறம் உஷா தேவியுடனும், வலப் புறம் சாயா தேவியான பிரத்யுஷா தேவியுடனும், தன் இரு கைகளில் செந்தாமரை மலர்கள் ஏந்தி மலர்ந்த முகத்துடன் காட்சி தருகிறார். இவர், தன்னை வழிபடுபவரது பகையையும், கவலைகளையும் போக்குபவர்.

  முக்கண்ணனின் இடது கண்ணான சந்திர பகவான் அருளும் "திங்களூர்"

கும்பகோணத்திலிருந்து சுவாமி மலை, கபிஸ்தலம் வழியில் திருவையாற்றின் அருகில் உள்ளது சந்திரனுகுரிய தலமான " திங்களூர் ". தஞ்சவூரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தேவரப் பாடல்பெற்ற தலம் இது. 63 நாயன்மார்கல்ளில் ஒருவரான " அப்பூதி அடிகளார் " வாழ்ந்த தலம் இது. அம்புலி, இந்து, கலாநிதி, குமுத சகாயன், சசாங்கதன், கதிர், நிலா, மதி என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் சந்திரன் சிவ பெருமானின் முக்கண்ணில் இடது கண்ணாக விளங்குபவர். சாத்வீக குணம் கொண்ட இவர் ஒரு சுப கிரகர். பராசக்தியின் அம்சமான இவர் திருப்பதி வெங்கடாசலபதியின் காலடியில் குடி கொண்டுள்ளதாக ஐதீகம். கடக ராசிக்கு அதிபதியான இவர் உயிர்களிடத்து மோக குணத்தை தூண்டுபவர். இவர் ஒருவரது ஜாதகத்தில் வலு பெற்று நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் நல்ல மனோ திடத்துடன் இருப்பார்.

  புத்திர மற்றும் பொருள் காரகனான குரு பகவான் அருளும் " ஆலங்குடி" 
நவக்கிரகங்களில் முழு முதற் சுப கிரகமான " குரு பகவான் " பொன்னிறமானவர். சாத்வீக குணம் கொண்டவர். தேவர்களுக்கெல்லாம் இவரே குரு. கைகளில் யோக தண்டம், வர மித்திரை, அட்சய கமண்டலம் கொண்டு குபேர திசை நோக்கி யோகத்தில் அமர்ந்துள்ளவர். இவர் புத்திர காரகன். பொருள் காரகன். ஆலயங்கள், போதனைச் சாலைகள், உபன்யாசம், புனித இடங்கள், ஆன்மீகத் தொடர்பு போன்றவற்றில் வாசம் செய்பவர். தெய்வ பக்தி, ஆசாரம், புத்தி, யுக்தி, ஞானம், பொறுமை, புகழ் ஆகியவற்றிற்கு இவரே காரகன். ஜாதகத்தில் குரு பார்வை கொண்டே திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. சூரியனை அடுத்த மிகப் பிரகாசமான கிரகம் குரு. 


   சாயா கிரகமான " ராகு பகவான்" குடி கொண்டுள்ள திருநாகேஸ்வரம்" 
 கும்பகோணத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது " ராகு, கேது, நாக தோஷ பரிகார " தலமான " திருநாகேஸ்வரம்". ஒரு சமயம் சுசீல முனிவரால் சாபம் பெற்ற ராகு பகவான், தனது சாபம் நீங்க, சிவ ராத்திரியன்று, முதல் ஜாமத்தில் நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் செண்பகாரண்யத்தையும், மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரத்தையும், நான்காம் ஜாமத்தில் நாகை காரோண்யத்தையும் வழிபட்டு, பின்னர் இத் தலம் வந்து ஈசனின் அருளால் சாபம் நீங்க பெற்றார். நந்தி தேவரும், நான்முகனும், சூரியனும், வசிஷ்டரும், இந்திரனும் வழிபட்ட திருத் தலம் இது. 
 நாக ராஜன், தான் வழிபட வேண்டி இறைவனை பிரதிஷ்டை செய்ததாலும், ராகு பகவான் சாபம் நீங்க பெற்றதாலும், இத் தலம் ராகு தோஷ நிவர்த்தி தலமாக வழிபடப்படுகிறது. நாக ராஜன், தன் இரு தேவியருடன், கோவிலின் தென் மேற்கு மூலையில் அருள்பாளிக்கிறார். இவருக்கு செய்யப்படும் பால் அபிஷேகம், நீல நிறமாக மாறுவது இத் தலத்தின் பெரும் சிறப்பு. ராகு கால வேளைகளில் செய்யப்படும் பாலாபிஷேகம் ராகு, கேது, நாக தோஷங்களுக்கு சிறந்ததொரு பரிகாரமாகும். தேவாரம் பாடிய மூவராலும் பாடப்பெற்ற திருத்தலம் இது 

 

 கல்விக்கு அதிபதியாம் "புதன்" குடி கொண்டுள்ள
"திருவெண்காடு"

 கும்பகோணத்தை அடுத்துள்ள சீர்காழியில் இருந்து 17 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது, நவக்கிரக நாயகர்களில் ஞான காராகனான புதன் ஆட்சி புரியும் " திருவெண்காடு ". இத் தலம் பூம்புகாரில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும், அங்காரகானான செவ்வாய் அருளும் வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 11 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இத் தலம் ஆதி சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. சுப கிரக மகா ஞானியான இவரை வழிபட ஞானம் பெருகும். இவர் தீய கிரகங்களினால் ஏற்படும் பீடைகளை போக்குபவர். கல்விக்கு அதிபதியான இவரை வழிபட்டால் நல்ல வாக்கு சாதுர்யமும், கல்வி அறிவும், கவி பாடும் ஆற்றலும் கிடைக்கும். வித்யா காரகனான இவர் நல் விருந்து, பிரசங்கம், ஜோதிடம், வாத நோய், சிற்ப வேலைப்படுகள் ஆகியவற்றின் காரணகர்த்தா. ஞானி, சாந்த சொரூபியான இவர் பார்வை வக்கிரமாகும் பொழுது நரம்பு தளர்ச்சி , பேச்சு திறன் பாதிப்பு, மூளை நோய்கள் போன்றவை ஏற்படுகின்றன. காவிரி வட கரையில் உள்ள 63 தலங்களில் 11 வது தலம் இது. சமயக் குரவர் நால்வராலும் பாடப் பெற்ற திருத் தலம் இது. காசிக்கு நிகரான தலம். மற்ற தலங்கள் மயிலாடுதுறை, திருவிடைமருதூர், திருவையாறு, சாயாவனம், மற்றும் திருவாஞ்சியம் ஆகும். இத் தல இறைவன் வழிபடுபவரது பாவங்களை போக்குவதால் இத் தலம் பாபநாசபுரம் என்றும் வணங்கப்படுகிறது

   சுப யோக அதிர்ஷ்டங்களை அருளும் சுக்கிரன் குடி கொண்டுள்ள "கஞ்சனூர்"
 தேவர்களின் குருவாக " ஆலங்குடி வியாழ பகவான் " விளங்குவது போல, அசுரர்களின் குருவாக விளங்குபவர் " சுக்கிரன் ". இவர் ஒரு நீர்க் கிரகம், பெண் கிரகம். வெண்ணிறம் கொண்டுள்ளதால் " வெள்ளி " எனவும் அழைக்கப்படுகிறார். சுக்கிரனுக்குரிய தலமான " கஞ்சனூர் " கும்பகோணத்தில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவிலும், சூரியனார் கோவிலிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. ஐந்து அடுக்கு ராஜ கோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ள இத் தலம், திருநாவுக்கரசரால் பாடப் பெற்றது. பிற நவக்கிரகங்களை போல இத் தலத்தில் சுக்கிரனுக்கு தனி சந்நதியோ, உருவச் சிலையோ கிடையாது. சிவ பெருமானே இங்கு சுக்கிரனாக காட்சி தருகிறார். சுக்கிரன் சிவனிடம் ஐக்கியமாகியுள்ளதாக ஐதீகம். இத் தல இறைவன் " அக்கினீஸ்வரர் " இறைவி " கற்பகாம்பிகை ". பிரம்ம தேவருக்குக் திருமண கோலம் காட்டியதால், இத் தலத்தில் இறைவியை தனது வலப் புறம் மணக் கோலத்தில் கொண்டுள்ளார் ஈசன்.
 வெள்ளிக் கிழமைகள் விரதம் இருப்பதாலும், கஞ்சனூர் சென்று வழிபடுவதாலும், ராஜ ராஜேஸ்வரியை வணங்குவதாலும், வெள்ளி, வைர நகைகள் அணிவதாலும், வெண்ணிற ஆடைகள் உடுத்திக் கொள்வதாலும், மொச்சை தானியத்தை தானமாக தருவதாலும் சுக்கிர தோஷங்கள் நீங்கும். சுக்கிர பகவானின் அருளாசி கிடைக்கும். ஒருவருக்கு விவாக பிராப்தி வேண்டும் என்றாலும், மலட்டு தன்மை நீங்கி புத்திரப் பேறு கிடைக்க வேண்டும் என்றாலும் சுக்கிரனின் அனுக்கிரகம் மிக அவசியம். இவர் தனது நான்கு கைகளில் தண்டம், வரகஸ்தம், கமண்டலம், அஷமாலை கொண்டு விளங்குபவர். வெண்ணிற ஆடையுடனும் , வெள்ளை பூவுடன் காட்சி தருபவர். தனது அதி தேவதையான தேவேந்திரனின் மனைவி இந்திராணியை வழிபட்டால் மிகுந்த மன மகிழ்வு அடைபவர். 

ஞான காரகனான " கேது பகவான் " அருள் புரியும் " கீழப்பெரும்பள்ளம் "
 சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் உள்ளது " கேது பகவான் " அருளாசி புரியும் கேது தோஷ நிவர்த்தி தலமான " கீழப் பெரும் பள்ளம் ". கொள்ளு தானியப் பிரியனான இவன் அசுரர்களில் வலியவன். மனிதற்கு ஏற்படும் தரித்திரம், வியாதிகள், பீடைகள் இவற்றிற்கு காரணகர்த்தா. கதம்ப மலர்ப் பிரியோன் இவன். வைடூர்ய ஆபர்ணன். கஸ்தூரியை சந்தனமாக கொள்பவன். மனிதரது பீடைகள் நீங்க வேண்டுமெனில் கேது பகவானின் அருளை பரிபூரணமாக பெற வேண்டும்

புத்திர பாக்கியம் கொடுக்கும் சனி பகவான்

" திருநள்ளாரு" 

 நவக்கிரகங்களில் " ஈஸ்வர " பட்டம் பெற்ற ஒரே கிரகம் சனி பகவான். இவர் ஆயுள் காரகன். சனியின் பலம் கொண்டுதான் ஒருவரது ஆயுள் அமைகிறது. " சனி போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை " என்றனர் ஆன்றோர். பிறவிப் பயனுக்கு ஏற்ப இன்ப துன்பங்களை அளிப்பவர் இவர். ராகு காலம், எம கண்டம் இரண்டுமே சனி பகவானின் ஆதிக்கம் பெற்ற நேரங்கள். 
 ஒரு கால் ஊனமான இவர், மாங்கல்ய காரகராவார். புத்திர பாக்கியம் கொடுப்பவர். மனிதரது வாழ்வில் ஏழரைச் சனி மூன்று முறை வரலாம். முதலில் வருவது " மங்கு சனி " இரண்டாவதாய் வருவது " பொங்கு சனி". மூன்றாவதாய் வருவது " மாரகச் சனி". பாலைவனம், மயான பூமி, பாழடைந்த கட்டிடங்கள், புதையுண்ட இடங்கள் இவை யாவும் சனி வாசம் செய்யும் இடங்களே. மனித உடலில் சிறுநீர்ப்பை, பற்கள், எலும்புகள், காதுகள், மண்ணீரல் போன்றவை சனியின் ஆதிக்கம் பெற்றவை. இரும்பு, எண்ணெய், கருப்பு தானியங்கள், புதையுண்ட பொருட்கள் ஆகியவற்றிற்கு இவரே காரணகர்த்தா .
சனிக் கிழமைகள் தோறும் விரதமிருந்து, நல்லெண்ணெய் கொண்டு இரு விளக்குகளை சனி பகவான் சந்நதியில் ஏற்றி வைத்து, எள் சாதம் நைவேத்யம் வைத்து மனமுருகி சனி பகவானை வழிபட வேண்டும். சனி பகவான் ஸ்தோத்திரப் பிரியர், எனவே சனி கவசம் சொல்வது சிறந்த பலன் அளிக்கும். 
 திருநள்ளாரு சென்று கருப்பு வஸ்திரம் அணிந்து நள தீர்த்ததில் நீராடி, வஸ்த்திரத்தை அங்கேயே விட்டுவிட்டு, வேறு உடை அணிந்து, தர்பாரண்யேஸ்வரரையும், அம்பாளையும், சனி பகவானையும் வழிபட வேண்டும். கருப்பு வஸ்திரங்களை ஏழைகளுக்கு தானம் தரலாம். 


 
பூமி மற்றும் சகோதர காரகனான, "செவ்வாய்" உறையும் "வைதீஸ்வரன் கோயில்"

 செவ்வாய் எனும் " அங்காரகன் " ஆட்சி புரியும் தலமாக விளங்குவது " வைத்தீஸ்வரன் கோவில் ". கும்பகோணத்தை அடுத்த மாயவரம் எனப்படும் மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. சிவ பெருமானின் வியர்வை துளியில் இருந்து தோன்றினார் அங்காரகன். அங்காரகன் செங்குஷ்டம் கொண்டிருப்பதை கண்ட ஈசன், வைத்தீஸ்வரன் கோவில் சென்று அங்குள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி வழிபட சொன்னார். அங்காரகனும் அவ்வாறே செய்ய அவரது செங்குஷ்டம் நீங்கியது. இறைவனிடம் தன்னை செவ்வாய் கிழமைகளில் வழிபடுவோருக்கு சகல செல்வங்களையும், சற்புத்திர பேற்றையும் அளிக்கும்படி வேண்டினார். சிவ பெருமானும் " செவ்வாய் கிழமைகள் உனை துதிப்போர் அனைவரும் கிரக தோஷங்கள் விலகி நன்மை அடைவர். நீ நவக்கிரகங்களில் மூன்றாவதாய் திகழ்வாய் " என வரமளித்தார்.
வைத்தீஸ்வரன் கோவிலில் மூலவர் சந்நதிக்குள் நுழைந்தவுடன், தண்டாயுதபாணி சந்நதிக்கு தெற்கில் தெற்கு முகமாக அமிந்துள்லது அங்காரகன் சந்நதி. தனது நான்கு கைகளிலும் முறையே சூலம், சக்தியாயுதம், அபயக்கை, தண்டம் தாங்கியபடி காட்சி தருகிறார் செவ்வாய். செவ்வாய் தோஷம் உள்ள அனைவரும் இத் தலம் வந்து துவரை அன்னம் நைவேத்யம் செய்து இவரை வழிபடவேண்டும். இவர் அனுக்கிரகம் கிட்டினால் தோஷ நிவர்த்தி பெற்று, மணவினை பெறலாம் அன்பது திண்ணம். இத் தல வழிபாடு கோள் வினைகள், வாத நோய், பேய் பிசாசு வாதனைகள், கிரக பீடை, சொறி சிரங்கு, குஷ்ட நோய், சித்த பேதம், வெப்பு நோய் போன்ற கொடிய நோய்களை தீர்க்க வல்லது. இங்கு விற்கப்படும் " வைத்தியநாதர் மருந்து " என்ற திருச்சாந்துருண்டையை உண்ண சகல நோய்களிலுமிருந்தும் நிவாரணம் பெறலாம்.