Showing posts with label பூக்களின் மருத்துவக் குணங்கள். Show all posts
Showing posts with label பூக்களின் மருத்துவக் குணங்கள். Show all posts
Posted by
Anitha
comments (0)
விலை சற்று அதிகமாக இருந்தாலும் மேனி அழகைக் கூட்டுவதில் குங்குமப் பூவுக்கு இணை குங்குமப் பூதான். இதோ சில குங்குமப் பூ அழகு குறிப்புகள்...
குங்குமப் பூவை பொடியாக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு சிட்டிகை அளவு எடுத்துக் கொள்ளவும். அதில் சில சொட்டுக்கள் பால் விட்டுக் கலந்து குழைத்துக் கொள்ளவும்.
இந்தக் கலவையை முகத்தில் பூசி வர, முகத்தில் படர்ந்துள்ள கருமை நிறம் குறைவதை கண்கூடாகக் காணலாம். இந்த முறையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
குங்குமப் பூவை உரசி ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டு சிறிது நேரம் ஊற விடவும். குங்குமப் பூவின் நிறம் முழுக்க நீரில் இறங்கியதும் சிறிது வெண்ணெய் கலந்து நன்றாக குழைக்கவும். இந்த கலவையை தொடர்ந்து சில நாட்களுக்கு பூசி வந்தால், உதடுகள் செவ்வாழை நிறம் பெறும். இதழ்களின் வறட்சி இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும்.முகத்தில் கரும்புள்ளிகள் இருந்தால் மறைந்து விடும்.
மேலும், நகச்சுத்தி வந்து பாதிக்கப்பட்ட நகங்கள், உடைந்து போன நகங்கள் போன்றவற்றை குங்குமப் பூ-வெண்ணை கலவையானது சீர்படுத்தி இழந்த அழகை மீட்டுத் தருகிறது.
ஒருவரது முகத்திற்கு வசீகரத்தைத் தருவது கவர்ச்சி மிகுந்த கண்கள்தான். அப்படிப்பட்ட கவர்ச்சியான கண்களுக்கு `பளிச்' அழகைத் தருவது அடர்த்தியான இமைகள். உங்களின் இமைகள் எழில் பெற இந்தக் குங்குமப் பூ கலவையை அடிக்கடி பூசி வரலாம்.
Labels:
பூக்களின் மருத்துவக் குணங்கள்
Posted by
Anitha
comments (0)
வாழைப்பூ
நாம் காட்டாயம் உணவில் சேர்க்கவேண்டியது வாழைப்பூ
வாழைப்பழம் மட்டுமல்ல அதிலுள்ள பூவும், தண்டும் மருத்துவ
குணமுள்ளவைவாழைப்பூவில் துவர்ப்புச் சத்து இருப்பது அனைவரும் அறிந்த
விசையம் தான் அந்தத் துவர்ப்பைத் தண்ணீர் விட்டுப் பல தடவை கசக்கிப்
பிழிந்து எடுத்து விடுகிறார்கள் நம்மில் பலர். துவர்ப்பு இருந்தால்,
சுவையிருக்காது என்று நினைத்து விடுகின்றனர்.
நம் உடலுக்கு நன்மையளிக்கும் பொருட்களில் வாழைப்பூவும் ஒன்றாகும். பெண்களின் கர்ப்பப்பைக்கு நல்ல பலமளிக்க இது உகந்தது.
பூவினை ஆய்ந்து கள்ளனை எடுப்பது சற்று வேலை அதிகம் வாங்கும் சமாச்சாரம்
என்றாலும் மாதத்தில் இரண்டு-மூன்று நாள்களாவது உணவில் இதை சேர்த்துக்
கொண்டால் நல்லது
அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு ‘பி’ விற்றமின் கிடைக்கிறது. பல வியாதிகளும் இதனால் நிவர்த்தி அடைகிறது என்பதே நிதர்சன உண்மை.
வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதையும் தெரிந்து கொள்வோம். வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவுன்சு வீதம் தினமும் குடித்து வந்தால், வறட்டு இருமல் நீங்கும்
அந்தத் துவர்ப்பு இருந்தால் ஊட்டச் சத்து வீணாகாமல் உடம்புக்கு ‘பி’ விற்றமின் கிடைக்கிறது. பல வியாதிகளும் இதனால் நிவர்த்தி அடைகிறது என்பதே நிதர்சன உண்மை.
வாழைத் தண்டை பொரியல், கூட்டு, சாம்பாராகச் செய்து சாப்பிடுவது வரைக்கும் தான் நமக்குத் தெரியும். அது எந்த வகையில் நமக்கு மருந்தாக உதவுகிறது என்பதையும் தெரிந்து கொள்வோம். வாழைத் தண்டு குடலில் சிக்கிய மணல் கற்களை விடுவிக்கும். சிறுநீர் தாராளமாகப் பிரியும். மலச் சிக்கலைப் போக்கும். நரம்புச் சோர்வையும் நீக்கும். வாழைத் தண்டுச் சாற்றை இரண்டு அல்லது மூன்று அவுன்சு வீதம் தினமும் குடித்து வந்தால், வறட்டு இருமல் நீங்கும்
உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்.
சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக்கடுப்பு உண்டாகும்.
இதனால் சீதக் கழிச்சல் ஏற்படும். இவர்கள் வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன்
சீரகம் , மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி அந்த நீரை
இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.
பெண்களுக்கு வாழைப்பூவை வரப்பிரசாதம் என்று சொல்லலாம். மாதவிலக்குக்
காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு உண்டாகும். அவர்கள் வாழைப்பூவின்
உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு
பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு
கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி, வயிற்று
வலி, சூதக வலி குறையும்.
வெள்ளைப்படுதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகின்றது.
இவர்கள் வாழைப்பூவை இரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல்
கட்டுப்படும்.
சிலர்
குழந்தையின்மையால் பல மன வேதனைக்க்கு ஆளாவர். இவர்களுக்கு வாழைப்பூ ஒரு
வரப்பிரசாதம். வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை
நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர்.
Labels:
பூக்களின் மருத்துவக் குணங்கள்




