Posted by
Anitha
comments (1)
பிறக்கப் போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று தெரிந்துகொள்வதில் அனைத்து பெற்றோர்க்கும் ஆசைதான் இருந்தாலும் இது குறித்து வெளியே சொல்லக் கூடாது என்று சட்டம் சொல்கிறது. இருந்தாலும், பிறக்கும் குழந்தை ஆணாக இருக்கக் கூடாதா என்று ஏங்கும் குடும்பங்கள் பல. ஆஸ்பத்திரியில் ஸ்கேன் எடுத்துப் பார்த்தால்தான் குழந்தை எது? என்பதை உறுதி செய்ய முடியும்.
- பெண்ணின் பிறப்புறுப்பின் பாதை மற்றும் அதில் சுரக்கும் திரவம் என்பது ஒன்று அமிலத்தன்மையாகவோ இல்லை காரத்தன்மையாகவோ இருக்கும்.
- X - பெண் குழந்தைக்கான குரோமோசொம் அமிலத்தன்மை (Acidic) நிறைந்த திரவத்தில் அனாசயமாகவும் வேகமாகவும் நீந்தி முன்னேறும்.

- Y - ஆண் குழந்தைக்கான குரோமோசோம் காரத்தன்மை (Caustic) நிறைந்த திரவத்தில் சிரமப்படாமல் நீந்தி போகும் மேலும் அமிலத்தன்மை நிறைந்த திரவநிலையில் அதனால் நீண்ட நேரம் நிடித்து வாழ இயலாது.
- இப்போது சொல்லுங்கள் ஆணும் பெண்ணும் கூடும்போது பெண்ணின் பிறப்புறுப்பு பாதை மற்றும் சுரக்கும் திரவம் அமிலத்தன்மையாக இருந்தால் பெண் குழந்தையாகவும், காரத்தன்மை நிறைந்ததாக இருந்தால் ஆண் குழந்தையாகவும் பிறக்கும்
- ஆனால், காமசூத்ராவின் தந்தை வாத்சாயனாரோ, சில அறிகுறிகளை வைத்தே பிறக்கப் போகும் குழந்தையை அடையாளம் கண்டு விடலாம் என்கிறார். அவர் கூறிய அறிகுறிகள் இவைதான்…
- பெண்ணின் மாதவிலக்கிற்குப் பிறகு ஒற்றைப்படை நாளில் உறவு கொள்ள பெண் குழந்தை பிறக்கும். இரட்டைப்படை நாளில் உறவு கொண்டால் ஆண் குழந்தை பிறக்கும்.
- கர்ப்பத்தில் இருக்கும் குழந்தை ஆண் என்றால், கர்ப்பிணியின் வலது பக்கம் மார்பகம் பருத்துப் போய் காணப்படும். அந்த மார்பகத்தில் உள்ள பால் கலங்கலாகவும், வெண்மையாகவும் இருக்கும்.
- இதேபோல், அந்த கர்ப்பிணியின் சிறுநீர் முந்தைய நிறத்தை இழந்து பல நிறமாக மாறும். அத்துடன், குழந்தை தனது வயிற்றில் வலது பக்கம் இருப்பது போன்று அவளுக்குத் தோன்றும். அவள் படுக்கையில் இருந்து எழும்பும் போதும், அமரும் போதும் வலது கையையே ஊன்றுவாள். அவளது மார்பகப் பாலில் ஒரு துளியை எடுத்து தண்ணீரில் விட்டால் அது மிதக்கும்.
- கர்ப்பிணியின் இடது மார்பகம் பருத்துக் காணப்படுவதும், அவளது தேகத்தில் அதிக சோம்பல் ஏற்படுவதும், தின்பண்டங்கள் மீது ஆசை ஏற்படுவதும், அடிக்கடி பொய்ப்பசி தோன்றுவதும் பெண் குழந்தைக்கான அறிகுறிகளாகும். இதேபோல், அவள் படுக்கையில் இருந்து எழும்பும் போதும், உட்காரும போதும் இடது கையையே ஊன்றுவாள்.
Labels:
ஆணா? பெண்ணா?
Posted by
Anitha
comments (0)
- மனிதன் உடலில் கடுமையாக உழைக்கும் ஆற்றல் மிகுந்த உறுப்புகளில் ஒன்று இதயம். இதயமானது தொடர்ச்சியாக 12 மணி நேரத்தில் பயன்படுத்தும் ஆற்றலைக் கொண்டு 6 டன் எடையுள்ள பொருளை தரையில இருந்து 2 அடி உயரத்துக்கு தூக்க முடியும். பெண்களின் இதய துடிப்பு ஆண்களை விட அதிகம். பொதுவாக எல்லா பெரிய உயிரினங்களின் இதய துடிப்பு மெதுவாகவும் (யானை – நிமிடத்திற்கு 20-30) சிறிய உயிரினங்களில் இதய துடிப்பு வேகமாகவும் இருக்கும். (எலி - நிமிடத்திற்கு 500-600). மனித இனத்தில் பெண்கள் உருவத்தில் ஆண்களைவிட சிறியவர்களாக இருப்பதால் அவர்களின் இதயத்துடிப்பு வேகமாக இருக்கும்.
- மனித இதயத்தின் எடை அரை கிலோகிராமிற்கு குறைவாகவே இருக்கும்.
- இதயமானது ஒவ்வொரு முறை சுருங்கும்போதும் உடலில் உள்ள மொத்தம் சுமார் பத்தாயிரம் மைல் நீளம் உள்ள ரத்தக் குழாய்களில் ரத்தத்தை அனுப்புகிறது
- இதயத்தின் ரத்தக் குழாய்களின் மொத்த நீளமானது நம் நாட்டில் உள்ள ரயில்வே இரும்புப் பாதையன் மொத்த நீளத்தை விட மூன்று மடங்கு அதிகம். மருத்துவர்களால் புரிந்துகொள்ள முடியாத சில புதிரான ஆற்றல்களை இதயம் பெற்றுள்ளது
- . நீளமான மோதிர விரல் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்பு குறைவு என்பதினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளார்கள்.
- ‘ஆலீவ்’ எண்ணெய், ரத்த கொலஸ்ட்ராலை குறைத்து மாரடைப்பு ஏற்படுவதை தடுத்து நிறுத்து மென ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
- மத்திய தரைக்கடல் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு மாரடைப்பு ஏற்படுவதில்லை. இதற்கு இவர்கள் சிவப்பு ஒயின், கடல் மீன்கள், ஆலீவ் எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்துவதுதான் காரணமென கண்டறியப்பட்டுள்ளது
- . மனிதனின் இதய துடிப்பு ஒரு நாளைக்கு 100,000 தடவைகளும் ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் தடவைகளும் வாழ் நாளில் 2.5 பில்லியன் தடவைகளும் துடிக்கின்றன .
- ஒவ்வொரு நாளும் இதயமானது ஒரு லட்சம் முறை விரிந்து சுருங்குகிறது. இந்தக் கணக்கை அடிப்படையாகக் கொண்டு கணக்கிட்டால் 70 ஆண்டுகள் உயிர் வாழும் ஒரு மனிதனின் வாழ்நாளில் இதயமானது 25 ஆயிரம் கோடி முறை சுருங்கி விரிகிறது.
- ஒரு நாளில் இதயமாவது 1800 காலன் (7200 லிட்டர்) அளவு ரத்தத்தை டலின் பல பாகங்களுக்கும் அனுப்புகிறது.
- . ஒரு மனிதனின் வாழ்நாளில் சராசரியாக 1 மில்லியன் பேரல் இரத்தத்தை பம்பு (pump) பண்ணுகிறது. (ஒரு பேரல் என்பது 117.34 லிட்டேர்கள் …நீங்களே கணக்கிட்டு கொள்ளுங்கள்)
- பல் ஈறுகளில் நோய்தொற்று உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரைவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
- நம் இதயத்தின் அளவு நமது கையின் ஒரு பிடி அளவே (clenched fist).
- கருவில் உருவாகும் முதல் உறுப்பு இதயமே.
- நாம் இதயத்தின் மேல் கை வைஎன்றால் உடனடியாக நாம் நமது கையை நெஞ்சின் இடதுபக்கம் வைப்போம் ஆனால் இதயம் நெஞ்சின் நடுவில்தான் இரண்டு நுரைஈரல்லுக்கும் மத்தியில் இருக்கிறது. இதயத்தின் அடிபகுதி மட்டுமே சற்று இடப்பக்கம் சாய்ந்து இருக்கும் எனவேதான் நாம் அவ்வாறு உணருகிறோம்.
- லப்..டப் ..லப்..டப் ..என்னும் சத்தம் நமது இதயம் ஏற்படுத்துகிறது என்பது நமக்கு தெரியும். நமது இதயத்தின் வால்வுகள் திறந்து மூடும் போதே இந்த சத்தம் உருவாகிறது.
- வ்வொருவரின் சராசரி வாழ்விலும் இதயம் சுமார் 1 மில்லியன் பேரல் ரத்தத்தை உடலெங்கும் செலுத்துகிறது.
- 1967 ஆம் ஆண்டு உலகின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை தென்னாப்பிரிக்காவில் செய்யப்பட்டது.
- பெரும்பாலானவர்களுக்கு மாரடைப்பு காலை 8 முதல் 9 மணி நேரத்தில் ஏற்படுகிறது.
- காதலுக்கும் இதயத்திற்கும் நேரடியாக தொடர்பு கிடையாது. அது மூளை & ஞாபகம் & நினைவு & மனம் தொடர்புடையது. பெரும்பாலான மாரடைப்பு திங்கட்கிழமைதான் ஏற்படுகிறது.
- சராசரியாக ஒரு நுண்ணிய ரத்தநாளத்தின் நீளம் 1 மி.மீ. அளவாகும்.
- நமது உடலிலுள்ள அனைத்து நுண்ணிய ரத்தநாளங்களின் மொத்த அளவு ஒரு கால்பந்தாட்ட மைதானத்தை விட பெரியதாகும்.
- ஆண்களைவிட பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் இதயத் துடிப்பு அதிகமாக இருக்கும்.
- உலக முழுவதும் இதய நோயினால் இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 1.5 கோடியாகும்.
Labels:
இதயம்
Posted by
Anitha
comments (0)
பல்வலி என்றால் அப்படியரு வலி. அவரது கீழ்த் தாடையில் இரண்டு பற்களில் குழி. ஒவ்வொரு முறை அவர் சாப்பிட்டு முடிக்கும் போதும், சில பருக்கைகள் அந்தக் குழிகளில் போய் உட்கார்ந்து கொள்ளும். அந்தப் பருக்கைகளை குண்டூசி, குச்சிகள் போன்ற ஆயுதங்களுடன் போராடித்தான் மீட்க வேண்டியது வரும். இதோடு முடிந்து விடாது.
படுக்கப் போகும்போது பல்லில் வலி லேசாக எட்டிப் பார்க்கும். அந்த வலி அப்படியே கூடிக் கொண்டு போய் அன்றைய தூக்கம் காலி. இப்படிப் பல இரவுகள் அவருக்கு நரகவேதனைதான். பல் வலிக்கும்போது கணவரையோ, குழந்தைகளையோ சரியாகக் கவனிக்காமல் போகும்போது எரிச்சல், வாக்குவாதம், சண்டை வந்து குடும்ப நிம்மதியையே கெடுத்து விடும்.
இரண்டாவது, 28 வயதில் பற்கள் சொத்தையாகி விட்டதால், யாரிடமும் பல் தெரிய சிரித்துப் பேச முடியவில்லை. தன் முகத்தின் அழகே கெட்டுவிட்டதோ என்ற மனக்கவலை வேறு.
அவரது பற்களைப் பரிசோதித்த டாக்டர்கள் அவரது சொத்தை விழுந்த இரண்டு பற்களையும் பிடுங்கியாக வேண்டும். இல்லாவிட்டால் மற்ற பற்களையும் பதம் பார்த்து விடும் என்று சொல்லி விட்டார்கள்.
சிறு வயது முதல் பற்களைப் பாதுகாக்க மறந்த அவரது அலட்சியம்தான் இதற்குக் காரணம் என்பதை டாக்டர்கள் அவருக்கு எடுத்துச் சொன்னார்கள்.
இதயம், சிறுநீரகம், போன்று பற்களுக்கும் தனி கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். காரணம், பல் மற்றும் ஈறுகளில் வரும் நோய்கள், முடக்கு வாதம், இருதய வால்வு அடைப்பு, சிறுநீரக அழற்சி, தோலில் ஒவ்வாமை, ஜீரண உறுப்புகளில் கோளாறு போன்றவற்றிற்குக் காரணமானாலும் ஆகலாம்.
பல் சொத்தை ஏன் விழுகிறது?
நம் கடைவாய்ப் பற்களில் உள்ள பள்ளங்களில் உணவுப் பொருட்கள் மாட்டிக் கொள்வதாலும் அதைச் சரியாக சுத்தம் செய்யாததாலும் பிளாக் எனப்படும் பல்பாசை உண்டாகிறது. இந்தப் பல்பாசை ஒருவகை நுண்ணுயிரிகளுக்கு இடமளிக்கிறது.
இந்தப் பல்பாசை பசைத்தன்மையுடன் விளங்குவதால் நாம் உண்ணும் உணவில் சிறுபகுதி அதில் ஒட்டிக் கொள்கிறது. இந்த நுண்ணுயிரிகள் ஒட்டிக் கொள்ளும் இனிப்பு, ஸ்டார்ச் வகை உணவு துணுக்குகளை உண்டு, இனப்பெருக்கம் செய்து வளர்ந்து, லேக்டிக் ஆசிட் எனப்படும் ஒரு வகை அமிலத்தைச் சுரக்கிறது. இந்த அமிலங்கள் பல்லின் எனாமலில் சொத்தை ஏற்படுத்தி பிறகு அது மெதுவாக உள்ளே பரவுகிறது. ‘டென்டின்’ என்ற உணர்வுப் பகுதியை அது தாக்கியவுடன் கூச்சமும், லேசான வலியும் உண்டாகிறது.
பல் சொத்தை, அருகில் உள்ள பற்களுக்கும் பரவக் கூடிய வாய்ப்புள்ளதால், பல்லில் நிற மாற்றமோ, கூச்சமோ ஏற்பட்டால் பல் மருத்துவரை அணுகுவது நல்லது.
முதலுதவி
சாப்பாட்டுத் துகள்கள் குழிக்குள் சிக்கிக் கொண்டால் குண்டூசி, குச்சி, நாக்கு போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி எடுக்கக் கூடாது. பற்களில் குழி (சொத்தை) இருந்தால் சூடாகவோ, குளிர்ச்சியாகவோ, இனிப்பானதையோ சாப்பிடும்போது பல் வலி உயிரை எடுக்கும். இளஞ்சூடான நீரில் வாயைக் கொப்பளிக்கலாம்.
சிறிய பஞ்சு உருண்டையில் க்ளோவ் ஆயில் விட்டு, அதை குழி உள்ள இடத்தில் கவனமாக வைக்கலாம். வலி நிவாரணி மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம். இவை யாவும் முதலுதவி மட்டுமே.
உடனே நீங்கள் செய்ய வேண்டியது மருத்துவரைப் பார்த்து, குழியை அடைக்க வேண்டும். அல்லது ரூட்கேனல் ட்ரீட்மெண்ட் எடுத்தாக வேண்டும். அவசியம் ஏற்பட்டால் பல்லைப் பிடுங்கி விட்டு புதிய பல்லைக் கட்டிக் கொள்ள வேண்டும். உதடு கடித்தல், நகம் கடித்தல், பல் குத்துதல் ஆகியவற்றைத் தவிர்த்து விட வேண்டும்.நீங்கள் சிரிக்கும்போது மற்றவர்கள் பயப்படாமல் இருக்க இவை உதவக் கூடும்.
Labels:
பல் வலி
Posted by
Anitha
comments (0)
உலக சிருஷ்டியில் எத்தனை உயிரினங்கள் உண்டோ அவ்வளவு ஆசனங்கள் உள்ளன. பரமசிவனால் 84 லட்சம் ஆசனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என புராணங்கள் கூறுகின்றன. அதில் 84 எல்லாவற்றிலும் சிறந்தன. அவற்றுள்ளும் 32 மிகப் பயன்படத்தக்கவை.ஆசனங்கள் பலவகை.
1. நின்று செய்யக்கூடியன.
2. அமர்ந்து செய்யக்கூடியன.
3. படுத்துச் செய்யக்கூடியன.
4. மேலாகச் செய்யக்கூடியன.
ஒவ்வொரு ஆசனமும் ஒருசில நோய்களை நீக்குவதாகும். எனவே, நோயின் தன்மை அறிந்து அவ்வகை ஆசனங்களைச் செய்தால் நோயிலிருந்து விடுதலை பெறலாம்.
- சிரசாசனம்
- சூரிய நமஸ்காரம்
- சக்ராசனம்
- பாதஹஸ்தாசனம்
- அர்த்த சந்த்ராசனம்
- தடாசனம்
- பூர்ண தனுராசனம்
- அர்த தனுராசனம்
- விபரீத நவ்காசனம்
- ஷலபாசனம்
- புஜங்காசனம்
- பவன முக்தாசனம்
- நவ்காசனம்
- ஹலாசனம்
- சர்வாங்காசனம்
- விபரீத கரணி ஆசனம்
செத்த பிணம் போல் இருக்கும் யோக நிலை சவாசனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆசனம் மூலமே ஒருவர் மன அமைதி, உடல் தணிவடைதல் என்பதை சரியாக புரிந்து கொள்ளமுடியும்.
- பிரம்ம முத்ராசனம்
- பஷ்ச்சிமுத்தாசனம்
- உஷ்த்ராசனம்
- வக்ராசனம்
- அர்த மத்ஸ்யேந்த்ராசனா
- மச்சாசனம்
- வஜ்ராசனம்
- பத்மாசனம்
- மயூராசனம்
- சவாசனம்!
செத்த பிணம் போல் இருக்கும் யோக நிலை சவாசனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆசனம் மூலமே ஒருவர் மன அமைதி, உடல் தணிவடைதல் என்பதை சரியாக புரிந்து கொள்ளமுடியும்.
Labels:
யோகாசனம்
Posted by
Anitha
comments (0)
- ரோஜா இதழ் மற்றும் பாதாம் பருப்பை அரைத்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவி வர, கரும்புள்ளிகள் மறையும்.
- கடலை எண்ணெய் மற்றும் எலுமிச்சம் பழச்சாறு சம அளவு கலந்து அவற்றை கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தேய்த்து 15 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.
- எலுமிச்சை சாறு மற்றும் கிளிசரின் கலந்து கரும்புள்ளிகள் மீது தடவி வர, அவை நாளடைவில் மறைந்து விடும்.
- கோதுமை தவிடுடன் பால் கலந்து கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி வர சிறிது நாட்களில் கரும்புள்ளிகள் மறைந்து விடும்.
- வாழைப்பழத்தை மசித்து பால் கலந்து முகத்தில் பூசி, சில நிமிடங்கள் கழித்து தண்ணீரால் கழுவினால், முகம் பொலிவுடன் காணப்படும்.
- பாதாம் பருப்பு, தேன் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவு எடுத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.
- தேன் மற்றும் பால் கலந்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவினாலும், முகம் பொலிவுடன் காணப்படும்.
- தக்காளி மற்றும் வெள்ளரிக்காயை நன்கு நைசாக அரைத்து முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால், கரும்புள்ளிகள் ஏற்படுவது தடுக்கப்படும்.
- சந்தனத் தூள் மற்றும் மஞ்சள் தூள் சம அளவுடன், பால் கலந்து பேஸ்ட் போல் குழைத்து கரும்புள்ளிகள் உள்ள பகுதிகளில் தடவி, காய்ந்த பின் தண்ணீரால் கழுவ வேண்டும்
- வெள்ளரிச்சாறு, புதினா சாறு, எலுமிச்சை பழச்சாறு ஆகியவைகளை சம அளவில் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள் மீது தேய்த்து வந்தால் கரும்புள்ளிகள் போய்விடும்.
- ருங்கை இலைச்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து தடவினால், கரும்புள்ளிகள் நீங்கும். அதே போல் பப்பாளி பழத்தை மசித்து தேன் கலந்து முகத்தில் தடவினாலும், நல்ல பலன் கிடைக்கும்.
- எலுமிச்சம் பழச்சாற்றை வெதுவெதுப்பான பாலேட்டில் கலந்து முகத்தில் பூசி பதினைந்து நிமிடங்கள் ஊறிய பின் கழுவி வரவும்.
- பப்பாளிப் பழத்தை முகத்தில் பூசி ஊற வைத்துப் பதினைந்து நிமிடங்கள் கழித்துக் குளிக்கவும்.
- தக்காளிப் பழத்தை அரைத்து கொஞ்சம் பால், எலுமிச்சம் பழச்சாறு கலந்து முகத்தில் பூசி ஊற வைத்து பதினைந்து நிமிடங்கள் கழித்து கழுவி வரவும்.
- பச்சைப் பயறைத் தோலுடன் அரைத்து மாவாக்கி அதை நீரில் குழைத்து முகத்தில் நன்றாகத் தடவி ஊற விட்டு பதினைந்து நிமிடங்கள் கழித்துக் கழுவி வரவும். முகத்தில் எண்ணெய் வழியாது.
- தக்காளியை அரை வேக்காடாக சமைத்து உண்டு வரவும். புத்துணர்ச்சியும் அளிக்கும்.
Labels:
முகம் பளபளக்க...
Posted by
Anitha
comments (0)
- வேக வைக்காத, அரை வேக்காட்டுப் பொருட்களை கர்ப்பிணிகள் உண்ண வேண்டாம். ஏனென்றால் நன்கு வேக வைத்த பொருட்களில் அழிக்கப்படும் கிருமிகள், வேக வைக்கப்படாத பொருட்களில் அழிவதில்லை. மேலும், அன்றைய தினம் சமைத்த உணவுப் பொருட்களை மட்டுமே சாப்பிட வேண்டும்.
- அழுகிய, கொஞ்சம் கெட்டுப்போன காய்கறி, பழங்களை நறுக்கிவிட்டு நல்ல பாகத்தை சாப்பிடும் பழக்கம் அறவே வேண்டாம்.
- அதிக குளிர்ச்சி, அதிக உஷ்ணத்தை ஏற்படுத்தும் பொருட்களை அளவோடு எடுத்துக் கொள்ளுங்கள். பழச்சாறுகளை அதிகமாகக் குடிக்க வேண்டாம். ஏனெனில் அதன் மூலம் உங்கள் உடலுக்கு தேவையற்ற சர்க்கரை சேர்வதால் நீரிழிவு ஏற்படலாம்.
- மிகவும் சூடான பொருட்களை சாப்பிட வேண்டாம். இது கர்ப்பத்தின் போதும், குழந்தை பிறந்த பிறகும் கடைபிடிக்கலாம்.
- உடலுக்கு அதிக அழுத்தத்தை கொடுக்கும் செயல்களை செய்யக் கூடாது. குணிந்து எடை அதிகம் கொண்ட பொருட்களை தூக்குவது, இடுப்பில் வைப்பது, எட்டாத பொருளை எட்டி எடுப்பது, குதிப்பது, வேகமாக நடப்பது, வாகனம் ஓட்டுவது, நீண்ட தூரப் பயணம் செல்வது, அதிகமான எடையை தூக்கிக் கொண்டு படி ஏறுதல் போன்றவற்றை தவிர்த்தல் நலம்.
- மல்லாக்காகப் படுப்பது கூடாது என்பார்கள். ஏனெனில் குழந்தையின் எடை உங்களது ரத்தக்குழாய்களை அழுத்துவதால் உங்களுக்கு மூச்சு விடுவதில் சிக்கல் ஏற்படும். உங்கள் மூச்சுக் காற்றின் அளவு குறையும்போது அது குழந்தையின் உடலையும் தாக்கும். எனவேதான் மல்லாக்காகப் படுக்கக் கூடாது என்கிறார்கள்.
- உடலுக்கு இறுக்கமான ஆடைகள் மற்றும் உள்ளாடைகளை தவிர்க்க வேண்டும். கர்ப்ப காலத்திற்கு என்று தளர்த்தியான ஆடைகளை வாங்கி அணியவும். கர்ப்ப காலத்தில் உள்ளாடைகளின் அளவுகளிலும் மாற்றம் ஏற்படும். எனவே அதற்கேற்ற உள்ளாடைகளைத் தேர்வு செய்யவும்.
- முகத்திற்கோ, தலைக்கோ, உடலுக்கோ எந்த வித புதிய க்ரீம்களையும் பயன்படுத்தக் கூடாது. நீங்கள் எப்போதும் பயன்படுத்தி வந்த பொருட்களையும் அளவோடு பயன்படுத்துங்கள்.
- சாதாரண காய்ச்சல், பேதி போன்ற எந்த நோய்க்கும் மருந்துக் கடைக்காரரிடம் சென்று மருந்து வாங்கி சாப்பிடக் கூடாது. உங்களது மகப்பேறு மருத்துவரிடம்தான் செல்ல வேண்டும். அப்படி இல்லாமல் அவசரத்திற்கு சாதாரண் மருத்துவரிடம் செல்ல வேண்டி இருந்தால் நீங்கள் கர்ப்பமுற்று இருப்பதை முதலில் தெரிவித்துவிட வேண்டும்.
- ரத்தப் போக்கு, நீர்க்கசிவு, வயிற்றின் இரு புறத்திலும் லேசான வலி, மலச்சிக்கல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், அஜீரணம் போன்றவற்றை உங்களது மகப்பேறு மருத்துவரிடம் சொல்லி உரிய மருத்துவம் பெறுவது அவசியம். இதில் எதையும் அலட்சியப்படுத்தக் கூடாது.
- உங்களது கர்ப்பத்தில் ஏதேனும் சிக்கலோ அல்லது உறுதித்தன்மை குறைவோ இருந்தால் உடலுறவை நிச்சயம் தவிர்க்க வேண்டும்.
- விரதம் இருப்பதோ, மிகவும் இருளான அல்லது கரடுமுரடான இடத்திற்கு செல்வதோ, ஓடுவதோ, கூட்டத்தில் செல்வதோ தவிர்த்தல் வேண்டும்.
- மிகவும் குளிர்ந்த மற்றும் மிகவும் சூடான தண்ணீரில் குளிக்க வேண்டாம். அதிகமான கவலை மற்றும் மன அழுத்தம் பிறக்கும் குழந்தையின் மனநிலையை பாதிக்கும். எனவே எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க முயலுங்கள் அவ்வாறு இல்லாவிட்டாலும் மனதில் கண்டதையும் போட்டு குழப்பிக் கொள்ளாமலாவது இருக்க முயற்சி செய்யுங்கள்.
- நீண்ட பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டால் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் போகக் கூடாது. பேருந்தை தவிர்த்துவிட்டு ரயிலில் செல்லலாம்.
- சாதாரண எக்ஸ்-ரே எடுப்பதை தவிர்க்க வேண்டும். அதிகமான அலைச்சல், அதிகமான மன, உடல் அழுத்தம் போன்றவையும் தவிர்த்தல் நலம்.
- மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் போன்றவை முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். அதிக உயரம் கொண்ட குதிகால் செருப்புகள், காற்றுப்புகாத ஆடைகள், அதிக வாசனை திரவியங்கள் வேண்டாம்.
Labels:
கர்ப்பிணி
Posted by
Anitha
comments (0)
- தாய்ப்பால் மட்டுமே கொடுக்கவேண்டும். தாய்ப்பால் பற்றாக்குறை எனும் பட்சத்தில் அரிசிக்கஞ்சி, பருப்புத் தண்ணீர், ஆப்பிள், ஆரஞ்சு ஜூஸ், காய்கறி சூப் கொடுக்கலாம். அதிலும் பாதிக்குப் பாதி ஆறிய வெந்நீர் சேர்த்து, முதன் முறையாக கொடுக்கும்போது அரை டீஸ்பூன் மட்டுமே கொடுக்க வேண்டும்.
- குழந்தை உடல் அதை ஏற்றுக் கொண்டு, மறுநாள் எந்தத் தொந்தரவுமின்றி ஆரோக்கியமாக இருந்தால், அதே அரை டீஸ்பூன் மறுநாளும் கொடுங்கள். மெது மெதுவாக அதை ஒரு டீஸ்பூன் அளவாக உயர்த்திக் கொள்ளலாம். .
6 லிருந்து 8 மாதம் வரை :
- இந்தத் தருணத்தில் குழந்தைக்கு இரும்புச் சத்து, புரதச்சத்து அதிகம் தேவைப்படும். எனவே கொழுப்பில்லாத மட்டன் சூப்பில் மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து முதல் நாள் சிறிதளவு கொடுத்துப் பாருங்கள்.
- குழந்தைக்கு ஜீரணமானால் இந்த சூப்பை வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் கொடுக்கலாம். இதைத்தவிர சிக்கன் சூப், வேகவைத்து மசித்த பசலைக்கீரை, முருங்கைக்கீரை, பருப்புசாதம் கொடுக்கலாம்.
- இந்த சமயத்தில்தான் குழந்தைக்குப் பல்முளைக்கும். மென்று சாப்பிடும் உணவுகளை ரசித்துச் சாப்பிட ஆரம்பிப்பார்கள். சிப்ஸ் போன்றவைகளை அதிகம் வாங்கிக் கொடுத்துப் பழக்கிவிட்டால், குழந்தைகள் லைஃப்லாங் அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகிவிடுவார்கள்
- குழந்தைகள் கடிப்பதற்கு வசதியாக ஆப்பிள், காரட் போன்று கொடுத்துப் பழக்குங்கள். வீட்டில் செய்த இனிப்பு, லேசான காரம், லேசான புளிப்பு உணவு வகைகளையும் கொடுத்து பழக்கப்படுத்துங்கள். அப்போதுதான் குழந்தை எல்லா சுவைக்கும் பழக்கப்படும்.
- இந்தப் பருவத்தில் குழந்தைகள் உணவின் கலரை பிடித்துப்போய் சாப்பிட ஆசைப்படுவார்கள். இந்த தருணத்தில் நமது பாரம்பரிய உணவையே வகைவகையாக சமைத்துச் சாப்பிடக் கொடுக்கலாம்.
- கலர்கலரான காய்கறிகளைச் சாப்பிட வைக்கலாம். ஸ்நாக்ஸுக்கு கடைகளில் விற்கும் சிப்ஸ் அது இதுவென்று கொடுக்காமல், வேகவைத்த வேர்க்கடலை, எண்ணெயின்றி வறுத்த வேர்க்கடலை, எனர்ஜி மில்க், வேகவைத்த தானியங்கள், முளை கட்டிய தானியங்களை பவுடராக்கி கஞ்சி வைத்து, இப்படி விதவிதமாகக் கொடுக்கலாம்.
- இந்தக் காலகட்டத்தில் குழந்தைகளுக்கு உணவின்மேல் ஈர்ப்பை உருவாக்கி உணவு ஊட்டுவது என்பது மிகக் கடினமான வேலை. புதிது புதிதாக சுவையை மாற்றி மாற்றிக் கொடுத்து உணவின்மேல் ஈர்ப்பை உருவாக்கவேண்டும்.
- நிறைய கலர்ஃபுல்லான காய்கறிகள், பழங்கள் என்று சாப்பிடும் ஆசையைத் தூண்டிவிடலாம். சாண்ட்விச், முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை, வேகவைத்த வேர்க்கடலை போன்ற கால்சியம், புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடக் கொடுக்க வேண்டும்.
3 வயதிற்கு மேல் :
- குழந்தைகள் பள்ளி செல்ல ஆரம்பிக்கும் வயது. என்னதான் நீங்கள் பார்த்துப் பார்த்து லன்ச் கட்டிக் கொடுத்தாலும், அவர்கள் சாப்பிடுகிறார்களா, கொட்டிவிடுகிறார்களா என்று தெரியாது. எனவே காலை ப்ரேக் ஃபாஸ்ட், மாலை ஸ்நாக்ஸ், இரவு டின்னரில் நீங்கள் வெகு அலர்ட்டாக இருக்கவேண்டும்.
- நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டீர்கள் என்றால் போதிய நியூட்ரிஷியன்ஸ் இல்லாமல் குழந்தைகள் நார்மல் சுறுசுறுப்பை இழந்து எப்போதும் தூங்கிவழிந்து கொண்டே இருப்பார்கள். ரொம்ப அசதியாகவும் காணப்படுவார்கள். மூளைத்திறனும் குறைவாகவே இருக்கும்.
- இட்லி, தோசை, பால் குறைவான மில்க்ஷேக் சப்பாத்தி, எனர்ஜி மில்க், தானிய சுண்டல், முட்டை, பருப்புசாதம், மிக்ஸ்ட் ரைஸ், பழங்கள் சாப்பிடக் கொடுத்துப் பழக்க வேண்டும்.
- புளிக்காத, ஃப்ரிட்ஜில் வைக்காத தயிர்சாதம் குழந்தைகளுக்குக் கட்டாயம் கொடுக்க வேண்டும். இதுபோன்ற தயிரில் நல்ல பாக்டீரியா இருப்பதால் உடல்நலனுக்கு மிகவும் நல்லது.
- இந்தப் பருவத்தில் குழந்தைகளுக்கு அபார வளர்ச்சி உண்டாகும். பெண் குழந்தைகளுக்குத்தான் அபாரவளர்ச்சி இந்த சமயத்தில் ஏற்படும். எனவே நிறைய நியூட்ரிஷியன்ஸ், புரதம், இரும்புச்சத்து, விட்டமின்ஸ், மினரல்ஸ் என எல்லாவிதமான சத்துகளும் தேவைப்படும்.
- சில பெண் குழந்தைகள் பூப்பெய்துவிடும் வயது என்பதால் நிறைய அயர்ன் தேவைப்படும். இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் (முருங்கைக் கீரை, பேரீச்சை, வெல்லம்) போன்றவற்றை உணவில் அதிகம் சேருங்கள்.
- அதே சமயம் நிறைய ஊளைச்சதைபோடும் இந்த வயதில் ஜங்க் ஃபுட் தவிர்த்தால்தான் உடலில் எதிர்ப்புச்சக்தி கூடும். பின் நாட்களில் நோய் அணுகாமல் தடுக்க இந்த வயதில் குழந்தைகள் சாப்பிடும் உணவுதான் தாங்கிப் பிடிக்கும். எனவே கவனமாக இருங்கள்.
- வீட்டிலேயே விதவிதமான உணவுகளை குழந்தைகளுக்குத் தயாரித்துக் கொடுத்து அவர்களை சாப்பிட வைத்து அவர்களின் வளர்ச்சியைப் பார்த்து ரசியுங்கள்.
Labels:
குழந்தைகள் வளர்ப்பு

























