இரட்டை குழந்தைகள் பிறக்க, உண்ண வேண்டிய‌ உணவுகள்


ஒரே பிரசவத்தில் இரட்டை குழந்தைகள் பெற விரும்புபவரா நீங் கள்? அப்படி இரட்டை குழந்தைகள் பிறக்க ஜீன்கள் மட்டும் காரண மல்ல. ஒரு சில உணவுகளின் மூலமும் ஆரோக்கியமான இரட்டை குழந்தை களைப் பெற முடியும். நல்ல ஊட்டசத்து மிக்க உணவுகளை உண்டாலும் இரட்டை குழந்தைகள் பிறக்க அதிக வாய்ப்புகள் உண்டு. ஆனால் இந்த உணவை சாப்பிட்டால் கண்டிப்பாக இரட்டை குழந்தைகள் பிறக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் ஒரு சில உணவுகளை உண்டால் இரட்டை குழந் தைகள் பிறக்க வாய்ப்புகள் உண்டு.

கிழங்கு : இரட்டைக் குழந்தைகள் பெரும்பாலும் நைஜீரியாவிலே யே அதிகம் பிறக்கின்றனர். ஏனெனில் அங்கு இருப்போர் பெரும் பாலும் கிழங்கு வகைகளை அதிகம் உண்கின்றனர். ஏனெனி ல் கிழங்கில் அதிகமாக பைட் டோ எஸ்ட்ரோஜென் (phyto- est rogens) மற்றும் ப்ரோஜெஸ்ட் ரோன்  இருக்கிறது. அது கருப் பையில் அதிகமாக முட்டையை தங்க வைக்க உதவும். அதனால் தான் அதிகமாக கிழங்கு சாப்பி ட்டால் இரட்டை குழந்தைகள் பிறக்க வாய்ப்புகள் உண்டு.

பால் பொருட்கள் : கர்ப்பிணிகள் பால் பொருட்களான பால், வெண் ணெய் மற்றும் தயிர் போன்றவற்றை உண்பதால் இரட்டை குழந் தைகள் பிறக்க வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் அதில் அதிகமாக கால் சியம் உள்ளது. கால்சியமானது எலும்புகளுக்கு மட்டும் நல்ல தல்ல, இனப்பெருக்க மண்டலத்திற்கும் சிற ந்தது. மேலும் இதனை லாங் ஐ லே ண்ட் ஜெவிஸ் மருத்துவ நிறுவன த்தை சேர்ந்த டாக்டர். கேரி ஸ்டேன் மேன், குறைவாக பால் பொருட்க ளை உண்ணும் பெண்களை விட ஐந்து மடங்கு அதிகமாக, அதிக அளவு பால் பொருட்களை உண்ணு ம் பெண்களுக்கே இரட்டை குழந்தைகள் பிறக்கின்றனர் என்று கூறு கிறார். மேலும் இது இரட்டை குழந்தைகளை பிறக்க வைப்பதோடு, கருவில் இருக்கும் குழந்தைகளின் எலும்புகளின் வளர்ச்சிக்கும் உத வும்.


குறைவான கார்போஹைட்ரேட் : கார்போஹைட்ரேட் குறைவாக இருக்கும் உணவுகளான தானியங்கள், பீன்ஸ் மற் றும் காய்கறிகள் மிகவும் சிறந்த உணவுகள். இவை கருமுட்டையின் அளவை அதிகரிக்கும். அது மட்டு மல்லாமல் இந்த உணவு களை உண்டால் எந்த ஒரு நரம்பு குழாயில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கும்.
ஆகவே இத்தகைய உணவுகளை உண்டு, இரட்டைக் குழந்தைகளை பெற்று, உங்கள் கனவுகளை நனவாக்குங்கள்.

போலிக் ஆசிட் உணவுகள் : போலிக் ஆசிட் உணவுகளால் இரட்டை குழந்தைகள் பிறக்கும். மேலும் காய்கறிகளா ன பீன்ஸ், கீரைகள் மற்றுட் பீட்ரூட் போன்ற வற்றில் அளவுக்கு அதிகமாக போலிக் ஆசிட் நிறைந்துள்ளது. ஆக வே இந்த போலிக் ஆசிட் உணவுகளை அதிக மாக உண்பதால், 40% அதிகமாக இரட்டை குழந்தைகள் பிறக்கும் என்று ஆஸ்திரேலியா வில் உள்ள ஒரு குழு கண்டு பிடித்துள்ளது


உடல் எடையைக் குறைப்பதற்கான எளிமையான வழிமுறைகள்

இந்த வழிமுறைகளை தொடர்ந்து ஒரு மாதம் பின்பற்றி பாருங்கள். உங்களின் எடை தானாக குறையும். ஒரு வாரத்திற்கு, அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வரை எடை குறைந்தால், சரியான வழியில் எடையைக் குறைக்கிறீர்கள் என்று அர்த்தம். • வாரத்தில் மூன்று நாட்கள் கீரையும், தட்டாம்பயறு, பச்சைப்பயிறு, கறுப்பு சுண்டல் கடலை, கொள்ளுப்பயறு போன்ற பயறு வகைகளும் அவசியம் சேருங்கள். அதோடு, நார்ச்சத்துள்ள கைக்குத்தல் அரிசி, கைக்குத்தல் அவல், முழு கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
 • ஒழுங்கான இடைவேளைகளில், குறைந்த அளவில் சாப்பிடுங்கள். ஒருபோதும் பட்டினி கிடக்காதீர்கள். முக்கியமாக, காலை உணவை தவிர்த்தால், அதிகப் பசியெடுத்து, அடுத்த வேளை உணவை ஒரு பிடி பிடிக்க நேரிடும்.
 • தினமும் நடைபயிற்சி செய்யுங்கள். இது உடல்பயிற்சியை விட சிறந்தது. நடைபயிற்சியும் யோகாவும் ஒன்று
 • தின்பண்டங்களுக்கு பதிலாக தினமும் மூன்று வகை பழங்கள் சாப்பிடுங்கள். அதில் ஒன்று ஆரஞ்ச், சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் வகைப் பழமாக இருக்கட்டும்.
 •  அவரை, கொத்தவரை, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், காலி ப்ளவர், முருங்கைக்காய், சௌ சௌ, பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், நூல்கோல், அத்திக்காய், பரங்கிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, பூசணிக்காய், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளில் ஏதேனும் ஒன்றையாவது தினமும் உணவில் இரண்டு கப் (400 கிராம்) சேருங்கள். உருளை, சேனை போன்ற கிழங்கு வகைகளை தவிர்த்து விடுங்கள்.
 • அதிக கொழுப்பில்லாத பாலில் (அதாவது 3% அளவே கொழுப்பு , சத்துள்ள டோன்டு பாலில்) தயாரித்த காபி, டீ, தயிர் சாப்பிடுங்கள்.
 • தினமும் இரண்டிலிருந்து மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள்.
 • அசைவத்தில் மீன், தோல் நீக்கப்பட்ட சிக்கன், முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றை வேகவைத்து சாப்பிடலாம். கிரேவி வேண்டாம்.
 • நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை ஒரு நாளைக்கு மூன்று டீஸ்பூன் உபயோகிக்கவும்.

கட்டாயம் தவிர்க்க வேண்டியவை:


இனிப்புகள், சர்க்கரை, எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகள், மைதா கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள்(கேக், பப்ஸ், பரோட்டா, பிஸ்கெட்) , மக்காச்சோழ மாவு, வெண்ணெய், நெய், சீஸ், குளிர் பானங்கள்(கோக், பெப்ஸி) மற்றும் மில்க் ஷேக்குகள். அசைவத்தில் மட்டன், பீஃப், போர்க், முட்டையின் மஞ்சள் கரு.
உடல் எடையைக் குறைப்பதற்கான உணவுப் பட்டியல்


 • நேரம்            சாப்பிட வேண்டிய உணவு

 •  காலை 6 மணி      சர்க்கரை இல்லாத காபி (அ) டீ 1டம்ளர்  

 •   காலை 8 மணி   இட்லி 2 (அ) இடியாப்பம் 2 (அ) எண்ணெய் இல்லாத தோசை 1. தொட்டுக் கொள்ள சாம்பார் (அ) காய்கறி சட்னி (வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி வேண்டாம்.) இவற்றுடன் ஏதாவது ஒரு பழம்.

 • முற்பகல் 11 மணி ர்க்கரை இல்லாத, அப்போது பிழியப்பட்ட எலுமிச்சை ஜூஸ் (அ) மோர் - 1 (அ) 2 டம்ளர்.

 • நண்பகல் 1 மணி அரை கப் சாதம், சாம்பார் (அ) பருப்புக் கூட்டு அரை கப், பொரியல் 1 கப், தயிர் பச்சடி 1 கப், சுட்ட அப்பளம் -1. (வடகம், பொரித்த அப்பளம் வேண்டாம்.)

 • மாலை 4 மணி   சர்க்கரை இல்லாத காபி (அ) டீ 1 டம்ளர் (200 மி.லி)

 • மாலை 5.30 மணி ஏதாவது பழங்கள் இரண்டு
 • இரவு 8.00 மணி எண்ணெய் இல்லாத சப்பாத்தி 2, பருப்பு (அ) பசலைக்கீரை (அ)
  காய்கறிக் கலவை கூட்டு. இதனுடன் முளைக் கட்டிய பயறு 1 கப் (அ) கேழ்வரகு தோசை 1. சாம்பார், காய்கறி சாலட் 1 கப், மோர் (அ) கோதுமை ரவை உப்புமா(காய்கறிக் கலவையுடன்) ஒரு கப், ஏதேனும் ஒரு காய் தயிர் பச்சடி 1 கப்.
  படுக்கப்போகும்போது ஏதேனும் ஒரு பழம் (அ) சர்க்கரை இல்லாத பால் 1 டம்ளர். இரவு உணவிற்கும், படுக்கப்போவதற்கும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது இடைவெளி வேண்டும்.
   

உடல் எடையை குறைக்க

இன்றைய காலத்தில் உடல் எடை அதிகமாக இருந்து அவற்றை குறைக்க வேண்டும் என்று அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் இப்போது சாப்ட்வேரில் வேலை செய்பவர்களே இந்த பிரச்சனையில் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டே வேலை செய்வதால், அவர்கள் கொழுப்பு அதிகம் உள்ள எந்த உணவை உண்டாலும்,அவை சரியாக செரிக்காமல் உடலில் சேர்ந்து, எடை அதிகரிக்கிறது.
ஆகவே இதற்காக அவர்கள் தினமும் கஷ்டப்பட்டு, ஜிம் சென்று உடல் எடையை குறைக்க முயற்சிக்கின்றனர். ஆனால் அவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு, உடல் எடையை குறைக்க வேண்டிய அவசியம் தற்போது இல்லை. ஏனெனில் இந்திய உணவுகளில் பயன்படுத்தும் ஒரு சில பொருட்களை தினமும் தவறாமல் உண்டாலே, உடல் எடை குறைந்துவிடும். இப்போது அத்தகைய உணவுப் பொருட்கள் என்னவென்று பாருங்களேன்...

பச்சை மிளகாய்

உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. ஏனெனில் இதில் கொழுப்புகள் குறைவாக இருப்பதோடு, உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும். எனவே உடலை குறைக்க இனிமேல் ஜிம்மிற்கு சென்று குறைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த பச்சை மிளகாயை சாப்பிட்டாலே, இதில் உள்ள கேப்சைசின்  உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து, கலோரிகளை கரைத்துவிடுகிறது.
மேலும் கேப்சைசின் என்பது ஒரு வெப்ப ஊட்ட பொருள். ஆகவே இந்த பச்சை மிளகாயை சேர்த்திருக்கும் உணவுகளை சாப்பிடுவதால், 20 நிமிடங்களிலேயே, உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைத்துவிடும்.
 

 பூண்டு

இந்திய உணவுகளில் சுவைக்காக பயன்படுத்தும் பூண்டை, தூக்கிப்போடாமல் அதனை சாப்பிட்டால் உடல் எடை கண்டிப்பாக குறையும். நிறைய பேர் பூண்டை சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் வரும், சுவையில்லை என்று சாப்பிடாமல் தவிர்ப்பர். ஆனால் அத்தகைய பூண்டு உடலில் இருக்கும் கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மை கொண்டது. மேலும் உடலில் வாயுத் தொல்லை இருந்தாலும் சரியாகிவிடு ம்

ஏனெனில் இதில் அலிசின் என்னும் பொருள் உடல் எடையை குறைக்கப் பயன்படுகிறது. எப்படியெனில் அலிசின்  உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புகளை உடலில் தங்கவிடாமல் வெளியேற்றிவிடும். மேலும் இதில் சல்பர் இருக்கிறது. மேலும் கிருமிகளை அழிக்கும் பொருளான ஆன்டி-பாக்டீரியல் இருப்பதோடு, தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை விரைவில் ஸ்லிம் ஆக மாற்றும். ஆகவே இதனை உண்பதால் நீண்ட நேரம் பசி ஏற்படாமல் இருக்கும். எனவே நீங்கள் என்னதான் கொழுப்புக்கள் நிறைந்த உணவை சாப்பிட்டாலும், கடைசியில் ஒரு பல் பூண்டை சாப்பிடுங்கள். இதனால் உடல் எடை குறைந்து இருப்பதோடு, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்

கடுகு எண்ணெய

 சமையலுக்கு கடுகு எண்ணெயை பயன்படுத்தினால், அந்த சமையல் நன்கு மணத்தோடு இருப்பதுடன், உடல் எடையும் குறையும். ஏனெனில் இதில் மற்ற எண்ணெயை விட குறைந்த அளவில் கொழுப்புகள் உள்ளன. மேலும் இதில் ஃபேட்டி ஆசிட் (fatty acid), இரூசிக் ஆசிட் (erucic acid) மற்றும் லினோலிக் ஆசிட் (linoleic acid) போன்றவை இருப்பதோடு, இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கலோரிகளை கரைத்து உடல் எடையை குறைத்துவிடும்

 அதுமட்டுமல்லாமல் இந்த எண்ணெயை வைத்து, உடலுக்கு மசாஜ் செய்தால் உடல் வலி குறைந்துவிடும். இது உடலில் இருக்கும் கொழுப்புகளை அகற்றுவதால், இதயம் ஆரோக்கியத்துடன் இருக்கும். இந்த எண்ணெயை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்பது இல்லை, சமையலில் தாளிக்க பயன்படுத்தும் கடுகை கூட சாப்பிடலாம். இந்த கடுகிலும் குறைந்த கார்போஹைட்ரேட், நார்ச்சத்துக்கள், ஜிங்க், இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் போன்றவையும் உள்ளன. ஆகவே கடுகும் உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டது.

மோர்

பால் பொருட்களில் அதிக அளவு கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளன என்று தான் அனைவருக்கும் தெரியும். ஆனால் பால் பொருட்களில் பாலில் மட்டும் தான் அதிக அளவு கொழுப்பு உள்ளது. மற்ற பொருட்களிலும் குறைந்து அளவே கொழுப்புகள் உள்ளன. அதிலும் தயிரில் தண்ணீரை சேர்த்து, அடித்து மோர் போன்று செய்து தினமும் குடித்தால், நிச்சயம் உடல் பருமன் குறையும். அதிலும் தயிரை வாங்கும் போது குறைந்த கொழுப்புச்சத்து நிறைந்துள்ள தயிரை வாங்கி, மோர் தயாரிக்க வேண்டும்.

 மேலும் ஒரு டம்ளர் பாலை விட மோரில் மிகவும் குறைந்த அளவு கலோரிகள் மற்றும் கொழுப்புகள் உள்ளன. இதனால் இது ஒரு சிறந்த ஆரோக்கியத்தை தரும் பானமாகும். அதிலும் தினமும் ஒரு டம்ளர் மோரை குடித்தால் எடை குறைவதோடு, உடலில் இருக்கும் டாக்ஸின்கள் வெளியேறி, உடலும் வறட்சியடையாமல் இருக்கும்
 

 கறிவேப்பிலை

 அனைத்து சமையலிலும் தாளிக்க பயன்படும் கறிவேப்பிலை, மிகவும் சிறந்த மருத்துவகுணம் வாய்ந்த உடல் பருமனை குறைக்கும் ஒரு மூலிகை எனலாம். ஆனால் இந்த இலையை உண்ணும் போது மட்டும் அனைவரும், தூக்கிப் போட்டு விடுவார்கள். ஆனால் அந்த இலை உடல் எடையை மட்டும் குறைப்பதோடு, உடலில் செரிமானத்தை சரியாக நடத்தி, உடலை நன்கு சுத்தம் செய்யும். இவ்வாறு சுத்தம் செய்யும் போது, உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகளும் அகன்றுவிடும்.
 வேண்டுமென்றால் இதனை மோருடன் கிள்ளிப் போட்டு குடித்தால் மிகவும் நன்றாக இருக்கும். மேலும் அதிக எடை இருப்பவர்கள், தினமும் 8 முதல் 10 கறிவேப்பிலையை வெறும் வாயில் உண்டால் நல்லது. இல்லையென்றால், அதனை அரைத்து தண்ணீரில் கரைத்து குடிக்க வேண்டும். ஆகவே இத்தகைய சிறப்புகளை வைத்துள்ள கறிவேப்பிலையை இனிமேல் தூக்கிப்போடாமல், சாப்பிடத் தொடங்குங்கள், உடல் எடை விரைவில் குறைந்துவிடும்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

கீரையின் பயன்கள்

 
  கீரைகளில் அதிக ஃபோலிக் ஆசிட் கிடைக்கிறது. இது இரத்த சோகையைத் தவிர்க்க பெருமளவில் உதவுகிறது. உணவில் புரதச் சத்தைக் கூட்டி உடல் வளர்ச்சியுறவும் நோய் எதிர்ப்பு சக்தி பெறவும் உதவுகின்றன. கண் பார்வை, தோல் பராமரிப்பு போன்ற இன்னும் பல விஷயங்களுக்கு கீரைகளை பெருமளவில் நம்பலாம். பொதுவாக இரவு உணவில் கீரைகளைச் சேர்ப்பதைத் தவிர்க்கலாம்.
 
முருங்கைக் கீரை - இதில் முக்கியமாக வைட்டமின் A, வைட்டமின் C, கால்ஷியம், இரும்புச் சத்து நிறைந்துள்ளது. ஒரு கோப்பை முருங்கைச் சாறில் 9 முட்டை அல்லது அரை கிலோ வெண்ணை அல்லது 8 கோப்பை பாலில் உள்ள அடங்கியுள்ள வைட்டமின் A உள்ளது. தாது விருத்திக்கு மிகவும் ஏற்றது. உடல் சூடு, தலைவலி, அஜீரணம், தோல் சம்பந்தமான வியாதி, பார்வைக் குறைகளை நீக்கும்.
 
பசலைக் கீரை - இதை உபயோகிப்பதால் உடல் தொற்று பெருமளவில் தடுக்கப் படுகிறது.வைட்டமின், கால்ஷியம் அதிக அளவு ஹீமோகுளோபின், புரதம் செறிந்த கீரை. அதிக அளவில் B காம்ப்ளெக்ஸ் இருப்பதால் வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து. காசினிக் கீரை – அஜீரணம், வயிற்றுப் புண், வாய்வுத் தொல்லை, பசியின்மை போன்ற அனைத்து வயிற்றுக் கோளாறுகளுக்கும் ஏற்றது. சர்க்கரை நோய்க்கு ஏற்ற உணவு. பித்த வாந்தி, மலச்சிக்கலை நீக்கும். மூட்டுவலி, மஞ்சள் காமாலை, கல்லீரல் வீக்கம், சிறுநீரகப் புண், சிறுநீரகக் கற்கள், நரம்பு வலிகள், ஆஸ்துமா, அலர்ஜி, ஆண்மைக் கோளாறுகளுக்கு குணமாக்க ஏற்றது

அரைக்கீரை - நீரிழிவு வியாதியை கட்டுப்படுத்த உதவுகிறது. நரம்பு சம்பந்தமான அனைத்து வியாதிகளுக்கும் ஏற்றது. பிரசவத்தின் போது ஏற்படும் கடுமையான உடல் வலி, கருப்பை ரணம், அசதி ஆகியவற்றைப் போக்கி, உடம்பை மெல்ல நல்ல நிலைக்குக் கொண்டு வரும். பிரசவித்த மகளிர்க்கு 3 மாதத்தில் வரக் கூடிய ஜன்னிக் காய்ச்சல், மலச் சிக்கல், தாய்ப்பால் பற்றாக்குறை ஆகிய 3 குறைபாடுகளும் வராமல் காத்து தாய்ப்பால் அதிக அளவில் சுரக்கச் செய்கிறது. பிரசவித்தவர்களின் டானிக் அரைக்கீரை.

வல்லாரைக் கீரை -  அடிக்கடி உணவில் சேர்ப்பதால் உடல் எரிச்சல், சிறுநீர் மஞ்சளாக மாறுதல் முதலியன குணமாகும். இந்த இலையை அரைத்து தேங்காய் எண்ணையுடன் தடவிவர புண்கள் விரைவில் ஆறும். 3,4 இலையுடன் சீரகம், சர்க்கரை அரைத்துக் கொடுத்தால் குழந்தைகளுக்கான சீதபேதி நிற்கும். மூளையில் உள்ள நரம்பு செல்களை ஊக்குவித்து ஞாபக சக்தியை அதிகரிக்கிறது. ஆனால் இந்தக் கீரையை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் தலைவலி மயக்கம் முதலியவை வரும். அளவோடு சேர்க்கவும்.

 பொன்னாங்கண்ணிக் கீரை – ரத்தத்தை சுத்தபடுத்த மிகவும் பயனுள்ளதாக அமைவது  பொன்னாங்கண்ணி ஞாபக மறதியை மனிதனை அழிக்கும் கொடிய வியாதிக்கு ஒப்பிடலாம். இவை நீங்கி நினைவாற்றல் அதிகரிக்க பொன்னாங்கண்ணி சூப் சிறந்த மருந்தாகும்.
 பித்த மாறுபாட்டால் உடலில் பல நோய்கள் தாக்குகின்றன. தலைவலி மஞ்சள் காமாலை, ஈரல் பாதிப்பு, கண் பார்வைக் கோளாறு உருவாகிறது. இதற்கு சிவப்பு பொன்னாங்கண்ணி சிறந்த மருந்தாகும் கூந்தல் வளர தினமும் பொன்னாங்கண்ணி தைலம் தேய்த்துக் குளித்து வந்தால் நல்லது. .பொன்னாங்கண்ணிக் கீரை வாய் துர்நாற்றத்தை நீக்கும். இதயமும் மூளையும் புத்துணர்வாக்கும். மேனியை பளபளக்கச் செய்யும்.சொறி சிரங்கு போன்ற தோல் வியாதிகளுக்கு பொன்னாங்கண்ணி சிறந்த மருந்தாகிறது


 மணத்தக்காளிக் கீரை – B காம்ப்ளெக்ஸ் அதிக அளவில் இருப்பது. வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்

 மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் அளிக்கும் கண்பார்வை தெளிவு பெறும்.வாரம் இரு முறை மணத்தக்காளியை உண்டு வர கடுமையான உழைப்பின் காரணமாக உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் அழற்சியைப் போக்கலாம்.இருதயத்தின் செயல்பாடு வலிமை கூடும்.களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும்.கருப்பையில் கருவலிமை பெறவும், பிரசவத்தை எளிமைப்படுத்தவும் இக்கீரை உதவுகிறது.
  மணத்தக்காளிக் கீரைக்கு குரலை இனிமையாக்கும் குணமும் உண்டு.

 அகத்திக் கீரை
 அகத்திக் கீரையில் இலையும், பூவும், காயும், பட்டையும், வேரும் மருந்தாகப் பயன்படுகின்றன. இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன்படுத்தும் இயல்புடையது.குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு முதலிய தோல் நோய்கள் இக்கீரையை உணவாக உண்பதால் குணமாகும்.

தொண்டைப் புண் மற்றும் தொண்டைவலிக்கு அகத்திக்கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்க இந்நோய்கள் நீங்கும். இரத்தப் பித்தம், இரத்த கொதிப்பு, ஆகியவை அகத்திக்கீரையை உண்பதினால் அகலும்.
சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ நிறைய உள்ளது. போதுமான பால் சுரக்காத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கும். இக்கீரை சமைக்கும்போது நன்றாக வேக வைத்து உண்ண வேண்டும். வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் சக்தி இக்கீரைக்கு உண்டு. மலச்சிக்கல் நீங்கும்.


குழந்தைகளுக்கு நீர் கோர்த்துக் கொண்டால், இக்கீரையின் சாற்றை ஐந்துக்கு ஒரு பங்கு தேன் கலந்து தலை உச்சியில் தடவினால் நீர்க்கோவை மறையும். 
அகத்தியிலையை அவித்து அரைத்துக் காயங்களுக்கு கட்ட விரைவில் ஆறும். அகத்திப் பூச்சாறை கண்களில் பிழிய கண்நோய் குணமாகும்
 

 முளைக்கீரை- 

டல் மெலிவைப் போக்கும். குழந்தைகளுக்கு சளியைப் போக்கும். உடலுக்கு வலு கொடுக்கும். பசியைத் தூண்டும். நாவுக்கு சுவையளிக்கும். உடல் சூட்டைத் தணிக்கும்.இளைத்த உடல் தேறவும், தேகத்திற்கு வலு கிடைக்கவும் இது சிறந்த மருந்தாகும்.
 மலச்சிக்கலைப் போக்கும். அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
 மூலநோய்க்காரர்களுக்கு இது சிறந்த உணவாகும். மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.
 நாவிற்கு சுவையைக் கொடுக்கும். நன்கு பசியைத் தூண்டும்.
 உடல் சூட்டைத் தணிக்கும்.
 கண் எரிச்சலைப் போக்கும். கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும்.
நரம்புத் தளர்வைப் போக்கி நரம்புகளுக்கு வலு கொடுக்கும்.
இருமல், தொண்டைப்புண் போன்றவற்றை குணமாக்கும் தன்மை கொண்டது.
சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.
 இதில் அதிகளவு கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. அதனால் எலும்புகளுக்கு வலு கொடுப்பதுடன் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது.
 
 
 வெந்தயக் கீரை 
சாதாரணமாகச் சமையலில் பயன்படுத்தப்படும் வெந்தயத்தின் தழைதான் வெந்தயக்கீரை எனப்படுகிறது. இது சத்து நிறைந்த கீரை. வெந்தயம் விதைகளின் மூலம் பயிரடப்படுகிறது. இது மூன்று மாதங்களில் பூத்துக் காய்த்துப் பலன் தந்துவிடும். கீரையாகப் பயன்படுத்துவதற்குப் பூக்கும் முன்னரேயே வெந்தயச் செடியைப் பிடுங்கிவிட வேண்டும். வெந்தயச் செடி இளம் பச்சை நிறமுடையது. சுமார் இரண்டரை அடி வரை வளரும். வீட்டுத் தோட்டத்திலும் தொட்டியிலும் இதை மிக எளிதாக வளர்க்க முடியும். வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில் இருக்கின்றன. வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்து உண்ணலாம். இதை துவரம்பருப்புடன் வேக வைத்து கூட்டாகச் செய்து சாப்பிடலாம். இந்தக் கீரையுடன் புளி சேர்த்து வேக வைத்தும் கூட்டு தயாரிக்கலாம்.   
வெந்தயக் கீரை சீரண சக்தியைச் செம்மைப்படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது. பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது. வெந்தயக் கீரையைத் தொடர்ந்து சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாகக் கூறுகின்றனர். இந்தக் கீரை வயிற்று நோய்களையும் குணப்படுத்துகின்றது. வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன் கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும். உடல் சுத்தமாகும். குடல் புண்களும் குணமாகின்றன. மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும் எரிச்சலையும் வெந்தயக்கீரை குணப்படுத்துகின்றது.  
 
 முடக்கறுத்தான் கீரை (மொடக்கத்தான் கீரை)
முடக்கத்தான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது.
முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள் குணமாகின்றன.
இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும். முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்ட¡ல் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
இந்தக் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நிற்கும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.
வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை நல்லது. பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்தக் கீரையின் சாறு ஒரு மேஜைக்கரண்டி போதும். இந்தக் கீரையை அரைத்து கர்ப்பிணிப் பெண்களின் அடிவயிற்றில் கட்டினால் சுகப்பிரசவமாகும்.  
 

 பருப்புக் கீரை  நல்ல சத்துள்ள கீரைகளுள் பருப்புக் கீரையும் ஒன்று. நீண்ட காலமாக இந்தக் கீரையைப் பருப்புடன் சமைத்து உண்ணும் வழக்கம் இருந்து வருவதால் இதற்குப் பருப்புக் கீரை என்னும் பெயர் ஏற்பட்டுள்ளது. பருப்புக் கீரையின் இலைகள் நீளவட்ட வடிவத்தில் பசுமை நிறமுடையதாகவும், தடிப்பாகவும் இருக்கும் பருப்புக் கீரையில் வைட்டமின்களும் தாது உப்புகளும் அதிக அளவில் உள்ளன. இந்தக் கீரையின் இலை, தண்டு அனைத்தையும் உணவாகப் பயன்படுத்தலாம். இதைப் பருப்புடன் சேர்த்து வேக வைத்துக் கடைந்து சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். பொரியலும் செய்யலாம். பருப்புக் கீரையை அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் வேனிற்காலத் தலைவலி, சூட்டால் உண்டாகும் தலைவலி ஆகியன குணமாகும். இந்தக் கீரையைச் சாப்பிடுவதால் கல்லீரல் நோய்கள் தீரும். செயல் இழந்துபோன கல்லீரலை மீண்டும் செயல்படச் செய்ய மஞ்சள் கரிசலாங்கண்ணியைப் போலவே பருப்புக் கீரையையும் பயன்படுத்தலாம். பருப்புக் கீரையை வேறோடு பிடுங்கி, புளியங்கொட்டை அளவு மஞ்சள் சேர்த்து அரைத்து எலுமிச்சங்காய் அளவு எடுத்துத் தயிரில் கலந்து 40 நாட்கள் காலையில் மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் மரத்தல், கல்லீரல் புண், கல்லீரல் பெருத்தல் போன்ற நோய்களும் மண்ணீரல் நோய்களும் நீங்கிவிடும். பருப்புக் கீரையின் தண்டை அரைத்து அடிவயிற்றில் பற்று போட்டால் வேர்க்குரு, கைகால் எரிச்சல், சிறுநீர் எரிச்சல் ஆகியவை குணமாகும். இந்தக் கீரையின் விதையை அரைத்து இளநீரில் கலக்கி உள்ளுக்குக் கொடுத்தால் சீதபேதியால் ஏற்படும் வயிற்றுளைச்சலும், முக்கலும் விலகும். மூத்திர எரிச்சலும் வெள்ளைப்படுதலும் கட்டுப்படும். இந்தக் கீரை குடல் புழுக்களை அகற்றுகிறது. மூல நோய் உள்ளவர்களுக்கு மலம் வலியில்லாமல் எளிதாகக் கழிய பருப்புக் கீரை உதவுகின்றது. இது சிறுநீரைப் பெருக்கும். மூலநோயைக் குறைக்கும். பருப்புக் கீரையின் சாற்றைப் பிழிந்து 50 முதல் 100 மி.லி. அளவு வரை தினமும் காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகளும் வெறும் வயிற்றில் பருகி வந்தால் இரத்தபேதி, சீதபேதி, மூத்திரத் தடை, வெப்பம், நீர்ச்சுருக்கு ஆகிய நோய்கள் நீங்கி உடல் சூடு தணியும். பருப்புக் கீரை இலையை அரைத்துத் தீப்புண், கொப்புளம், வெந்நீர்க் கொப்புளம் ஆகியவற்றின் மீது பூசினால் எரிச்சல் தணிந்து புண் விரைவில் ஆறும். மஞ்சளுடன் இக்கீரையைச் சேர்த்து அரைத்துக் கட்டிகளில் பூசினால் கட்டிகள் உடைந்து சீழ் வெளியேறி புண் ஆறும்.
 

கரிசலாங்கண்ணிக் கீரை  ரிசலாங்கண்ணி கரிசாலை, அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ளன. கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு இரண்டு நாள், கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும் இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத்தன்மை உண்டாகும். பல கொடிய வியாதிகளில் இருந்து பாது காத்துக் கொள்ளலாம். மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது கரிசலாங் கண்ணிக் கீரையாகும்.கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாசத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை குறையும். கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாற்றை 100 மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் இரத்த சோகை நீங்கி விடும். இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராகச் செயல்படும்.
 குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும். அடிக்கடி சளி ஏற்படுவது குறைந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.