தை பூசம்

                                            
                                                         தை பூசம்                                                 


இப்பூமியில்  சக்தியின் வெளிப்பாடும் ,தெய்வீகமும் பொருந்திய காலம் தை மாதம் ஆகும். இம்மாதத்தில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வருகிறது. இந்த தைப்பூச தினத்தை அருட்பெருஞ்சோதி சித்திக்குரிய தினம் தேவர்களின் விருப்பத்திற்கேற்ப  அருள் மிகு  நடராசர் ,தன் சக்தியுடன் திரு நடன காட்சியை காட்டிய நாள் .எனவே சிவாலயங்களில் விழாக்கோலம் .குறிப்பாக சிதம்பரத்தில் மிக விசேஷம் .

 தை மாதப் பூச நட்சத்திரத்தில் வரும் உற்சவம் மிக முக்கியமாய்க் கருதப்
படுகிறது. ஆடல்வல்லான் தன் ஆனந்தத் தாண்டவத்தைச் சித் சபையில் இந்த  பூசத்தில் நடத்தியதாய்ச் சொல்லப் படுகிறது. இந்தத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக, பதஞ்சலி, வியாக்ரபாதர் இருவருக்கும் இறைவன் தன் நாட்டியத்தைக் காட்டி முக்தி கொடுத்ததாய்க் கூறப்படுகிறது. 

முதன் முதல் தில்லைப் பதியில் "கனகசபை" அமைத்து இறைவன் ஆனந்தத் தாண்டவம் ஆடியதும் தைப்பூச நன்னாளில் தான் என்று சொல்லப்படுகிறது. சிவனுக்கே உரிய "சூல விரதம்" அன்று சிறப்பித்துச் சொல்லப் பட்டாலும், அது தற்சமயம் அவர்தம் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய சிவனின் அம்சம் ஆன சுப்ரமணியருக்கு உரிய நாளாக மாறி இருக்கிறது. அன்று இறைஅவனுக்கு அன்னப் பாவாடை சார்த்திப் பின்னர் அது பக்தர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப் படும்.

குறிப்பாக சிதம்பரத்தில் மிக விசேஷம்  சிதம்பரத்தில் சிவகங்கை குளத்திலே ,தீர்த்தவாரிக்கு பிறகு ,இறைவன் உலா  வரும் நிகழ்வு . பின் அன்னப் பாவடை என அளவில்லா அன்னம் இறைவனுக்கு படைத்தபின்வந்த பக்தர்களுக்கு வாரி வரி வழங்க பெறும் .   
  இன்று தான் திருமுருகர் வள்ளியை மணந்த  நாள் , எனவே திருத்தணியில் இன்று மணக்கோலம் , பழனியிலோ சுமார் ஒரு வாரமாக பக்தர்களின் நடை பயணம்  .இது ஆண்டுக்குஆண்டு பெருகி வருகிறது .

சாலையெங்கும் சாரி சாரியாக மக்கள் வெள்ளம் . அவர்களை  உப சரிக்க விருந்தோம்பல் தரும் பக்தர்கலேயே போட்டி, நடை பாயணம் செய்யும் பக்தர்கள் திக்கு முக்காடி போய விடுவார்கள் .
ஒருமுறை அதில் கலந்து கொண்டால் தான் அதில் பெறும் குதூகலம்  புரியும் .

சாலைகள் இப்போதெலாம் வாகனங்களுக்கு  மட்டும் அல்ல .
பக்தர்களுக்கே ! எங்கும் வேல் வேல் முருகா கோஷம் !
இன்று பழனியே லே  காவடி , பால் காவடி ஏந்தி பல் ஆயிரம் பேர்
வேல் வேல் கோஷமுடம் ,பழனி மலையில் ஏறும்  காட்சியின்
மாட்சி கண்கொள்ளா காட்சி தான் ! காண இரு கண் போதாது     ,
கண்டுவிட்டலோ பேசும் மொழி பற்றாதுஅதன் அனுபவத்தை விளம்ப , அனுபவம் சொல்லில் அடங்கா மௌனஅனுபூதியாக மாறிவிடும் .

 இத்தகு பெருமை படைத்த நாளிலே வடலூரில் , அருள் பெறும் ஜோதி வள்ளல்அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான  சபை உள்ளது. சபையின் தெற்கு வாசல் வழியாக உள்ளே சென்றால் வலது புறம் பொற்சபையும், இடது புறம் சிற்சபையும் உள்ளன.

இவைகளுக்கு மத்தியில் பஞ்சபூத தத்துவங்களை குறிக்கும் 5 படிகளை கடந்து உள்ளே சென்றால் சதுரபீடத்தில் வள்ளலார் ஏற்றி வைத்த தீபம் காணப்படும்.

அதன் முன் 6.9 அடி உயரம், 4.2 அடி அகலம் கொண்ட நிலைக்கண்ணாடி உள்ளது. கண்ணாடிக்கு முன்னால் கருப்பு, செம்மை என பல வண்ணங்களில் ஏழு திரைகள் காணப்படும். 

இந்த திரைகளை நீக்கி, நிலைக்கண்ணாடிக்கு பின் உள்ள தீபத்தை தரிசிப்பதே ஜோதி தரிசனம் இவை அனைத்தும் சித்தர்களின் தத்து வழக்கத்தின் , செயல் முறைஉருவகம் இதை காணும் போது தத்துவமும் , அதன் மெய் பொருளும்சாதகர்க்கு விள்ளக்கமாக தெரிய வேண்டும் என மெய் பொருளைஒரு ஓரங்க நாடகம் போல் விள்ளல் பெருமானார்   ஆணை படிநடத்தி வைக்கும் நாள் . இதன் விள்ளக்கதிற்கு என வள்ளல்
பெருமானார் தேர்ந்தெடுத்த நாள் இன் நாள் .

அருள் பெருஞ்சோதிஅருள் பெருஞ்சோதி !
தனிப் பெருஞ்சோதி  அருள் பெருஞ்சோதி !
என்ற விண் அதிரும் கோஷமுடன் ,அந்த தத்துவ விளக்கமான ,
மலமான ஏழு திரைகள் நீக்கப் பட்டபின் ,
அருள் பெருந் ஜோதி தரிசனம் கிடைக்கும் .
அருள் பெற்ற மிக சிலருக்கு தன்னுளேஅந்த ஜோதி ஒளிரும் .


இந்தனை சிறப்பும் மிக்க இந்த நாளை சும்மா தங்கள் சௌரியதிர்க்காக
ஒரு நாளை நமது பண்டைய ஞான குருக்கள் தேர்ந்தெடுக்க வில்லை .
இது ஒன்றும் செய்து பரிசோதிக்கும் மேற்கத்திய பாணி இல்லை ,
செய்யும் முன்னே தீர்க்கமாக இந்நாள் என தீர்மானித்த நாள் .


இதில் நமது ஆயிரம் ஆயிரம் ஆண்டு அனுபவ அறிவு மட்டும்  அனுபூதியில் பெற்ற மெய அறிவும் சேர்ந்து , விண்மீன்கள் சேர்க்கை முதலியனஆய்ந்து ,மிகப் பெரும் வான் சாஸ்திர அறிவுடன் ,தை பூச  தினம் , ஒரு விசேஷ தினம அன்று இறைவழிபாடு  செய்தல் ,மிக உகந்தது எனக் கண்டனர் .

இதற்காக சில விழாக்களையும் ,ஆலயங்களில் அமைத்தனர் .
எனவே இன்று இந்த நாளை மிகச் சிறந்த காரியங்களை தொடங்கவும் , இறை உணர்வில் ஆழ்ந்து இருக்கவும் பயன் படுத்திக் கொள்ளுமாறு நினைவுறுத்த விரும்புகிறேன் .
தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும் ஒரு சிறப்பு வாய்ந்த தினமாகும்.

தை மாதத்தை மகர மாதம் என்று அழைப்பார்கள்.
மகரம் என்பது முடிந்த நிலையினை குறிப்பது
அகரம் + உகரம் + மகரம் = ஓம் 

தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற நாள்  சூரியன் உதிக்கின்ற நேரத்தில் சந்திரனும் வானத்தில் இருக்கும். அப்போது ஞான சபையில் இருந்து அக்னியான ஜோதி காண்பிக்கப் படும்.

அதாவது சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி
சந்திரன் என்பது மன அறிவு, 
சூரியன் என்பது ஜீவ அறிவு.
அக்னி என்பது ஆன்மா அறிவு.
சந்திரன் சூரியனில் அடங்கி ,சூரியன் அக்னியில் அடங்கி அக்னி ஆகாயத்தில் அடங்கும் என்பதே தை பூசம்.
மனம் ஜீவனில் அடங்கி,ஜீவன் ஆன்மாவில் அடங்கி,ஆன்மா சிவத்துடன் கலந்து விடும்,என்பதை காட்டவே தை பூசம் 
மேலும் தை பூசத்தில் அதி காலை ஜோதி தரிசனம் மட்டுமே உண்மை.
மற்ற மாத பூசங்கள் எல்லாம் பிற்காலத்தில் ஏற்படுத்தப் பட்டன.
அன்று பொளர்ணமி-யாகம் இருக்கும். கோவில்களில் தெப்ப உச்சவம்
நடைபெறும். கோவிலில் இருக்கும் கடவுளை தேரில் வைத்து ஊர்வலமாக தெரு முழுவதும் அழைத்து வருவர்.
இந்த நன்னாள் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும்.

0 comments:

Post a Comment