Posted by
Anitha
comments (0)
இந்த வழிமுறைகளை தொடர்ந்து ஒரு மாதம் பின்பற்றி பாருங்கள். உங்களின் எடை தானாக குறையும். ஒரு வாரத்திற்கு, அரை கிலோவிலிருந்து ஒரு கிலோ வரை எடை குறைந்தால், சரியான வழியில் எடையைக் குறைக்கிறீர்கள் என்று அர்த்தம்.
கட்டாயம் தவிர்க்க வேண்டியவை:
இனிப்புகள், சர்க்கரை, எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகள், மைதா கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள்(கேக், பப்ஸ், பரோட்டா, பிஸ்கெட்) , மக்காச்சோழ மாவு, வெண்ணெய், நெய், சீஸ், குளிர் பானங்கள்(கோக், பெப்ஸி) மற்றும் மில்க் ஷேக்குகள். அசைவத்தில் மட்டன், பீஃப், போர்க், முட்டையின் மஞ்சள் கரு.
- வாரத்தில் மூன்று நாட்கள் கீரையும், தட்டாம்பயறு, பச்சைப்பயிறு, கறுப்பு சுண்டல் கடலை, கொள்ளுப்பயறு போன்ற பயறு வகைகளும் அவசியம் சேருங்கள். அதோடு, நார்ச்சத்துள்ள கைக்குத்தல் அரிசி, கைக்குத்தல் அவல், முழு கோதுமை, கோதுமை ரவை, கேழ்வரகு, கம்பு போன்ற தானியங்களையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
- ஒழுங்கான இடைவேளைகளில், குறைந்த அளவில் சாப்பிடுங்கள். ஒருபோதும் பட்டினி கிடக்காதீர்கள். முக்கியமாக, காலை உணவை தவிர்த்தால், அதிகப் பசியெடுத்து, அடுத்த வேளை உணவை ஒரு பிடி பிடிக்க நேரிடும்.
- தினமும் நடைபயிற்சி செய்யுங்கள். இது உடல்பயிற்சியை விட சிறந்தது. நடைபயிற்சியும் யோகாவும் ஒன்று

- தின்பண்டங்களுக்கு பதிலாக தினமும் மூன்று வகை பழங்கள் சாப்பிடுங்கள். அதில் ஒன்று ஆரஞ்ச், சாத்துக்குடி போன்ற சிட்ரஸ் வகைப் பழமாக இருக்கட்டும்.

- அவரை, கொத்தவரை, பீன்ஸ், கேரட், முட்டைகோஸ், காலி ப்ளவர், முருங்கைக்காய், சௌ சௌ, பீர்க்கங்காய், புடலங்காய், சுரைக்காய், நூல்கோல், அத்திக்காய், பரங்கிக்காய், வாழைத்தண்டு, வாழைப்பூ, பூசணிக்காய், வெள்ளரிக்காய் போன்ற காய்கறிகளில் ஏதேனும் ஒன்றையாவது தினமும் உணவில் இரண்டு கப் (400 கிராம்) சேருங்கள். உருளை, சேனை போன்ற கிழங்கு வகைகளை தவிர்த்து விடுங்கள்.
- அதிக கொழுப்பில்லாத பாலில் (அதாவது 3% அளவே கொழுப்பு ,
சத்துள்ள ‘டோன்டு பாலில்) தயாரித்த காபி, டீ, தயிர் சாப்பிடுங்கள்.
- தினமும் இரண்டிலிருந்து மூன்று லிட்டர் வரை தண்ணீர் அருந்துங்கள்.

- அசைவத்தில் மீன், தோல் நீக்கப்பட்ட சிக்கன், முட்டையின் வெள்ளைக் கரு ஆகியவற்றை வேகவைத்து சாப்பிடலாம். கிரேவி
வேண்டாம்.
- நல்லெண்ணெய், கடலை எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை ஒரு நாளைக்கு மூன்று டீஸ்பூன் உபயோகிக்கவும்.
கட்டாயம் தவிர்க்க வேண்டியவை:
இனிப்புகள், சர்க்கரை, எண்ணெயில் வறுத்த மற்றும் பொரித்த உணவுகள், மைதா கொண்டு தயாரிக்கப்படும் உணவுகள்(கேக், பப்ஸ், பரோட்டா, பிஸ்கெட்) , மக்காச்சோழ மாவு, வெண்ணெய், நெய், சீஸ், குளிர் பானங்கள்(கோக், பெப்ஸி) மற்றும் மில்க் ஷேக்குகள். அசைவத்தில் மட்டன், பீஃப், போர்க், முட்டையின் மஞ்சள் கரு.
Labels:
உடல் எடையை குறைக்க
Posted by
Anitha
comments (0)
-
நேரம் சாப்பிட வேண்டிய உணவு
காலை 6 மணி சர்க்கரை இல்லாத காபி (அ) டீ – 1டம்ளர்
காலை 8 மணி இட்லி – 2 (அ) இடியாப்பம் – 2 (அ) எண்ணெய் இல்லாத தோசை – 1. தொட்டுக் கொள்ள சாம்பார் (அ) காய்கறி சட்னி (வேர்க்கடலை சட்னி, தேங்காய் சட்னி வேண்டாம்.) இவற்றுடன் ஏதாவது ஒரு பழம்.
முற்பகல் 11 மணி சர்க்கரை இல்லாத, அப்போது பிழியப்பட்ட எலுமிச்சை ஜூஸ் (அ) மோர் - 1 (அ) 2 டம்ளர்.

நண்பகல் 1 மணி அரை கப் சாதம், சாம்பார் (அ) பருப்புக் கூட்டு – அரை கப், பொரியல் – 1 கப், தயிர் பச்சடி – 1 கப், சுட்ட அப்பளம் -1. (வடகம், பொரித்த அப்பளம் வேண்டாம்.)
மாலை 4 மணி சர்க்கரை இல்லாத காபி (அ) டீ – 1 டம்ளர் (200 மி.லி)
- மாலை 5.30 மணி ஏதாவது பழங்கள் இரண்டு
- இரவு 8.00 மணி எண்ணெய் இல்லாத சப்பாத்தி – 2, பருப்பு (அ) பசலைக்கீரை (அ)காய்கறிக் கலவை கூட்டு. இதனுடன் முளைக் கட்டிய பயறு – 1 கப் (அ) கேழ்வரகு தோசை – 1. சாம்பார், காய்கறி சாலட் – 1 கப், மோர் (அ) கோதுமை ரவை உப்புமா(காய்கறிக் கலவையுடன்) – ஒரு கப், ஏதேனும் ஒரு காய் தயிர் பச்சடி – 1 கப்.படுக்கப்போகும்போது ஏதேனும் ஒரு பழம் (அ) சர்க்கரை இல்லாத பால் – 1 டம்ளர். இரவு உணவிற்கும், படுக்கப்போவதற்கும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது இடைவெளி வேண்டும்.
Labels:
உடல் எடையை குறைக்க
Posted by
Anitha
comments (0)
இன்றைய காலத்தில் உடல் எடை அதிகமாக இருந்து அவற்றை குறைக்க வேண்டும்
என்று அவதிப்படுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதிலும் இப்போது
சாப்ட்வேரில் வேலை செய்பவர்களே இந்த பிரச்சனையில் அதிகம்
பாதிக்கப்படுகின்றனர். ஏனெனில் அவர்கள் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டே
வேலை செய்வதால், அவர்கள் கொழுப்பு அதிகம் உள்ள எந்த உணவை உண்டாலும்,அவை
சரியாக செரிக்காமல் உடலில் சேர்ந்து, எடை அதிகரிக்கிறது.
ஆகவே இதற்காக அவர்கள் தினமும் கஷ்டப்பட்டு, ஜிம் சென்று உடல் எடையை குறைக்க
முயற்சிக்கின்றனர். ஆனால் அவ்வாறெல்லாம் கஷ்டப்பட்டு, உடல் எடையை குறைக்க
வேண்டிய அவசியம் தற்போது இல்லை. ஏனெனில் இந்திய உணவுகளில் பயன்படுத்தும்
ஒரு சில பொருட்களை தினமும் தவறாமல் உண்டாலே, உடல் எடை குறைந்துவிடும்.
இப்போது அத்தகைய உணவுப் பொருட்கள் என்னவென்று பாருங்களேன்...
பச்சை மிளகாய்
உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் மிளகாய் கூட கொழுப்புகளை கரைத்துவிடும் தன்மையுடையது. ஏனெனில் இதில் கொழுப்புகள் குறைவாக இருப்பதோடு, உடலில் இருக்கும் கலோரிகளையும் கரைத்துவிடும். எனவே உடலை குறைக்க இனிமேல் ஜிம்மிற்கு சென்று குறைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த பச்சை மிளகாயை சாப்பிட்டாலே, இதில் உள்ள கேப்சைசின் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கச் செய்து, கலோரிகளை கரைத்துவிடுகிறது.
மேலும் கேப்சைசின் என்பது ஒரு வெப்ப ஊட்ட பொருள். ஆகவே இந்த பச்சை மிளகாயை
சேர்த்திருக்கும் உணவுகளை சாப்பிடுவதால், 20 நிமிடங்களிலேயே, உடலில் உள்ள
தேவையற்ற கொழுப்புகள் கரைத்துவிடும்.
பூண்டு
இந்திய உணவுகளில் சுவைக்காக பயன்படுத்தும் பூண்டை, தூக்கிப்போடாமல் அதனை
சாப்பிட்டால் உடல் எடை கண்டிப்பாக குறையும். நிறைய பேர் பூண்டை
சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் வரும், சுவையில்லை என்று சாப்பிடாமல்
தவிர்ப்பர். ஆனால் அத்தகைய பூண்டு உடலில் இருக்கும் கொழுப்புகளை
கரைத்துவிடும் தன்மை கொண்டது. மேலும் உடலில் வாயுத் தொல்லை இருந்தாலும்
சரியாகிவிடு ம்
ஏனெனில் இதில் அலிசின் என்னும் பொருள் உடல் எடையை குறைக்கப் பயன்படுகிறது.
எப்படியெனில் அலிசின் உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் மற்றும்
கொழுப்புகளை உடலில் தங்கவிடாமல் வெளியேற்றிவிடும். மேலும் இதில் சல்பர்
இருக்கிறது. மேலும் கிருமிகளை அழிக்கும் பொருளான ஆன்டி-பாக்டீரியல்
இருப்பதோடு, தேவையற்ற கொழுப்புகளை கரைத்து உடலை விரைவில் ஸ்லிம் ஆக
மாற்றும். ஆகவே இதனை உண்பதால் நீண்ட நேரம் பசி ஏற்படாமல் இருக்கும். எனவே
நீங்கள் என்னதான் கொழுப்புக்கள் நிறைந்த உணவை சாப்பிட்டாலும், கடைசியில்
ஒரு பல் பூண்டை சாப்பிடுங்கள். இதனால் உடல் எடை குறைந்து இருப்பதோடு,
உடலும் ஆரோக்கியமாக இருக்கும்
கடுகு எண்ணெய
சமையலுக்கு கடுகு எண்ணெயை பயன்படுத்தினால், அந்த சமையல் நன்கு மணத்தோடு
இருப்பதுடன், உடல் எடையும் குறையும். ஏனெனில் இதில் மற்ற எண்ணெயை விட
குறைந்த அளவில் கொழுப்புகள் உள்ளன. மேலும் இதில் ஃபேட்டி ஆசிட் (fatty
acid), இரூசிக் ஆசிட் (erucic acid) மற்றும் லினோலிக் ஆசிட் (linoleic
acid) போன்றவை இருப்பதோடு, இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கலோரிகளை
கரைத்து உடல் எடையை குறைத்துவிடும்
அதுமட்டுமல்லாமல் இந்த எண்ணெயை வைத்து, உடலுக்கு மசாஜ் செய்தால் உடல் வலி
குறைந்துவிடும். இது உடலில் இருக்கும் கொழுப்புகளை அகற்றுவதால், இதயம்
ஆரோக்கியத்துடன் இருக்கும். இந்த எண்ணெயை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்
என்பது இல்லை, சமையலில் தாளிக்க பயன்படுத்தும் கடுகை கூட சாப்பிடலாம்.
இந்த கடுகிலும் குறைந்த கார்போஹைட்ரேட், நார்ச்சத்துக்கள், ஜிங்க்,
இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் போன்றவையும் உள்ளன. ஆகவே கடுகும் உடல்
எடையை குறைக்கும் தன்மை கொண்டது.
மோர்
பால் பொருட்களில் அதிக அளவு கொழுப்பு சத்துக்கள் நிறைந்துள்ளன என்று தான்
அனைவருக்கும் தெரியும். ஆனால் பால் பொருட்களில் பாலில் மட்டும் தான் அதிக
அளவு கொழுப்பு உள்ளது. மற்ற பொருட்களிலும் குறைந்து அளவே கொழுப்புகள்
உள்ளன. அதிலும் தயிரில் தண்ணீரை சேர்த்து, அடித்து மோர் போன்று செய்து
தினமும் குடித்தால், நிச்சயம் உடல் பருமன் குறையும். அதிலும் தயிரை
வாங்கும் போது குறைந்த கொழுப்புச்சத்து நிறைந்துள்ள தயிரை வாங்கி, மோர்
தயாரிக்க வேண்டும்.
மேலும் ஒரு டம்ளர் பாலை விட மோரில் மிகவும் குறைந்த அளவு கலோரிகள் மற்றும்
கொழுப்புகள் உள்ளன. இதனால் இது ஒரு சிறந்த ஆரோக்கியத்தை தரும் பானமாகும்.
அதிலும் தினமும் ஒரு டம்ளர் மோரை குடித்தால் எடை குறைவதோடு, உடலில்
இருக்கும் டாக்ஸின்கள் வெளியேறி, உடலும் வறட்சியடையாமல் இருக்கும்
கறிவேப்பிலை
அனைத்து சமையலிலும் தாளிக்க பயன்படும் கறிவேப்பிலை, மிகவும் சிறந்த
மருத்துவகுணம் வாய்ந்த உடல் பருமனை குறைக்கும் ஒரு மூலிகை எனலாம். ஆனால்
இந்த இலையை உண்ணும் போது மட்டும் அனைவரும், தூக்கிப் போட்டு விடுவார்கள்.
ஆனால் அந்த இலை உடல் எடையை மட்டும் குறைப்பதோடு, உடலில் செரிமானத்தை சரியாக
நடத்தி, உடலை நன்கு சுத்தம் செய்யும். இவ்வாறு சுத்தம் செய்யும் போது,
உடலில் தங்கியிருக்கும் தேவையற்ற கொழுப்புகளும் அகன்றுவிடும்.
வேண்டுமென்றால் இதனை மோருடன் கிள்ளிப் போட்டு குடித்தால் மிகவும் நன்றாக
இருக்கும். மேலும் அதிக எடை இருப்பவர்கள், தினமும் 8 முதல் 10
கறிவேப்பிலையை வெறும் வாயில் உண்டால் நல்லது. இல்லையென்றால், அதனை அரைத்து
தண்ணீரில் கரைத்து குடிக்க வேண்டும். ஆகவே இத்தகைய சிறப்புகளை வைத்துள்ள
கறிவேப்பிலையை இனிமேல் தூக்கிப்போடாமல், சாப்பிடத் தொடங்குங்கள், உடல் எடை
விரைவில் குறைந்துவிடும்.
Labels:
உடல் எடையை குறைக்க
Posted by
Anitha
comments (0)
கீரைகளில் அதிக ஃபோலிக் ஆசிட் கிடைக்கிறது. இது இரத்த சோகையைத் தவிர்க்க பெருமளவில் உதவுகிறது. உணவில் புரதச் சத்தைக் கூட்டி உடல் வளர்ச்சியுறவும் நோய் எதிர்ப்பு சக்தி பெறவும் உதவுகின்றன. கண் பார்வை, தோல் பராமரிப்பு போன்ற இன்னும் பல விஷயங்களுக்கு கீரைகளை பெருமளவில் நம்பலாம். பொதுவாக இரவு உணவில் கீரைகளைச் சேர்ப்பதைத் தவிர்க்கலாம்.
முருங்கைக் கீரை - இதில் முக்கியமாக வைட்டமின் A, வைட்டமின் C, கால்ஷியம், இரும்புச் சத்து நிறைந்துள்ளது. ஒரு கோப்பை முருங்கைச்
சாறில் 9 முட்டை அல்லது அரை கிலோ வெண்ணை அல்லது 8
கோப்பை பாலில் உள்ள அடங்கியுள்ள வைட்டமின் A உள்ளது. தாது விருத்திக்கு
மிகவும் ஏற்றது. உடல் சூடு, தலைவலி, அஜீரணம், தோல் சம்பந்தமான வியாதி,
பார்வைக் குறைகளை நீக்கும். பசலைக் கீரை - இதை உபயோகிப்பதால் உடல் தொற்று பெருமளவில்
தடுக்கப் படுகிறது.வைட்டமின், கால்ஷியம் அதிக அளவு
ஹீமோகுளோபின், புரதம் செறிந்த கீரை. அதிக அளவில் B காம்ப்ளெக்ஸ் இருப்பதால்
வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து. காசினிக் கீரை – அஜீரணம், வயிற்றுப் புண், வாய்வுத் தொல்லை, பசியின்மை போன்ற அனைத்து வயிற்றுக் கோளாறுகளுக்கும் ஏற்றது. சர்க்கரை நோய்க்கு ஏற்ற உணவு. பித்த வாந்தி, மலச்சிக்கலை நீக்கும். மூட்டுவலி, மஞ்சள்
காமாலை, கல்லீரல் வீக்கம்,
சிறுநீரகப் புண், சிறுநீரகக் கற்கள், நரம்பு வலிகள், ஆஸ்துமா, அலர்ஜி,
ஆண்மைக் கோளாறுகளுக்கு குணமாக்க ஏற்றதுஅரைக்கீரை - நீரிழிவு வியாதியை கட்டுப்படுத்த உதவுகிறது. நரம்பு சம்பந்தமான அனைத்து வியாதிகளுக்கும் ஏற்றது. பிரசவத்தின் போது ஏற்படும் கடுமையான உடல் வலி, கருப்பை ரணம், அசதி ஆகியவற்றைப் போக்கி, உடம்பை மெல்ல நல்ல நிலைக்குக் கொண்டு வரும். பிரசவித்த மகளிர்க்கு 3 மாதத்தில் வரக் கூடிய ஜன்னிக் காய்ச்சல், மலச் சிக்கல்,
தாய்ப்பால் பற்றாக்குறை ஆகிய 3 குறைபாடுகளும் வராமல் காத்து தாய்ப்பால்
அதிக அளவில் சுரக்கச் செய்கிறது. பிரசவித்தவர்களின் டானிக் அரைக்கீரை. வல்லாரைக் கீரை - அடிக்கடி உணவில் சேர்ப்பதால் உடல் எரிச்சல், சிறுநீர் மஞ்சளாக மாறுதல் முதலியன குணமாகும். இந்த இலையை அரைத்து தேங்காய் எண்ணையுடன் தடவிவர புண்கள் விரைவில் ஆறும். 3,4 இலையுடன் சீரகம், சர்க்கரை அரைத்துக் கொடுத்தால் குழந்தைகளுக்கான சீதபேதி நிற்கும். மூளையில் உள்ள நரம்பு செல்களை ஊக்குவித்து ஞாபக
சக்தியை
அதிகரிக்கிறது. ஆனால் இந்தக் கீரையை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால்
தலைவலி மயக்கம் முதலியவை வரும். அளவோடு சேர்க்கவும்.பொன்னாங்கண்ணிக் கீரை – ரத்தத்தை சுத்தபடுத்த மிகவும் பயனுள்ளதாக அமைவது பொன்னாங்கண்ணி ஞாபக மறதியை மனிதனை அழிக்கும் கொடிய வியாதிக்கு ஒப்பிடலாம். இவை நீங்கி நினைவாற்றல் அதிகரிக்க பொன்னாங்கண்ணி சூப் சிறந்த மருந்தாகும்.
பித்த மாறுபாட்டால் உடலில் பல நோய்கள் தாக்குகின்றன. தலைவலி மஞ்சள் காமாலை, ஈரல் பாதிப்பு, கண் பார்வைக் கோளாறு உருவாகிறது. இதற்கு சிவப்பு பொன்னாங்கண்ணி சிறந்த மருந்தாகும் கூந்தல் வளர தினமும் பொன்னாங்கண்ணி தைலம் தேய்த்துக் குளித்து வந்தால் நல்லது. .பொன்னாங்கண்ணிக் கீரை வாய் துர்நாற்றத்தை நீக்கும். இதயமும் மூளையும் புத்துணர்வாக்கும். மேனியை பளபளக்கச் செய்யும்.சொறி சிரங்கு போன்ற தோல் வியாதிகளுக்கு பொன்னாங்கண்ணி சிறந்த மருந்தாகிறது
மணத்தக்காளிக் கீரை – B காம்ப்ளெக்ஸ் அதிக அளவில் இருப்பது. வாய்ப்புண், வயிற்றுப் புண் குணமாகும்
மலச்சிக்கலிலிருந்து நிவாரணம் அளிக்கும் கண்பார்வை தெளிவு பெறும்.வாரம் இரு முறை மணத்தக்காளியை உண்டு வர கடுமையான உழைப்பின் காரணமாக உடல் உள்ளுறுப்புகளில் ஏற்படும் அழற்சியைப் போக்கலாம்.இருதயத்தின் செயல்பாடு வலிமை கூடும்.களைப்பை நீக்கி நல்ல உறக்கத்தைக் கொடுக்கும்.கருப்பையில் கருவலிமை பெறவும், பிரசவத்தை எளிமைப்படுத்தவும் இக்கீரை உதவுகிறது.
மணத்தக்காளிக் கீரைக்கு குரலை இனிமையாக்கும் குணமும் உண்டு.
அகத்திக் கீரை
அகத்திக் கீரையில் இலையும், பூவும், காயும், பட்டையும், வேரும் மருந்தாகப் பயன்படுகின்றன. இக்கீரை காய்ச்சலைக் குறைத்து உடல்சூட்டை சமன்படுத்தும் இயல்புடையது.குடல்புண், அரிப்பு, சொறிசிரங்கு முதலிய தோல் நோய்கள் இக்கீரையை உணவாக உண்பதால் குணமாகும்.
தொண்டைப் புண் மற்றும் தொண்டைவலிக்கு அகத்திக்கீரையைப் பச்சையாக மென்று சாற்றை உள்ளே விழுங்க இந்நோய்கள் நீங்கும். இரத்தப் பித்தம், இரத்த கொதிப்பு, ஆகியவை அகத்திக்கீரையை உண்பதினால் அகலும்.சுண்ணாம்புச் சத்து, வைட்டமின் ஏ நிறைய உள்ளது. போதுமான பால் சுரக்காத தாய்மார்கள் தொடர்ந்து அகத்திக் கீரையைச் சாப்பிட நன்கு பால் சுரக்கும். இக்கீரை சமைக்கும்போது நன்றாக வேக வைத்து உண்ண வேண்டும். வயிற்றில் உள்ள புழுக்களை வெளியேற்றும் சக்தி இக்கீரைக்கு உண்டு. மலச்சிக்கல் நீங்கும்.
குழந்தைகளுக்கு நீர் கோர்த்துக் கொண்டால், இக்கீரையின் சாற்றை ஐந்துக்கு
ஒரு பங்கு தேன் கலந்து தலை உச்சியில் தடவினால் நீர்க்கோவை மறையும்.
அகத்தியிலையை அவித்து அரைத்துக் காயங்களுக்கு கட்ட விரைவில் ஆறும்.
அகத்திப் பூச்சாறை கண்களில் பிழிய கண்நோய் குணமாகும்
முளைக்கீரை-
உடல் மெலிவைப் போக்கும். குழந்தைகளுக்கு சளியைப் போக்கும். உடலுக்கு வலு
கொடுக்கும். பசியைத் தூண்டும். நாவுக்கு சுவையளிக்கும். உடல் சூட்டைத்
தணிக்கும்.இளைத்த உடல் தேறவும், தேகத்திற்கு வலு கிடைக்கவும் இது சிறந்த மருந்தாகும்.
மலச்சிக்கலைப் போக்கும். அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
மூலநோய்க்காரர்களுக்கு இது சிறந்த உணவாகும். மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.
நாவிற்கு சுவையைக் கொடுக்கும். நன்கு பசியைத் தூண்டும்.
உடல் சூட்டைத் தணிக்கும்.
கண் எரிச்சலைப் போக்கும். கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும்.
நரம்புத் தளர்வைப் போக்கி நரம்புகளுக்கு வலு கொடுக்கும்.
இருமல், தொண்டைப்புண் போன்றவற்றை குணமாக்கும் தன்மை கொண்டது.
சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.
இதில் அதிகளவு கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. அதனால் எலும்புகளுக்கு வலு கொடுப்பதுடன் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது.
மூலநோய்க்காரர்களுக்கு இது சிறந்த உணவாகும். மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.
நாவிற்கு சுவையைக் கொடுக்கும். நன்கு பசியைத் தூண்டும்.
உடல் சூட்டைத் தணிக்கும்.
கண் எரிச்சலைப் போக்கும். கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும்.
நரம்புத் தளர்வைப் போக்கி நரம்புகளுக்கு வலு கொடுக்கும்.
இருமல், தொண்டைப்புண் போன்றவற்றை குணமாக்கும் தன்மை கொண்டது.
சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.
இதில் அதிகளவு கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது. அதனால் எலும்புகளுக்கு வலு கொடுப்பதுடன் உடல் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது.
வெந்தயக் கீரை
சாதாரணமாகச் சமையலில்
பயன்படுத்தப்படும் வெந்தயத்தின் தழைதான் வெந்தயக்கீரை எனப்படுகிறது. இது
சத்து நிறைந்த கீரை. வெந்தயம் விதைகளின் மூலம் பயிரடப்படுகிறது. இது மூன்று
மாதங்களில் பூத்துக் காய்த்துப் பலன் தந்துவிடும். கீரையாகப்
பயன்படுத்துவதற்குப் பூக்கும் முன்னரேயே வெந்தயச் செடியைப் பிடுங்கிவிட
வேண்டும். வெந்தயச் செடி இளம் பச்சை நிறமுடையது. சுமார் இரண்டரை அடி வரை
வளரும். வீட்டுத் தோட்டத்திலும் தொட்டியிலும் இதை மிக எளிதாக வளர்க்க
முடியும். வெந்தயக் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவில்
இருக்கின்றன. வெந்தயக் கீரையை பல முறைகளில் சமைத்து உண்ணலாம். இதை
துவரம்பருப்புடன் வேக வைத்து கூட்டாகச் செய்து சாப்பிடலாம். இந்தக்
கீரையுடன் புளி சேர்த்து வேக வைத்தும் கூட்டு தயாரிக்கலாம்.
வெந்தயக் கீரை சீரண
சக்தியைச் செம்மைப்படுத்துகிறது. சொறி, சிரங்கை நீக்குகிறது.
பார்வைக்கோளாறுகளைச் சரி செய்கின்றது. வெந்தயக் கீரையைத் தொடர்ந்து
சாப்பிட்டால் காசநோயும் குணமாவதாகக் கூறுகின்றனர். இந்தக் கீரை வயிற்று
நோய்களையும் குணப்படுத்துகின்றது. வெந்தயக் கீரையை வேக வைத்து அதனுடன் தேன்
கலந்து கடைந்து உண்டால் மலம் சுத்தமாகும். உடல் சுத்தமாகும். குடல்
புண்களும் குணமாகின்றன. மலம் கழிக்கும்போது ஏற்படும் உளைச்சலையும்
எரிச்சலையும் வெந்தயக்கீரை குணப்படுத்துகின்றது.
முடக்கறுத்தான் கீரை (மொடக்கத்தான் கீரை)
முடக்கத்தான் வேலிகளில் காட்டுச் செடியாக வளர்ந்து கிடக்கும் ஒரு வகைக் கீரை. இதன் இலை துவர்ப்புச் சுவையுடையது.
முடக்கத்தான் கீரையில் வைட்டமின்களும், தாது உப்புகளும் குறிப்பிடத்தக்க
அளவில் உள்ளன. முடக்கத்தான் கீரையைத் தொடர்ந்து உணவில் சேர்த்துக்கொள்வதன்
மூலம் மலச்சிக்கல், மூல நோய், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்கள்
குணமாகின்றன.
இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும். முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்ட¡ல் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
இந்தக் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நிற்கும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.
வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை நல்லது. பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்தக் கீரையின் சாறு ஒரு மேஜைக்கரண்டி போதும். இந்தக் கீரையை அரைத்து கர்ப்பிணிப் பெண்களின் அடிவயிற்றில் கட்டினால் சுகப்பிரசவமாகும்.
இந்தக் கீரையை விளக்கெண்ணெயில் வதக்கி உண்டால் மூட்டுவலி, கைகால் வலி, முதுகு வலி, உடல் வலி ஆகிய அனைத்து வலிகளும் அகலும். முடக்கத்தான் கீரையுடன் வெல்லம் சேர்த்து நெய்யில் வதக்கி உட்கொண்ட¡ல் கண் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
இந்தக் கீரையின் சாற்றைக் காதில் விட்டால் காது வலி நிற்கும். கட்டிகளில் வைத்து கட்டினால் அவை உடைந்து புண் ஆறும்.
வாய்வுத் தொல்லையுடையவர்கள் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மாதவிடாய் நிற்கும் நிலையில் உள்ள பெண்களுக்கு இந்தக் கீரை நல்லது. பெண்களின் மாதவிடாய் தொடர்பான பிரச்னைகளுக்கு இந்தக் கீரையின் சாறு ஒரு மேஜைக்கரண்டி போதும். இந்தக் கீரையை அரைத்து கர்ப்பிணிப் பெண்களின் அடிவயிற்றில் கட்டினால் சுகப்பிரசவமாகும்.
பருப்புக் கீரை நல்ல சத்துள்ள கீரைகளுள் பருப்புக் கீரையும்
ஒன்று. நீண்ட காலமாக இந்தக் கீரையைப் பருப்புடன் சமைத்து உண்ணும் வழக்கம்
இருந்து வருவதால் இதற்குப் பருப்புக் கீரை என்னும் பெயர் ஏற்பட்டுள்ளது.
பருப்புக் கீரையின் இலைகள் நீளவட்ட வடிவத்தில் பசுமை நிறமுடையதாகவும்,
தடிப்பாகவும் இருக்கும் பருப்புக் கீரையில் வைட்டமின்களும் தாது
உப்புகளும் அதிக அளவில் உள்ளன. இந்தக் கீரையின் இலை, தண்டு அனைத்தையும்
உணவாகப் பயன்படுத்தலாம். இதைப் பருப்புடன் சேர்த்து வேக வைத்துக் கடைந்து
சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். பொரியலும் செய்யலாம். பருப்புக் கீரையை
அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் வேனிற்காலத் தலைவலி, சூட்டால்
உண்டாகும் தலைவலி ஆகியன குணமாகும். இந்தக் கீரையைச் சாப்பிடுவதால் கல்லீரல்
நோய்கள் தீரும். செயல் இழந்துபோன கல்லீரலை மீண்டும் செயல்படச் செய்ய
மஞ்சள் கரிசலாங்கண்ணியைப் போலவே பருப்புக் கீரையையும் பயன்படுத்தலாம்.
பருப்புக் கீரையை
வேறோடு பிடுங்கி, புளியங்கொட்டை அளவு மஞ்சள் சேர்த்து
அரைத்து எலுமிச்சங்காய் அளவு எடுத்துத் தயிரில் கலந்து 40 நாட்கள் காலையில்
மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் மரத்தல், கல்லீரல் புண்,
கல்லீரல் பெருத்தல் போன்ற நோய்களும் மண்ணீரல் நோய்களும் நீங்கிவிடும்.
பருப்புக் கீரையின் தண்டை அரைத்து அடிவயிற்றில் பற்று போட்டால் வேர்க்குரு,
கைகால் எரிச்சல், சிறுநீர் எரிச்சல் ஆகியவை குணமாகும். இந்தக் கீரையின்
விதையை அரைத்து இளநீரில் கலக்கி உள்ளுக்குக் கொடுத்தால் சீதபேதியால்
ஏற்படும் வயிற்றுளைச்சலும், முக்கலும் விலகும். மூத்திர எரிச்சலும்
வெள்ளைப்படுதலும் கட்டுப்படும். இந்தக் கீரை குடல் புழுக்களை அகற்றுகிறது.
மூல நோய் உள்ளவர்களுக்கு மலம் வலியில்லாமல் எளிதாகக் கழிய பருப்புக் கீரை
உதவுகின்றது. இது சிறுநீரைப் பெருக்கும். மூலநோயைக் குறைக்கும். பருப்புக்
கீரையின் சாற்றைப் பிழிந்து 50 முதல் 100 மி.லி. அளவு வரை தினமும் காலை,
மாலை ஆகிய இரண்டு வேளைகளும் வெறும் வயிற்றில் பருகி வந்தால் இரத்தபேதி,
சீதபேதி, மூத்திரத் தடை, வெப்பம், நீர்ச்சுருக்கு ஆகிய நோய்கள் நீங்கி உடல்
சூடு தணியும். பருப்புக் கீரை இலையை அரைத்துத் தீப்புண், கொப்புளம்,
வெந்நீர்க் கொப்புளம் ஆகியவற்றின் மீது பூசினால் எரிச்சல் தணிந்து புண்
விரைவில் ஆறும். மஞ்சளுடன் இக்கீரையைச் சேர்த்து அரைத்துக் கட்டிகளில்
பூசினால் கட்டிகள் உடைந்து சீழ் வெளியேறி புண் ஆறும்.
வேறோடு பிடுங்கி, புளியங்கொட்டை அளவு மஞ்சள் சேர்த்து
அரைத்து எலுமிச்சங்காய் அளவு எடுத்துத் தயிரில் கலந்து 40 நாட்கள் காலையில்
மட்டும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் மரத்தல், கல்லீரல் புண்,
கல்லீரல் பெருத்தல் போன்ற நோய்களும் மண்ணீரல் நோய்களும் நீங்கிவிடும்.
பருப்புக் கீரையின் தண்டை அரைத்து அடிவயிற்றில் பற்று போட்டால் வேர்க்குரு,
கைகால் எரிச்சல், சிறுநீர் எரிச்சல் ஆகியவை குணமாகும். இந்தக் கீரையின்
விதையை அரைத்து இளநீரில் கலக்கி உள்ளுக்குக் கொடுத்தால் சீதபேதியால்
ஏற்படும் வயிற்றுளைச்சலும், முக்கலும் விலகும். மூத்திர எரிச்சலும்
வெள்ளைப்படுதலும் கட்டுப்படும். இந்தக் கீரை குடல் புழுக்களை அகற்றுகிறது.
மூல நோய் உள்ளவர்களுக்கு மலம் வலியில்லாமல் எளிதாகக் கழிய பருப்புக் கீரை
உதவுகின்றது. இது சிறுநீரைப் பெருக்கும். மூலநோயைக் குறைக்கும். பருப்புக்
கீரையின் சாற்றைப் பிழிந்து 50 முதல் 100 மி.லி. அளவு வரை தினமும் காலை,
மாலை ஆகிய இரண்டு வேளைகளும் வெறும் வயிற்றில் பருகி வந்தால் இரத்தபேதி,
சீதபேதி, மூத்திரத் தடை, வெப்பம், நீர்ச்சுருக்கு ஆகிய நோய்கள் நீங்கி உடல்
சூடு தணியும். பருப்புக் கீரை இலையை அரைத்துத் தீப்புண், கொப்புளம்,
வெந்நீர்க் கொப்புளம் ஆகியவற்றின் மீது பூசினால் எரிச்சல் தணிந்து புண்
விரைவில் ஆறும். மஞ்சளுடன் இக்கீரையைச் சேர்த்து அரைத்துக் கட்டிகளில்
பூசினால் கட்டிகள் உடைந்து சீழ் வெளியேறி புண் ஆறும்.
கரிசலாங்கண்ணிக் கீரை கரிசலாங்கண்ணி கரிசாலை, அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களால்
வழங்கப்படுகிறது. கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து,
வைட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ளன. கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே
பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு இரண்டு நாள், கீரையைச் சமையல் செய்து
சாப்பிட்டாலும் இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும்,
உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத்தன்மை உண்டாகும். பல கொடிய
வியாதிகளில் இருந்து பாது காத்துக் கொள்ளலாம். மஞ்சள் காமாலை முதல்
அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது கரிசலாங் கண்ணிக்
கீரையாகும்.கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாசத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம்
சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாத காலம்
சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை குறையும். கல்லீரல் செயல்பாட்டின்
குறைவினால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாற்றை 100
மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் இரத்த சோகை
நீங்கி விடும். இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராகச் செயல்படும்.
குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன்
கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும். அடிக்கடி சளி ஏற்படுவது
குறைந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
குறைவினால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாற்றை 100
மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் இரத்த சோகை
நீங்கி விடும். இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராகச் செயல்படும்.
Labels:
கீரை
Posted by
Anitha
comments (0)
. பிறந்த குழந்தைக்கு இயற்கையான உணவு, ஊட்டச்சத்து, நோய் எதிர்ப்புக் கவசம் தாய்பால் .தாய்ப்பால் தாய்க்கும், குழந்தைக்கும் இறைவன் தந்த வரப்பிரசாதம்!

தாய்பால் கொடுக்கும் ஒரு தாய்க்கு ஒரு நாளைக்கு அரை லிட்டர் முதல் ஒன்றரை லிட்டர் வரை பால் சுரக்கிறது.குழந்தை பாலை உறிஞ்சும்போதுபிட்யூட்டரி சுரப்பி, `ஆக்சிடோசின்’,
`புரோலாக்டின்’ ஆகியவற்றை உற்பத்திசெய்கிறது, பால் உற்பத்தியைத்
தூண்டுகிறது.ரத்தத்தில் இருந்து குளுக்கோஸை கிரகிப்பதற்கு பால் சுரபிகளை `புரோலாக்டின்’
தூண்டு கிறது. அந்த குளுக்கோஸானது லாக்டோஸாகவும் மற்ற சர்க்கரை களாகவும்
மாற்றபடுகிறது. கால்சியம், அமினோ அமிலங்கள், புரதங்கள், கொழுப்பு
ஆகியவையும் பெறப்படுகின்றனரத்தத்தில் இருந்து குளுக்கோஸை கிரகிப்பதற்கு பால் சுரபிகளை `புரோலாக்டின்’
தூண்டு கிறது. அந்த குளுக்கோஸானது லாக்டோஸாகவும் மற்ற சர்க்கரை களாகவும்
மாற்றபடுகிறது.தாய்ப்பாலிலுள்ள ஹேம்லெட் என்ற பொருள், 40 வகையான புற்றுநோய் செல்களை
அழிக்கும் திறன் பெற்றுள்ளது என, ஆய்வாளர்கள்
கண்டறிந்துள்ளனர்.தாய்ப்பாலில் நோய் எதிர்ப்பு சக்தி பற்றி கண்டறிவதற்காக
ஆய்வாளர்கள் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த போது, தற்செயலாக
கண்டுபிடிக்கப்பட்டது தான், ஹ்யூமன் ஆல்பா லாக்தல்பூமின் மேட் லெதல் டூ
ட்யூமர்! இதன் சுருக்கம்தான், ஹேம்லெட்! மனித உடலில், ஹேம்லெட் என்ன
பங்காற்றுகிறது என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. சமீபத்தில், ஸ்வீடன்
நாட்டின் லுண்ட் பல்கலை மற்றும் கோத்தென் பெர்க் பல்கலையின் ஆய்வாளர்கள்
இணைந்து நடத்திய ஆய்வில், இந்த ஹேம்லெட் மனித உடலிலுள்ள 40 வகையான
புற்றுநோய் செல்களை அழிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. ஆய்வின் போது,
சிறுநீர்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிலருக்கு, ஹேம்லெட் கொடுக்கப்பட்டு
சோதனை நடத்தப்பட்டது. அப்போது, சிறுநீருடன் புற்றுநோய் செல்கள் இறந்த
நிலையில் வெளியேறியது கண்டறியப்பட்டது. இதன் மூலம், புற்றுநோய்க்கான
சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படக் கூடும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
ஹேம்லெட் புற்றுநோய் செல்களை மட்டுமே அழிக்கிறது; மற்ற செல்களை
பாதிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹேம்லெட் எப்படி புற்றுநோய்
செல்களை அழிக்கிறது என்பது குறித்து, ஆய்வு நடந்து வருகிறது. குழந்தையின்
வயிற்றில் செல்லும் தாய்ப்பாலில் உள்ள, ஹேம்லெட் அங்கு, அமிலத் தன்மையை
உருவாக்குகிறது. அதன் மூலமே, கேன்சர் செல்கள் அழிக்கப்படுகின்றன என்று
தெரிய வந்துள்ளது. தாய்ப்பால் குழந்தைகளுக்கு ஒவ்வாவை நோய் வரும் வாய்ப்பை
குறைக்கிறது. ஒவ்வாமையினால் வரும் ஆஸ்த்மா நோயைத் தடுக்கும் சக்தி
தாய்ப்பாலுக்கு இருக்கிறது குழந்தைகளுக்கு தாய்ப்பால் பல வழிகளிலும்
ஆரோக்கியத்தைத் தருகின்றது. பெரும்பாலான தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்கு
முதலில் தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கின்றனர் ஆனால் சில வாரங்களிலேயே
பல்வேறு காரணங்களைக் காட்டி நிறுத்திவிடுகின்றனர்.. இது மிகவும்
தவறானதாகும். ஆறுமாதங்கள் முதல் ஒரு வயது வரை தாய்ப்பாலில் குழந்தைகள்
வளர்வதே ஆரோக்கியமானது. தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள்
மருத்துவமனைகளுக்குச் செல்லும் வாய்ப்பு 80% குறைகிறது.
தாய்ப்பால்
குடித்து வளரும் குழந்தைகள் அதிக எடையுடன் வளரும் ஆபத்திலிருந்தும்
தப்பிக்கிறது. குழந்தையின் தாடை வளர்ச்சிக்கும் இது பயனளிக்கிறது.
குழந்தைப் பருவத்தைக் கடந்து வாலிப வயதை அடையும் போது கூட குழந்தைகள்
சரியான எடையில் வளர சிறு வயதில் குடிக்கும் தாய்ப்பால் உதவுகிறது.
தாய்ப்பாலை குறைந்தது முதல் ஆறுமாதங்கள் குடித்து வளரும் குழந்தைகள்
நீரிழிவு நோயினின்றும் தப்பி
விடுகின்றன. குறிப்பாக குடும்பத்தில்
யாருக்கேனும் நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைக்கு ஆறுமாதங்கள் வெறும்
தாய்ப்பாலை மட்டுமே கொடுத்து வர வேண்டும். அது பரம்பரையாய் நோய் தாக்காமல்
தடுக்கும் என்பது ஆனந்தமான செய்தி. தாய்ப்பால் ஆரோக்கியமான நோய்
எதிர்ப்புச் சக்தியை குழந்தைகளின் உடலில் உருவாக்குகிறது. வணிக நிறுவனங்கள்
தரும் எந்த சத்துப் பொருளும் தாய்ப்பாலின் குணாதிசயங்களுக்கு வெகு
தொலைவிலேயே நின்று விடுகின்றன என்பதே உண்மை. வணிக நிறுவனங்கள் தங்கள்
விற்பனைப் பொருட்களை பிரபலப்படுத்த தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துமாறு
ஊக்கப்படுத்து கிறது. தாய்ப்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள் வலிகளைத்
தாங்கும் வலிமை படைத்ததாகவும் இருக்கின்றன. . தாய்ப்பாலில் இருக்கும்
அமிலத் தன்மை எண்டோர்பின் எனப்படும் வலி நிவாரணி அதிகம் சுரக்க வழி செய்வதே
இதன் காரணமாம்.
விடுகின்றன. குறிப்பாக குடும்பத்தில்
யாருக்கேனும் நீரிழிவு நோய் இருந்தால் குழந்தைக்கு ஆறுமாதங்கள் வெறும்
தாய்ப்பாலை மட்டுமே கொடுத்து வர வேண்டும். அது பரம்பரையாய் நோய் தாக்காமல்
தடுக்கும் என்பது ஆனந்தமான செய்தி. தாய்ப்பால் ஆரோக்கியமான நோய்
எதிர்ப்புச் சக்தியை குழந்தைகளின் உடலில் உருவாக்குகிறது. வணிக நிறுவனங்கள்
தரும் எந்த சத்துப் பொருளும் தாய்ப்பாலின் குணாதிசயங்களுக்கு வெகு
தொலைவிலேயே நின்று விடுகின்றன என்பதே உண்மை. வணிக நிறுவனங்கள் தங்கள்
விற்பனைப் பொருட்களை பிரபலப்படுத்த தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்துமாறு
ஊக்கப்படுத்து கிறது. தாய்ப்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள் வலிகளைத்
தாங்கும் வலிமை படைத்ததாகவும் இருக்கின்றன. . தாய்ப்பாலில் இருக்கும்
அமிலத் தன்மை எண்டோர்பின் எனப்படும் வலி நிவாரணி அதிகம் சுரக்க வழி செய்வதே
இதன் காரணமாம்.
தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான
அனைத்து விதமான சத்துகளும் அடங்கியிருக்கின்றன. அது இயற்கையாகவே அமைந்து
விட்டதனால் மிக எளிதாக இயல்பாகவே செரிமானமாகி விடுகிறது. வயிறு தொடர்பான
நோய்கள் குழந்தைகளுக்கு வருவதைத் தடுக்கிறது.
குறைப்பிரசவத்தில் பிறந்த
குழந்தைகளெனில் அவர்களுக்குத் தாய்ப்பால் கொடுப்பது மிக மிக
அவசியம். ஆரோக்கியத்தை மீண்டெடுக்கவும், துவக்க கால சிக்கல்களிலிருந்து
விடுபடவும், நீடிய ஆயுளுக்கும் அது வழி செய்யும். தாய்ப்பால் குடித்து
வளரும் குழந்தைகள் அறிவு வளர்ச்சியில் சற்று முன்னே நிற்கின்றன. போதிய மூளை
வளர்ச்சியும், சுறுசுறுப்பும் அத்தகைய குழந்தைகளுக்கு இருப்பதே இதன்
காரணமாகும். குறிப்பாக கணிதவியல், பொது அறிவு, நினைவாற்றல், துல்லியமான
பார்வை போன்றவற்றுக்கு தாய்ப்பால் துணை நிற்கிறது. SIDS (Sudden Infant
Death Syndrome) எனப்படும் திடீர் மரணங்களிலிருந்து குழந்தைகளளக்
காப்பாற்றும் சக்தி தாய்ப்பாலுக்கு உண்டு. பாலூட்டுவது குழந்தைகளுக்கு
மட்டுமன்றி தாய்க்கும் பல வகைகளில் பயனளிக்கிறது. குறிப்பாக பிரசவ
காலத்திற்குப் பின் உடலின் எடை குறையவும், தேவையற்ற கலோரிகளை இழக்கவும்
பாலூட்டுதல் உதவி செய்கிறது. ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு முறிவு
நோய் வரும் வாய்ப்பையும் பாலூட்டுதல் குறைக்கிறது. பெரும்பாலான பெண்கள்
தங்கள் மாதவிலக்கு காலம் முடிந்தபின் ஆஸ்டியோபோரோசிஸ் நோய்க்குள்
விழுகிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. பிரசவ காலத்தில் நிகழும்
உதிரப்போக்கு பாலூட்டும் தாய்மாருக்கு கட்டுக்குள் இருக்கிறது. அத்துடன்
கருப்பை தன்னுடைய பழைய நிலைக்கு வருவதற்கு பாலூட்டுதல் பெருமளவு துணை
நிற்கிறது. திரும்ப மாதவிலக்கு வரும் காலத்தையும் 20 முதல் 30 வாரங்கள் வரை
நீட்டித்து வைக்கும் வல்லமையும் பாலூட்டுதலுக்கு உண்டு. பாலூட்டும்
தாய்க்கு மார்பகப் புற்று நோய், கருப்பை புற்று நோய் வரும் வாய்ப்புகள்
பெருமளவு குறைகின்றன. தாய்க்கும் குழந்தைக்குமான உன்னதமான உறவை பாலூட்டுதல்
ஆழப்படுத்துகின்றது.
பிறந்த உடன் குழந்தைகளால் பன்னிரண்டு முதல் பதினைந்து
இஞ்ச் தொலைவு மட்டுமே பார்க்க முடியும். அதாவது தாயின் மார்புக்கும்
முகத்திற்கும் இடைப்பட்ட தூரம் ! தாய்ப்பால் கொடுக்கும் போது குழந்தை
தாயின் முகத்தையே பாசத்துடன் பார்த்து பந்தத்தைப் பலப்படுத்திக் கொள்கிறது.
முதல் ஆறுமாதங்கள் வரை தாய்ப்பால் கொடுப்பது குழந்தைகளை வைரஸ், பாக்டீரியா
தாக்குதலிலிருந்து காப்பாற்றுகிறது. மழலைக்காலங்களில் வரும் இத்தகைய
தாக்குதல்களினால் ஏராளமான உயிரிழப்புகள் நேரிடுகின்றன என்பது கவலைக்குரிய
செய்தியாகும். தாய்ப்பால் இதையனைத்தையும் எதிர்க்கும் கவசமாகச்
செயல்படுகிறது. தாய்ப்பால் கொடுக்க முடியாதசூழலில் பசுவின் பால் கொடுக்கும்
வழக்கம் பலருக்கும் இருக்கிறது.
இது ஆபத்தானது என்கின்றனர் மருத்துவர்கள்.
பசுவின் பால் எளிதில் செரிமானமாவதில்லை என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
பல்வேறு நோய்களால் பீடிக்கப்பட்டு தாய்ப்பால் கொடுக்க வேண்டாம் என
மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்ட தாய்மார்கள் நல்ல தரமான
குழந்தைகளுக்குரிய பால் பொருட்களை பயன்படுத்த வேண்டும்தாய்ப்பாலிலுள்ள
ஹேம்லெட் என்ற பொருள், 40 வகையான புற்றுநோய் செல்களை அழிக்கும் திறன்
பெற்றுள்ளது
. தாய்ப்பாலைக் குடித்து வளரும் குழந்தைகள் வலிகளைத்
தாங்கும் வலிமை படைத்ததாகவும் இருக்கின்றன. . தாய்ப்பாலில் இருக்கும்
அமிலத் தன்மை எண்டோர்பின் எனப்படும் வலி நிவாரணி அதிகம் சுரக்க வழி செய்வதே
இதன் காரணமாம். தாய்ப்பாலில் ஒரு குழந்தையின் வளர்ச்சிக்குத் தேவையான
அனைத்து விதமான சத்துகளும் அடங்கியிருக்கின்றன. அது இயற்கையாகவே அமைந்து
விட்டதனால் மிக எளிதாக இயல்பாகவே செரிமானமாகி விடுகிறது. வயிறு தொடர்பான
நோய்கள் குழந்தைகளுக்கு வருவதைத் தடுக்கிறது.
Labels:
தாய்ப்பால்
Posted by
Anitha
comments (0)
நலம் அருளும் நவக்கிரக நாயகர்கள் தனிக் கோயில் கொண்டு அருளும் நவக்கிரக பரிகார திருத்தலங்கள்
நவக்கிரக நாயகர்கள் வழிபட்டு தம் பாவங்கள் தீர்த்த "திருமங்கலக்குடி"
நவக்கிரக வழிபாட்டில் முதலில் வணங்கப்பட வேண்டிய
தலம் " திருமங்கலக்குடி ". இத் தலம் சூரியனார் கோவில் அருகில்
அமைந்துள்ளது. மூலாவராக " பிராணவரதேஸ்வரரும்". அம்பாளாக " மங்கள நாயகியும் "
அருள் புரியும் இத் திருத் தலம், மங்கலக்குடி, மங்கல விநாயகர், மங்கல
நாதர், மங்கல் நாயகி, மங்கல தீர்த்தம் என " பஞ்ச மங்கல ஷேத்ரமாக"
வழிபடப்படுகிறது.. திருநாவுக்கரசராலும், திருஞானசம்பந்தராலும் பாடப் பெற்ற
புண்ணிய பூமி இது."
சூரியபகவான், உஷா தேவி, சாயா தேவியுடன் அருளும் "சூரியனார் கோயில்"
முக்கண்ணனின் இடது கண்ணான சந்திர பகவான் அருளும் "திங்களூர்"
கும்பகோணத்திலிருந்து சுவாமி மலை, கபிஸ்தலம் வழியில் திருவையாற்றின் அருகில் உள்ளது சந்திரனுகுரிய தலமான " திங்களூர் ". தஞ்சவூரில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. தேவரப் பாடல்பெற்ற தலம் இது. 63 நாயன்மார்கல்ளில் ஒருவரான " அப்பூதி அடிகளார் " வாழ்ந்த தலம் இது. அம்புலி, இந்து, கலாநிதி, குமுத சகாயன், சசாங்கதன், கதிர், நிலா, மதி என பல்வேறு பெயர்களால் அழைக்கப்படும் சந்திரன் சிவ பெருமானின் முக்கண்ணில் இடது கண்ணாக விளங்குபவர். சாத்வீக குணம் கொண்ட இவர் ஒரு சுப கிரகர். பராசக்தியின் அம்சமான இவர் திருப்பதி வெங்கடாசலபதியின் காலடியில் குடி கொண்டுள்ளதாக ஐதீகம். கடக ராசிக்கு அதிபதியான இவர் உயிர்களிடத்து மோக குணத்தை தூண்டுபவர். இவர் ஒருவரது ஜாதகத்தில் வலு பெற்று நல்ல நிலையில் இருந்தால் ஜாதகர் நல்ல மனோ திடத்துடன் இருப்பார்.
புத்திர மற்றும் பொருள் காரகனான குரு பகவான் அருளும் " ஆலங்குடி"
நவக்கிரகங்களில் முழு முதற் சுப கிரகமான " குரு பகவான் " பொன்னிறமானவர். சாத்வீக குணம் கொண்டவர். தேவர்களுக்கெல்லாம் இவரே குரு. கைகளில் யோக தண்டம், வர மித்திரை, அட்சய கமண்டலம் கொண்டு குபேர திசை நோக்கி யோகத்தில் அமர்ந்துள்ளவர். இவர் புத்திர காரகன். பொருள் காரகன். ஆலயங்கள், போதனைச் சாலைகள், உபன்யாசம், புனித இடங்கள், ஆன்மீகத் தொடர்பு போன்றவற்றில் வாசம் செய்பவர். தெய்வ பக்தி, ஆசாரம், புத்தி, யுக்தி, ஞானம், பொறுமை, புகழ் ஆகியவற்றிற்கு இவரே காரகன். ஜாதகத்தில் குரு பார்வை கொண்டே திருமணங்கள் நிச்சயிக்கப்படுகின்றன. சூரியனை அடுத்த மிகப் பிரகாசமான கிரகம் குரு.
சாயா கிரகமான " ராகு பகவான்" குடி கொண்டுள்ள திருநாகேஸ்வரம்"
கும்பகோணத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது " ராகு, கேது, நாக தோஷ பரிகார " தலமான " திருநாகேஸ்வரம்". ஒரு சமயம் சுசீல முனிவரால் சாபம் பெற்ற ராகு பகவான், தனது சாபம் நீங்க, சிவ ராத்திரியன்று, முதல் ஜாமத்தில் நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் செண்பகாரண்யத்தையும், மூன்றாம் ஜாமத்தில் திருப்பாம்புரத்தையும், நான்காம் ஜாமத்தில் நாகை காரோண்யத்தையும் வழிபட்டு, பின்னர் இத் தலம் வந்து ஈசனின் அருளால் சாபம் நீங்க பெற்றார். நந்தி தேவரும், நான்முகனும், சூரியனும், வசிஷ்டரும், இந்திரனும் வழிபட்ட திருத் தலம் இது.
நாக ராஜன், தான் வழிபட வேண்டி இறைவனை பிரதிஷ்டை செய்ததாலும், ராகு பகவான் சாபம் நீங்க பெற்றதாலும், இத் தலம் ராகு தோஷ நிவர்த்தி தலமாக வழிபடப்படுகிறது. நாக ராஜன், தன் இரு தேவியருடன், கோவிலின் தென் மேற்கு மூலையில் அருள்பாளிக்கிறார். இவருக்கு செய்யப்படும் பால் அபிஷேகம், நீல நிறமாக மாறுவது இத் தலத்தின் பெரும் சிறப்பு. ராகு கால வேளைகளில் செய்யப்படும் பாலாபிஷேகம் ராகு, கேது, நாக தோஷங்களுக்கு சிறந்ததொரு பரிகாரமாகும். தேவாரம் பாடிய மூவராலும் பாடப்பெற்ற திருத்தலம் இது
கல்விக்கு அதிபதியாம் "புதன்" குடி கொண்டுள்ள
"திருவெண்காடு"
கும்பகோணத்தை அடுத்துள்ள சீர்காழியில் இருந்து 17 கி. மீ. தொலைவில் அமைந்துள்ளது, நவக்கிரக நாயகர்களில் ஞான காராகனான புதன் ஆட்சி புரியும் " திருவெண்காடு ". இத் தலம் பூம்புகாரில் இருந்து 10 கி.மீ. தொலைவிலும், அங்காரகானான செவ்வாய் அருளும் வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 11 கி.மீ. தொலைவிலும் உள்ளது. இத் தலம் ஆதி சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது. சுப கிரக மகா ஞானியான இவரை வழிபட ஞானம் பெருகும். இவர் தீய கிரகங்களினால் ஏற்படும் பீடைகளை போக்குபவர். கல்விக்கு அதிபதியான இவரை வழிபட்டால் நல்ல வாக்கு சாதுர்யமும், கல்வி அறிவும், கவி பாடும் ஆற்றலும் கிடைக்கும். வித்யா காரகனான இவர் நல் விருந்து, பிரசங்கம், ஜோதிடம், வாத நோய், சிற்ப வேலைப்படுகள் ஆகியவற்றின் காரணகர்த்தா. ஞானி, சாந்த சொரூபியான இவர் பார்வை வக்கிரமாகும் பொழுது நரம்பு தளர்ச்சி , பேச்சு திறன் பாதிப்பு, மூளை
நோய்கள் போன்றவை ஏற்படுகின்றன. காவிரி வட
கரையில் உள்ள 63 தலங்களில் 11 வது தலம் இது. சமயக் குரவர் நால்வராலும்
பாடப் பெற்ற திருத் தலம் இது. காசிக்கு நிகரான தலம். மற்ற தலங்கள்
மயிலாடுதுறை, திருவிடைமருதூர், திருவையாறு, சாயாவனம், மற்றும்
திருவாஞ்சியம் ஆகும். இத் தல இறைவன் வழிபடுபவரது பாவங்களை போக்குவதால் இத்
தலம் பாபநாசபுரம் என்றும் வணங்கப்படுகிறதுசுப யோக அதிர்ஷ்டங்களை அருளும் சுக்கிரன் குடி கொண்டுள்ள "கஞ்சனூர்"
தேவர்களின் குருவாக " ஆலங்குடி வியாழ பகவான் " விளங்குவது போல, அசுரர்களின் குருவாக விளங்குபவர் " சுக்கிரன் ". இவர் ஒரு நீர்க் கிரகம், பெண் கிரகம். வெண்ணிறம் கொண்டுள்ளதால் " வெள்ளி " எனவும் அழைக்கப்படுகிறார். சுக்கிரனுக்குரிய தலமான " கஞ்சனூர் " கும்பகோணத்தில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவிலும், சூரியனார் கோவிலிலிருந்து 3 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. ஐந்து அடுக்கு ராஜ கோபுரத்துடன் கிழக்கு நோக்கி அமைந்துள்ள இத் தலம், திருநாவுக்கரசரால் பாடப் பெற்றது. பிற நவக்கிரகங்களை போல இத் தலத்தில் சுக்கிரனுக்கு தனி சந்நதியோ, உருவச் சிலையோ கிடையாது. சிவ பெருமானே இங்கு சுக்கிரனாக காட்சி தருகிறார். சுக்கிரன் சிவனிடம் ஐக்கியமாகியுள்ளதாக ஐதீகம். இத் தல இறைவன் " அக்கினீஸ்வரர் " இறைவி " கற்பகாம்பிகை ". பிரம்ம தேவருக்குக் திருமண கோலம் காட்டியதால், இத் தலத்தில் இறைவியை தனது வலப் புறம் மணக் கோலத்தில் கொண்டுள்ளார் ஈசன்.
வெள்ளிக் கிழமைகள் விரதம் இருப்பதாலும், கஞ்சனூர் சென்று வழிபடுவதாலும், ராஜ ராஜேஸ்வரியை வணங்குவதாலும், வெள்ளி, வைர நகைகள் அணிவதாலும், வெண்ணிற ஆடைகள் உடுத்திக் கொள்வதாலும், மொச்சை தானியத்தை தானமாக தருவதாலும் சுக்கிர தோஷங்கள் நீங்கும். சுக்கிர பகவானின் அருளாசி கிடைக்கும். ஒருவருக்கு விவாக பிராப்தி வேண்டும் என்றாலும், மலட்டு தன்மை நீங்கி புத்திரப் பேறு கிடைக்க வேண்டும் என்றாலும் சுக்கிரனின் அனுக்கிரகம் மிக அவசியம். இவர் தனது நான்கு கைகளில் தண்டம், வரகஸ்தம், கமண்டலம், அஷமாலை கொண்டு விளங்குபவர். வெண்ணிற ஆடையுடனும் , வெள்ளை பூவுடன் காட்சி தருபவர். தனது அதி தேவதையான தேவேந்திரனின் மனைவி இந்திராணியை வழிபட்டால் மிகுந்த மன மகிழ்வு அடைபவர்.
ஞான காரகனான " கேது பகவான் " அருள் புரியும் " கீழப்பெரும்பள்ளம் "
சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் வழியில் உள்ளது " கேது பகவான் " அருளாசி புரியும் கேது தோஷ நிவர்த்தி தலமான " கீழப் பெரும் பள்ளம் ". கொள்ளு தானியப் பிரியனான இவன் அசுரர்களில் வலியவன். மனிதற்கு ஏற்படும் தரித்திரம், வியாதிகள், பீடைகள் இவற்றிற்கு காரணகர்த்தா. கதம்ப மலர்ப் பிரியோன் இவன். வைடூர்ய ஆபர்ணன். கஸ்தூரியை சந்தனமாக கொள்பவன். மனிதரது பீடைகள் நீங்க வேண்டுமெனில் கேது பகவானின் அருளை பரிபூரணமாக பெற வேண்டும்
புத்திர பாக்கியம் கொடுக்கும் சனி பகவான்
" திருநள்ளாரு"
நவக்கிரகங்களில் " ஈஸ்வர " பட்டம் பெற்ற ஒரே கிரகம்
சனி பகவான். இவர் ஆயுள் காரகன். சனியின் பலம் கொண்டுதான் ஒருவரது ஆயுள்
அமைகிறது. " சனி போல் கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை " என்றனர்
ஆன்றோர். பிறவிப் பயனுக்கு ஏற்ப இன்ப துன்பங்களை அளிப்பவர் இவர். ராகு
காலம், எம கண்டம் இரண்டுமே சனி பகவானின் ஆதிக்கம் பெற்ற நேரங்கள். ஒரு கால் ஊனமான இவர், மாங்கல்ய காரகராவார். புத்திர பாக்கியம் கொடுப்பவர். மனிதரது வாழ்வில் ஏழரைச் சனி மூன்று முறை வரலாம். முதலில் வருவது " மங்கு சனி " இரண்டாவதாய் வருவது " பொங்கு சனி". மூன்றாவதாய் வருவது " மாரகச் சனி". பாலைவனம், மயான பூமி, பாழடைந்த கட்டிடங்கள், புதையுண்ட இடங்கள் இவை யாவும் சனி வாசம் செய்யும் இடங்களே. மனித உடலில் சிறுநீர்ப்பை, பற்கள், எலும்புகள், காதுகள், மண்ணீரல் போன்றவை சனியின் ஆதிக்கம் பெற்றவை. இரும்பு, எண்ணெய், கருப்பு தானியங்கள், புதையுண்ட பொருட்கள் ஆகியவற்றிற்கு இவரே காரணகர்த்தா .
சனிக் கிழமைகள் தோறும் விரதமிருந்து, நல்லெண்ணெய் கொண்டு இரு விளக்குகளை சனி பகவான் சந்நதியில் ஏற்றி வைத்து, எள் சாதம் நைவேத்யம் வைத்து மனமுருகி சனி பகவானை வழிபட வேண்டும். சனி பகவான் ஸ்தோத்திரப் பிரியர், எனவே சனி கவசம் சொல்வது சிறந்த பலன் அளிக்கும்.
திருநள்ளாரு சென்று கருப்பு வஸ்திரம் அணிந்து நள தீர்த்ததில் நீராடி, வஸ்த்திரத்தை அங்கேயே விட்டுவிட்டு, வேறு உடை அணிந்து, தர்பாரண்யேஸ்வரரையும், அம்பாளையும், சனி பகவானையும் வழிபட வேண்டும். கருப்பு வஸ்திரங்களை ஏழைகளுக்கு தானம் தரலாம்.
பூமி மற்றும் சகோதர காரகனான, "செவ்வாய்" உறையும் "வைதீஸ்வரன் கோயில்"

செவ்வாய் எனும் " அங்காரகன் " ஆட்சி புரியும் தலமாக
விளங்குவது " வைத்தீஸ்வரன் கோவில் ". கும்பகோணத்தை அடுத்த மாயவரம்
எனப்படும் மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் சாலையில் சுமார் 15
கி.மீ. தொலைவில் உள்ளது. சிவ பெருமானின் வியர்வை துளியில் இருந்து
தோன்றினார் அங்காரகன். அங்காரகன் செங்குஷ்டம் கொண்டிருப்பதை கண்ட ஈசன்,
வைத்தீஸ்வரன் கோவில் சென்று அங்குள்ள சித்தாமிர்த தீர்த்தத்தில் நீராடி
வழிபட சொன்னார். அங்காரகனும் அவ்வாறே செய்ய அவரது செங்குஷ்டம் நீங்கியது.
இறைவனிடம் தன்னை செவ்வாய் கிழமைகளில் வழிபடுவோருக்கு சகல செல்வங்களையும்,
சற்புத்திர பேற்றையும் அளிக்கும்படி வேண்டினார். சிவ பெருமானும் " செவ்வாய்
கிழமைகள் உனை துதிப்போர் அனைவரும் கிரக தோஷங்கள் விலகி நன்மை அடைவர். நீ
நவக்கிரகங்களில் மூன்றாவதாய் திகழ்வாய் " என வரமளித்தார்.வைத்தீஸ்வரன் கோவிலில் மூலவர் சந்நதிக்குள் நுழைந்தவுடன், தண்டாயுதபாணி சந்நதிக்கு தெற்கில் தெற்கு முகமாக அமிந்துள்லது அங்காரகன் சந்நதி. தனது நான்கு கைகளிலும் முறையே சூலம், சக்தியாயுதம், அபயக்கை, தண்டம் தாங்கியபடி காட்சி தருகிறார் செவ்வாய். செவ்வாய் தோஷம் உள்ள அனைவரும் இத் தலம் வந்து துவரை அன்னம் நைவேத்யம் செய்து இவரை வழிபடவேண்டும். இவர் அனுக்கிரகம் கிட்டினால் தோஷ நிவர்த்தி பெற்று, மணவினை பெறலாம் அன்பது திண்ணம். இத் தல வழிபாடு கோள் வினைகள், வாத நோய், பேய் பிசாசு வாதனைகள், கிரக பீடை, சொறி சிரங்கு, குஷ்ட நோய், சித்த பேதம், வெப்பு நோய் போன்ற கொடிய நோய்களை தீர்க்க வல்லது. இங்கு விற்கப்படும் " வைத்தியநாதர் மருந்து " என்ற திருச்சாந்துருண்டையை உண்ண சகல நோய்களிலுமிருந்தும் நிவாரணம் பெறலாம்.
Labels:
நவக்கிரக கோவில்கள்
Posted by
Anitha
comments (0)
தமிழர்களால் அதிகமாக சமையலுக்குப் பயன்படுத்தப்படும் நல்லெண்ணெய், உணவுப்பொருளாகவும், மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது.
நல்லெண்ணெயில் உள்ள லெசித்தின் என்ற பொருள் ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பைக் குறைக்கிறது.இதில் உள்ள லினோலிக் அமிலம்; ரத்தத்தில் இருக்க வேண்டிய நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது.
நல்லெண்ணெய் குளிர்ச்சியைத் தருவதோடு கிருமி நாசினியாகவும் உடலுக்குப் பயன்படுகிறது. வெறும் வயிற்றில் சிறிது நல்லெண்ணெய் குடிப்பது குடலுக்கு நல்லது. நல்லெண்ணெயை இயற்கை நமக்கு அளித்த கொடை என்று கூறலாம். இதற்கு அளவில்லாமல் தொடரும் இதன் நன்மைகளே காரணம்.
வைட்டமின் மற்றும் தாது உப்புகள்
நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ சத்து அதிகம் உள்ளதால் மிகச்சிறந்த ஆன்டி ஆக்சிடென்ட் ஆக செயல்படுகிறது. இது உடலில் கொழுப்பு சத்தை குறைத்து உயர் ரத்த அழுத்தம் ஏற்படுவதை குறைக்கிறது.
நல்லெண்ணெயில் உள்ள துத்தநாகம், எலும்புகளை பலப்படுத்துகிறது. தாமிரம், கால்சியம், மெக்னீசியம் போன்ற தாது உப்புகள் உடல் நலத்திற்கு பயன்படுகிறது. மன அழுத்தத்தையும் போக்குகிறது.
இனிப்பு, கசப்பு, காரம்
நல்லெண்ணெய் சற்று கசப்பும், சிறிது இனிப்பும், காரத் தன்மையும் கொண்டது. எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக்கூடியது. ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு நோய்களைப் போக்க நல்லெண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. நல்லெண்ணெய் சருமத்தின் ஈரப்பதத்தைச் சமப்படுத்துகிறது. அதனால் சருமம் மிருதுவாகவும், போஷாக்குடனும் திகழ உதவுகிறது.
வாரத்திற்கு ஒருமுறையாவது தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையும். தலைமுடி வறட்சி நீங்கும். பொடுகு முற்றிலும் நீங்கும். நல்லெண்ணெய் புத்திக்கு தெளிவு, கண்ணுக்கு குளிர்ச்சி, உடல் பூரிப்பு, வலிமை ஆகியவற்றை தருகிறது. கண் நோய், தலைக் கொதிப்பு, சொரி, சிரங்கு, புண் முதலியவற்றை தணிக்கிறது.
கண்நோய்கள் நீங்கும்
நல்லெண்ணெயை தினமும் 2 இல்லது 3 தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் உடல் பூரிக்கும். கோழி முட்டையின் வெள்ளைக் கருவுடன் நல்லெண்ணெய் கலந்து பருக்களின் மேல் பூசி வந்தால் கட்டிகளின் வலி நீங்கும். நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வந்தால், கண் சிவப்பு, கண் வலி, கண்ணில் நீர் வடிதல் மண்டைக் குத்தல் போன்றவை நீங்கும என்று பாரம்பரிய மருத்துவர்கள் கூறுகிறார்கள்
ஆயுள் புல்லிங்
ஆயுர்வேதத்தில் ஆயுல்புல்லிங் எனப்படும் மருத்துவமுறை உடலை உற்சாகமாக்குவதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஒரு கரண்டி எண்ணெயை சிறிதளவு வாயில் ஊற்றி நன்றாக நுரை வர கொப்பளித்து துப்பினால் பற்களும் ஈறும் பலப்படும். உடலுக்கும் புத்துணர்ச்சி தரும்.
Labels:
மருத்துவ குணங்கள்





































