Showing posts with label ராசி கற்கள். Show all posts
Showing posts with label ராசி கற்கள். Show all posts
Posted by
Anitha
comments (0)

ராசி கற்கள் என்பது இன்றைய காலத்தில் பலரது நம்பிக்கையாகி வருகிறது. சரியான ராசி கல்லை நாம் அணிவதன் மூலம் வாழ்க்கையில் மாற்றங்கள் மட்டுமல்ல ஏற்றங்களும் நிகழும்.
ராசிக்கல் நமது உடலையும் மனதையும் நமது ராசி கிரகத்துக்கு ஏற்ப ஒருங்கிணைக்க வைத்து நமக்கு நன்மைகள் ஏற்படுத்துவதாக வேதங்கள் சொல்லுகின்றன. ஆனால் ராசிக்கல்லை தேர்ந்தெடுப்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
எந்தெந்த ராசி காரர்களுக்கு எந்தெந்த ராசி கல் பொருத்தமாக இருக்கும் என்பது முக்கியமான ஒன்று. நமது ராசிக்கு பொருத்தமில்லாத ராசி கல்லை நாம் அணிவதன் மூலம் நன்மைகள் நடக்காதது மட்டுமல்ல சிலசமயம் சில ஆபத்தான விளைவுகளைக் கூட தப்பான ராசிக் கல் ஏற்படுத்தலாம். ஆகவே நமது பிறப்பு ராசியைப் பொறுத்து சரியான ராசிக் கல்லை தேர்ந்தெடுப்பது மிகவும் முக்கியம். எந்தெந்த ராசிக்கு எந்தெந்த ராசிக் கற்கள் பொருத்தமானவை என்று இப்போது பார்போம்
மேஷம் - பவளம்(Red coral):
மேஷராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிவதால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.
ரிஷபம் - வைரம் (Diamond):
ரிஷப ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம் இதை அணிந்தால் மகிழ்ச்சியையும் யோகத்தையும் வசீகரத்தையும் கொடுக்கும்.
மிதுனம் - மரகதம்:
மிதுன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும், அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது.
கடகம் - முத்து(Pearl):
கடக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது முத்து. இது அமைதியும் மகிழ்ச்சியும் செல்வ விருத்தியும் அளிக்க வல்லது.
சிம்மம் - மாணிக்கம் (Ruby):
சிம்ம ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மாணிக்கம். இதை அணிந்தால் மிகுந்த அதிர்ஷ்டசாலியாகலாம்.
கன்னி - மரகதம்:
கன்னி ராசிக்காரர்கள் அணிய வேண்டியது மரகதம். இது செய்யும் தொழிலில் விருத்தியும் அதிர்ஷ்டத்தையும் அளிக்க வல்லது
துலாம் - வைரம் (Diamond):
துலாம் - வைரம் (Diamond) துலாம் ராசிக்காரர்கள் அணிய வேண்டியது வைரம். இதை அணிந்தால் மகிழ்ச்சியையும், யோகத்தையும், வசீகரத்தையும் கொடுக்கும்.
விருச்சிகம் - பவளம்(Red coral):
விருச்சிக ராசிக்காரர்கள் அணிய வேண்டியது பவளம். இதை அணிந்தால் தெய்வ கடாட்சம் கிடைக்கும். கோபம் தணியும், அதிர்ஷ்டம் உண்டாகும்.
தனுசு - கனக புஷ்பராகம். (Yellow Shappire):
தனுசு ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும் செல்வ விருத்தியையும் கொடுக்கும்.
மகரம் - நீலக்கல் (Blue Shappire):
மகர ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது
கும்பம் - நீலக்கல் (Blue Shappire):

கும்ப ராசிக்காரர்கள் அணிய வேணிடியது நீலக்கல். செல்வ விருத்தியையும், செல்வாக்கையும், தெய்வீகத்தன்மையையும் கொடுக்க வல்லது
மீனம் - கனக புஷ்பராகம். (Yellow Shappire) :
மீன ராசிக்காரர்கள் அணிய வேண்டியது கனக புஷ்ப ராகம். இந்தக் கல் பார்ப்பதற்கு மஞ்சள் நிறமாக இருக்கும். இது மன அமைதியையும், செல்வ விருத்தியையும் கொடுக்கும்.
Labels:
ராசி கற்கள்










