தை பூசம்

                                            
                                                         தை பூசம்                                                 


இப்பூமியில்  சக்தியின் வெளிப்பாடும் ,தெய்வீகமும் பொருந்திய காலம் தை மாதம் ஆகும். இம்மாதத்தில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி வருகிறது. இந்த தைப்பூச தினத்தை அருட்பெருஞ்சோதி சித்திக்குரிய தினம் தேவர்களின் விருப்பத்திற்கேற்ப  அருள் மிகு  நடராசர் ,தன் சக்தியுடன் திரு நடன காட்சியை காட்டிய நாள் .எனவே சிவாலயங்களில் விழாக்கோலம் .குறிப்பாக சிதம்பரத்தில் மிக விசேஷம் .

 தை மாதப் பூச நட்சத்திரத்தில் வரும் உற்சவம் மிக முக்கியமாய்க் கருதப்
படுகிறது. ஆடல்வல்லான் தன் ஆனந்தத் தாண்டவத்தைச் சித் சபையில் இந்த  பூசத்தில் நடத்தியதாய்ச் சொல்லப் படுகிறது. இந்தத் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியாக, பதஞ்சலி, வியாக்ரபாதர் இருவருக்கும் இறைவன் தன் நாட்டியத்தைக் காட்டி முக்தி கொடுத்ததாய்க் கூறப்படுகிறது. 

முதன் முதல் தில்லைப் பதியில் "கனகசபை" அமைத்து இறைவன் ஆனந்தத் தாண்டவம் ஆடியதும் தைப்பூச நன்னாளில் தான் என்று சொல்லப்படுகிறது. சிவனுக்கே உரிய "சூல விரதம்" அன்று சிறப்பித்துச் சொல்லப் பட்டாலும், அது தற்சமயம் அவர்தம் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றிய சிவனின் அம்சம் ஆன சுப்ரமணியருக்கு உரிய நாளாக மாறி இருக்கிறது. அன்று இறைஅவனுக்கு அன்னப் பாவாடை சார்த்திப் பின்னர் அது பக்தர்களுக்குப் பகிர்ந்து அளிக்கப் படும்.

குறிப்பாக சிதம்பரத்தில் மிக விசேஷம்  சிதம்பரத்தில் சிவகங்கை குளத்திலே ,தீர்த்தவாரிக்கு பிறகு ,இறைவன் உலா  வரும் நிகழ்வு . பின் அன்னப் பாவடை என அளவில்லா அன்னம் இறைவனுக்கு படைத்தபின்வந்த பக்தர்களுக்கு வாரி வரி வழங்க பெறும் .   
  இன்று தான் திருமுருகர் வள்ளியை மணந்த  நாள் , எனவே திருத்தணியில் இன்று மணக்கோலம் , பழனியிலோ சுமார் ஒரு வாரமாக பக்தர்களின் நடை பயணம்  .இது ஆண்டுக்குஆண்டு பெருகி வருகிறது .

சாலையெங்கும் சாரி சாரியாக மக்கள் வெள்ளம் . அவர்களை  உப சரிக்க விருந்தோம்பல் தரும் பக்தர்கலேயே போட்டி, நடை பாயணம் செய்யும் பக்தர்கள் திக்கு முக்காடி போய விடுவார்கள் .
ஒருமுறை அதில் கலந்து கொண்டால் தான் அதில் பெறும் குதூகலம்  புரியும் .

சாலைகள் இப்போதெலாம் வாகனங்களுக்கு  மட்டும் அல்ல .
பக்தர்களுக்கே ! எங்கும் வேல் வேல் முருகா கோஷம் !
இன்று பழனியே லே  காவடி , பால் காவடி ஏந்தி பல் ஆயிரம் பேர்
வேல் வேல் கோஷமுடம் ,பழனி மலையில் ஏறும்  காட்சியின்
மாட்சி கண்கொள்ளா காட்சி தான் ! காண இரு கண் போதாது     ,
கண்டுவிட்டலோ பேசும் மொழி பற்றாதுஅதன் அனுபவத்தை விளம்ப , அனுபவம் சொல்லில் அடங்கா மௌனஅனுபூதியாக மாறிவிடும் .

 இத்தகு பெருமை படைத்த நாளிலே வடலூரில் , அருள் பெறும் ஜோதி வள்ளல்அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்தியஞான  சபை உள்ளது. சபையின் தெற்கு வாசல் வழியாக உள்ளே சென்றால் வலது புறம் பொற்சபையும், இடது புறம் சிற்சபையும் உள்ளன.

இவைகளுக்கு மத்தியில் பஞ்சபூத தத்துவங்களை குறிக்கும் 5 படிகளை கடந்து உள்ளே சென்றால் சதுரபீடத்தில் வள்ளலார் ஏற்றி வைத்த தீபம் காணப்படும்.

அதன் முன் 6.9 அடி உயரம், 4.2 அடி அகலம் கொண்ட நிலைக்கண்ணாடி உள்ளது. கண்ணாடிக்கு முன்னால் கருப்பு, செம்மை என பல வண்ணங்களில் ஏழு திரைகள் காணப்படும். 

இந்த திரைகளை நீக்கி, நிலைக்கண்ணாடிக்கு பின் உள்ள தீபத்தை தரிசிப்பதே ஜோதி தரிசனம் இவை அனைத்தும் சித்தர்களின் தத்து வழக்கத்தின் , செயல் முறைஉருவகம் இதை காணும் போது தத்துவமும் , அதன் மெய் பொருளும்சாதகர்க்கு விள்ளக்கமாக தெரிய வேண்டும் என மெய் பொருளைஒரு ஓரங்க நாடகம் போல் விள்ளல் பெருமானார்   ஆணை படிநடத்தி வைக்கும் நாள் . இதன் விள்ளக்கதிற்கு என வள்ளல்
பெருமானார் தேர்ந்தெடுத்த நாள் இன் நாள் .

அருள் பெருஞ்சோதிஅருள் பெருஞ்சோதி !
தனிப் பெருஞ்சோதி  அருள் பெருஞ்சோதி !
என்ற விண் அதிரும் கோஷமுடன் ,அந்த தத்துவ விளக்கமான ,
மலமான ஏழு திரைகள் நீக்கப் பட்டபின் ,
அருள் பெருந் ஜோதி தரிசனம் கிடைக்கும் .
அருள் பெற்ற மிக சிலருக்கு தன்னுளேஅந்த ஜோதி ஒளிரும் .


இந்தனை சிறப்பும் மிக்க இந்த நாளை சும்மா தங்கள் சௌரியதிர்க்காக
ஒரு நாளை நமது பண்டைய ஞான குருக்கள் தேர்ந்தெடுக்க வில்லை .
இது ஒன்றும் செய்து பரிசோதிக்கும் மேற்கத்திய பாணி இல்லை ,
செய்யும் முன்னே தீர்க்கமாக இந்நாள் என தீர்மானித்த நாள் .


இதில் நமது ஆயிரம் ஆயிரம் ஆண்டு அனுபவ அறிவு மட்டும்  அனுபூதியில் பெற்ற மெய அறிவும் சேர்ந்து , விண்மீன்கள் சேர்க்கை முதலியனஆய்ந்து ,மிகப் பெரும் வான் சாஸ்திர அறிவுடன் ,தை பூச  தினம் , ஒரு விசேஷ தினம அன்று இறைவழிபாடு  செய்தல் ,மிக உகந்தது எனக் கண்டனர் .

இதற்காக சில விழாக்களையும் ,ஆலயங்களில் அமைத்தனர் .
எனவே இன்று இந்த நாளை மிகச் சிறந்த காரியங்களை தொடங்கவும் , இறை உணர்வில் ஆழ்ந்து இருக்கவும் பயன் படுத்திக் கொள்ளுமாறு நினைவுறுத்த விரும்புகிறேன் .
தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற தினம் மிகவும் ஒரு சிறப்பு வாய்ந்த தினமாகும்.

தை மாதத்தை மகர மாதம் என்று அழைப்பார்கள்.
மகரம் என்பது முடிந்த நிலையினை குறிப்பது
அகரம் + உகரம் + மகரம் = ஓம் 

தை மாதத்தில் பூசம் நட்சத்திரம் வருகின்ற நாள்  சூரியன் உதிக்கின்ற நேரத்தில் சந்திரனும் வானத்தில் இருக்கும். அப்போது ஞான சபையில் இருந்து அக்னியான ஜோதி காண்பிக்கப் படும்.

அதாவது சூரிய சந்திர ஜோதியுள் ஜோதி
சந்திரன் என்பது மன அறிவு, 
சூரியன் என்பது ஜீவ அறிவு.
அக்னி என்பது ஆன்மா அறிவு.
சந்திரன் சூரியனில் அடங்கி ,சூரியன் அக்னியில் அடங்கி அக்னி ஆகாயத்தில் அடங்கும் என்பதே தை பூசம்.
மனம் ஜீவனில் அடங்கி,ஜீவன் ஆன்மாவில் அடங்கி,ஆன்மா சிவத்துடன் கலந்து விடும்,என்பதை காட்டவே தை பூசம் 
மேலும் தை பூசத்தில் அதி காலை ஜோதி தரிசனம் மட்டுமே உண்மை.
மற்ற மாத பூசங்கள் எல்லாம் பிற்காலத்தில் ஏற்படுத்தப் பட்டன.
அன்று பொளர்ணமி-யாகம் இருக்கும். கோவில்களில் தெப்ப உச்சவம்
நடைபெறும். கோவிலில் இருக்கும் கடவுளை தேரில் வைத்து ஊர்வலமாக தெரு முழுவதும் அழைத்து வருவர்.
இந்த நன்னாள் முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும்.

சிவவிரதங்கள்


 


சிவபெருமானை எட்டு வகையான விரதங்கள் இருந்து வழிபட்டு அவரது பரிபூரணஅருளைப்பெறலாம்.
1. சோமவார விரதம் - திங்கள் கிழமைகளில் இருப்பது
2. உமா மகேஸ்வர விரதம் - கார்த்திகை பவுர்ணமியில் இருப்பது
3. திருவாதிரை விரதம் - மார்கழி மாதத்தில் வருவது
4. சிவராத்திரி விரதம் - மாசி மாதம் அமாவாசை தினத்தில் வருவது
5. கல்யாண விரதம் - பங்குனி உத்திரத்தன்று கடைபிடிப்பது
6. பாசுபத விரதம் - தைப்பூச தினத்தில் வருவது
7. அஷ்டமி விரதம் - வைகாசி மாதத்தில பூர்வபட்ச அஷ்டமி தினத்தில் அனுஷ்டிப்பது
8. கேதார கவுரி விரதம் - ஐப்பசி அமாவாசையை ஒட்டி (தீபாவளி தினத்தில்) இருக்கும் விரதம்.

சைவ சமய விரதங்கள் (நோன்புகள்) மனம் ஐம்பொறிகளின் தன்மைக்கு ஆட்பட்டு அலைபாயாது, பொய்யான ஆகைகளுக்கு ஆட்படாமல் மெய்ஞான வழியில் தங்களது நினைவை செலுத்த, நெறி பிறழாத நினைவால் இறைவனை ஒரு நிலைப்படுத்திய வழக்காக சில நியமங்களைக் கைக் கொள்ள வேண்டியுள்ளது.

முதலாவது மனக்கட்டுப்பாட்டுடன் உணவுக் காட்டுப்பாட்டினையும் கடைப்பிடித்திட வேண்டும். உணவின் தன்மைக் கேற்ற நமது சிந்தனைகள் மென்மை, கடினம் என்ற நிலையைப் பாதிப்பதால் நமது முன்னோர்கள் விரதங்களை கடைப்பிடித்தனர் - உணவுகட்டுப்பாடு ஒழுக்கத்துடன். சிவ விரதங்களாக கையாளப்படும் நமது விரதங்கள் ஒன்பது ஆகும்.அவையாவின,

1)சோமவாரவிரதம்,
2)திருவாதிரை விரதம்,
3)உமா மகேஸ்வரி விரதம்,
4)சிவசாத்திரி விரதம்,
5)கேதார விரதம்,
6{கல்யாண சுந்தர விரதம்,
7)சூல விரதம்,
8)இடப விரதம்,
9)பிரதோஷ விரதம்,
10) கந்த சஷ்டி விரதம் ஆகும்.


சோம வார விரதம்:
சோம வார விரதம் - கார்த்திகை மாதம் முதல் சோம வாரத்திலிருந்து
இருத்தல் வேண்டும் சோமா வாரத்தில் உண்ணா நோன்பு மேற்கொள்வது முறை இவ்விரதம் வாழ்நாள் முழுமையோ, ஓராண்டு, மூன்று ஆண்டுகள், 12 ஆண்டுகள் என்ற கணக்கில் அனுஷ்டிப்பதே முறை.
திருவாதிரை விரதம்:

மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தன்று இருவேளை உண்ணா நோன்பும். இரவு பால், பழத்துடன் முடித்துக் கொள்வது.

 உமா மகேஸ்வரி விரதம்:
இவ்விரதம் கார்த்திகை பௌர்ணமியில் இருக்க வேண்டும். இந்நாளில் ஒரு பொழுது பகல் உணவு அருந்தலாம். இரவு பலகாரம்,பழம் சாப்பிடலாம். 


 சிவசாத்திரி விரதம்:
இவ்விரதம் மாசி கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று இருத்தல் வேண்டும். அன்று உண்ணா நோன்பு மேற்கொள்வது சிறப்பு. நான்கு ஜாமங்களும் உறங்காது சிவபூஜை செய்வது மிக நல்லது.

 கேதார விரதம்:
 இந்த விரதம் புரட்டாசி மாதம் சுக்கிலபட்ச அட்டமி முதல் 21 நாட்களும் கிருஷ்ணபட்ச பாதமை முதல் 14 நாட்களும் கிருஷ்ணபட்சத்து அட்டமி முதல் 7 நாட்களும் கிருஷ்ணபட்சத்து சதுர்த்தியன்றும் இருத்தல் வழக்கம். இந்த விரதம் அனுஷ்டிக்கும் போது இருபத்தொரு நூலிழைகளினால் காப்புகட்டிக் கொள்வது முறை ஆண்கள் வலக்கையிலும், பெண்கள் இடக்கையிலும் கட்டுதல் வேண்டும். இவ்விரதம் நிகழ்முறை முதல் 20 நாட்கள் ஒருபொழுது மட்டும் உணவு கொள்ள வேண்டும். இறுதி நாளன்று உண்ணாவிரதம் இருத்தல் முறை.
 கல்யாண சுந்தர விரதம்:
இவ்விரதம் பங்குனி உத்திரத்தன்று மேற்கொள்ளப்படும் ஒரு பொழுது மட்டும் உணவு கொள்ளலாம் இரவில் பால் அருந்தலாம்.

 சூல விரதம்::  இந்த விரதம் தை மாசம் அமாவாசையன்று இருக்க வேண்டும். ஒரு பொழுது மட்டும் பகல் உணவு உட்கொள்ளலாம். இரவு உண்ணா நோன்பு இருக்க வேண்டும்.
 இடப விரதம்:
இவ்விரதம் சுக்கிலபட்சம் அஷ்டமியன்று மேற்கொள்ள வேண்டும். ஒரு பொழுது பகல் உணவு மட்டும் உண்ணலாம்.
பிரதோஷ விரதம்
:

 இவ்விரதம் சுக்கிலபட்ச திரியோதசி, கிருஷ்ணபட்ச திரியோசி ஐப்பசி அல்லது கார்த்திகை அல்லது வைகாசி மாதங்களில் சனி பிரதோஷம் முதல் மேற்கொள்ள வேண்டும். பகலில் உணவு உட்கொள்ளக்கூடாது. பிரதோஷம் கழிந்த பின் உணவு அருந்தலாம்.
கந்த சஷ்டி விரதம்:
ஐப்பசி மாதம் சுக்கிலபட்சம் பிரதமை முதல் சஷ்டி வரை விரதம் மேற்கொள்ள வேண்டும். ஆறு நாட்களும் உண்ணா நோன்பிருத்தல் மிகமிக சிறப்பு.ஒன்று முதல் ஐந்து நாட்கள் ஒரு பொழுது உணவு கொண்டு ஆறாம் நாள் முழுமையா உண்ணா விரதம் இருக்க வேண்டும். இது ஆறு ஆண்டுகள் தொடர்ந்து செய்வது மிகமிக சிறப்பான நலம் பெறுதல் உண்டு.
திருச்செந்தூர் சென்று விரதம் இருக்க விரும்புவோர், முன்கூட்டிய தேவஸ்தான நிர்வாக அதிகாரியைத் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவும். அவர்கள் நமது தேவைக்குரியவைகளை ஏற்பாடு செய்து தருவதுடன் அதற்குரிய ஒரு சிறு கட்டணமாக பணம் செலுத்தச் சொல்வார்கள். சூரசம் ஹாரம் முடிந்து பிரசாதங்களுடன் வீடு வந்து சேரலாம்








சுக‌ப் ‌பிரசவ‌ம் ஆக வ‌ழி

  • கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப் பிரசவம் ஆவதற்கு சில ஆசனப் பயிற்சிகள்   உண்டு. அவற்றை 7ஆம் மாதத்தில் இருந்து செய்யலாம்.ஆனால்     கர்ப்பிணிகள் ஆசனப்  பயிற்சி செய்துதான் சுகப்பிரசவம்ஆகவேண்டியதில்லை
  • கர்ப்பிணிகள் முதல் 3 மாதத்தில் மல்லாந்து படுப்பதோ, மல்லாந்தபடி     படுத்திருந்து அப்படியே எழுவதோ மிகவும் தவறு.
  • முதல் 3 மாதங்களுக்கு ஒருக்களித்து படுத்தபடி இருப்பதுதான், கருவின்   வளர்ச்சிக்கு உதவும். அதேபோன்று, ஒருக்களித்த படியே கையை    ஊன்றித்தான்  எழுந்திருக்க வேண்டும். 
  • ருக்களித்தபடி படுக்கும் போது வயிறு தளர்வான நிலையில் இருக்கும்.   ஆனால் மல்லாந்து படுத்தால் வயிறு இழுத்த நிலையில் இருக்கும். அப்படி இருக்கும் போது கரு குழந்தையாக உருவாவதில் சிக்கல் ஏற்படும்.    அதன் பிறகும் மல்லாந்து படுப்பதை தவிர்க்க வேண்டும்.
  • ல்லாந்துபடுத்தால் குழந்தைக்கு குடல் சுற்றிக் கொள்ளும் ஆபத்து ஏற்படும்.அதேப்போல, ஒரு பக்கம் ஒருக்களித்து படுத்திருக்கும் போது அடுத்த  பக்கத்திற்கு அப்படியேத் திரும்பக் கூடாது. எழுந்து உட்கார்ந்து பிறகுதான் அடுத்த பக்கம் ஒருக்களித்துப் படுக்க வேண்டும். இது குழந்தை சுகப்பிரசவம் ஆக உதவும்.இப்போதெல்லாம் இந்த பழக்கத்தை நிறைய கர்ப்பிணிகள் கடைபிடிப்பதில்லை.அதனால்தான் குழந்தை தலை திரும்புவதில் பிரச்சினை ஏற்படுகிறது. தலை திரும்பாமல் இருந்தால் சிசேரியன் மூலமாகத்தான் பிரசவமாகும்.மேலும், எல்லோருமே குனிந்து நிமிர்ந்து வேலை செய்தாலேசுகப்பிரசவமாகும். 
  • வீட்டு வேலைகளை தாங்களாகவே செய்து கொண்டால்எல்லோருக்கும் சுகப்பிரவமாகும் வாய்ப்பு உள்ளது. அதேப்போல கர்ப்பிணிகள் ஏற்கனவே யோகாசனம் செய்து வந்து கொண்டிருந்தாலும்

  • முதல் மூன்று மாதங்களுக்கு செய்யக் கூடாது. அதன் பிறகும் எளிதான
       பயிற்சிகளை செய்யலாம்.ஆனால் கர்ப்பம் தரித்த பிறகு புதிதாக  யோகாசனம் செய்யவேக் கூடாது.
  • சுகப்பிரசவம் ஆவதற்கான ஆசனத்தையும் 7ஆம் மாதத்தில் இருந்து செய்யத் துவங்கலாம். ஆனால், சுகப்பிரசவம் ஆவதற்கு எந்த பயிற்சியும் தேவையில்லை.
  •           நீங்கள் சுறுசுறுப்பாக உங்கள் வேலைகளை செய்து கொண்டு       வந்தீர்களானால். ஒரு வேளை எந்த வேலையும் செய்யாமல்  இருப்பவர்களுக்குத்தான்  இந்த பயிற்சிகள் தேவைப்படும்.


  • மேலும், வீட்டில் குனிந்து நிமிர்ந்து செய்யும் வேலைகளான வீட்டை
       பெருக்குதல், துணி துவைப்பது போன்ற வேலைகளை செய்யும் போது     வயிறு சுருங்கி விரியும் தன்மையை பெறுகிறது.

கிழங்குகள் பட்டியல்

  • உருளைக்கிழங்கு
  • மரவள்ளிக்கிழங்கு
  • கருணைக்கிழங்கு
  • சேப்பங்கிழங்கு
  • இராசவள்ளிக்கிழங்கு - king jam
  • வத்தாளை கிழங்கு - sweet potato
  • பனங்கிழங்கு, பனை
  • தாமரைக்கிழங்கு
  • மோதவள்ளிக்கிழங்கு
  • பீட்ரூட்
  • கரட்
  • முள்ளங்கி
  • பனங்கிழங்கு
  • கோகிலாக்கிழங்கு
  • கொய்லாக்கிழங்கு
  • அரோட்டுக்கிழங்கு - arrowroor
  • சிகப்பு முள்ளங்கிக்கிழங்கு - turnip
  • வெள்ளை முள்ளங்கிக்கிழங்கு - radish
  • சோனை கிழங்கு
  • கப்பை கிழங்கு
  உருளைக்கிழங்கு
நம் உடலில் அதிகமாய் உள்ள புளித்த அமிலங்களைச் சமப்படுத்தி அல்லது வெளியேற்றி உடலை ஆரோக்கியமாகப் பாதுகாப்பதில் உருளைக்கிழங்குக்கு முக்கிய பங்குண்டு. நாம் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாக உணவுப் பாதையில் நட்புணர்வுடன் செயல்படும் பாக்டீரியாக்களையும் அதிகம் வளர்த்துவிடுகிறது.
இதனிடையே தினந்தோறும் இருமுறை உருளைக்கிழங்கு சாப்பிடுபவர்களுக்கு உயர் ரத்த அழுத்தநோய் குறையும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. இதனால் இதயநோய் பாதிப்பும் ஏற்படாது

 மரவள்ளிக்கிழங்கு
  மரவள்ளிக் கிழங்கு சாதாரனமாக எங்குமே கிடைக்கும் உணவுப்பொருளாகும். போர்க்காலங்களில் உணவு கிடைக்காத போது பல நாடுகளில் மக்கள் இந்தக் கிழங்கை சாப்பிட்டே உயிர்பிழைத்திருந்தனர். இக்கிழங்கு பலவிதமாக சமைக்கப்படக்கூடும், ஆனால் உணவு தவிர இக்கிழங்கிற்கு மருத்துவ ரீதியான பயன்களும் உண்டென்பது அவ்வளவாக அறியப்படாத ஒன்றாகும். அவற்றில் ஒன்று மரவள்ளிக்கிழங்கு புற்று நோயிலிருந்து நிவாரணம் அளிக்கவல்லது என்பதாகும்.

 பீட்ரூட்
பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.
பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும் பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும். 

 கரட்
உடல் பருமன் குறைய கரட் தினசரி சமையலில் சேர்த்துக்கொள்வதுடன் இரண்டு கப் மோருடன் இரண்டு கரட்டையும் போட்டு மைய அரைத்துக் குடித்து ஒரு வர வாரத்தில் இருந்து உடல் மெலிய ஆரம்பித்து விடும். போதும் என்ற நிலை வந்தவுடன் சாப்பிடுவரை நிறுத்திவிட வேண்டும்.
  காரட்டினைவாரத்தில் இரண்டு நாட்களாவது நமது சமையலில் பயன்படுத்துவது உடம்பிற்கு நல்லது. ஏனெனில் காரட்டில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மிகுந்த நன்மை தருவதுடன் செரிமானத்தை தூண்டி நல்ல ஜீரண சக்திதியை தருகின்றது. காரட்டினை பச்சையாகவே நிறைய சாப்பிடலாம். பற்களில் கறை உள்ளவர்கள் அடிக்கடி பச்சையாக காரட்டினை மென்று சாப்பிட்டால் பற்களின் கறைகள் போய்விடும்.ஒரே ஒரு காரட் வாங்கி பச்சையாக மென்று தின்று பாருங்கள். பசி காணாமல் போய் விடும்.
 காரம் சாப்பிட்டால் வயிற்று வலி வருபவர்கள் காரட்டினை நன்கு சாறு பிழிந்து வாரத்தில் மூன்று தடவை வீதம் இரண்டு மாதம் சாப்பிட்டால் போதும் வயிறு மற்றும் குடல் சம்மந்தமான நோய்கள் எல்லாம் குணம் அடைவதுடன் மறுபடியும் இதுபோன்ற பாதிப்புகள் வரவிடாமலும் செய்துவிடும் காரட்

 முள்ளங்கி
 முள்ளங்கியில் சிவப்புமுள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி என இரண்டு வகை உண்டு. இதில் வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருந்தாகப் பயன்படுகின்றது.
 பச்சிளம் குழந்தைகளைத் தாக்கும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சினைகளுக்கு, முள்ளங்கிப் பிஞ்சு சாறு நிவாரணம் தரும். இட்லி வேகவைப்பது போல முள்ளங்கிப்பிஞ்சை ஆவியில் வேக வைத்து, அதில் இருந்து சாறு எடுத்து பாலாடையில் வைத்து குழந்தைகளுக்கு ஊட்டலாம்.

முள்ளங்கி சாறுடன் கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் தீரும்
உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி. சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருப்பது, சிறுநீர்ப் பாதையில பிரச்சினை உள்ள பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம்.
முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும்.

கார்த்திகை தீபம்

 

ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும்கூட விளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.

கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி  வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும்
     .
 
விளக்குகளை நன்றாக கழுவி, சுத்தமான தாம்பளம் அல்லது பலகையில் வைக்கவேண்டும். உடைந்த, கீறல் விளக்குகளை பயன்படுத்தக் கூடாது.
ஏற்றியபின்பு அசையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
விளக்கிற்கு மாலை மற்றும் மாங்கல்ய கயிறை சூட்ட வேண்டும்.
 சுடரில் இருந்து பத்தி, சூடம் கொளுத்தக் கூடாது. தீப்பெட்டியே பயன்படுத்த வேண்டும்.

 எண்ணெயை அடிக்கடி ஊற்றாமல் முதலிலேயே நிரம்ப ஊற்றிக் கொள்ளவேண்டும். திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும் 

தீபத்தின் சுடரில் மகாலட்சுமியும், ஒளியில் சரஸ்வதியும், வெப்பத்தில் பார்வதிதேவியும் எழுந்தருளுவதாக ஐதீகம். எனவே, தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வதன் மூலம் முப்பெரும் தேவியரின் திருவருளையும் ஒருங்கே பெறலாம். திருக்கார்த்திகை தினத்தன்று, கிளியஞ்சட்டி எனப்படும் களி மண்ணாலான விளக்கில் பசு நெய் கொண்டு, பஞ்சு திரியிட்டு விளக்கேற்றச் சொல்வார்கள் பெரியோர்கள். அம்பிகை வாசம் செய்வதாக நம்பப்படும் பசு நெய்யை தீபத்தில் இடும்பொழுது, அது சிவமாகிய ஜோதியுடன் சேர்ந்து சிவசக்தி சொரூபமாகிறது. 

திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படாவண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையுமிடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.

 சூரியோதயத்திற்கு முன்னதான பிரம்ம முகூர்த்த வேளையில் (காலை4.30- 6மணி) விளக்கேற்றினால் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலை 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம். ஒரு வீட்டில் எந்த நேரத்தில் விளக்கேற்றினாலும், கருக்கல் நேரமான மாலை 6.30 மணிக்கு அவசியம் விளக்கேற்ற வேண்டும். இது அனைவருக்கும் பொதுவான நேரம். விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.

வீட்டில் திருவிளக்கு ஏற்றும் முன் சந்தனம் குங்குமம் இடவேண்டும் என்பது நியதி. விளக்கின் எட்டு பாகத்தில் பொட்டு இட வேண்டும். அவை உச்சி, முகங்கள் ஐந்து, தீபஸ்தம்பம், தீபத்தின் பாதம் ஆகியவை. எட்டு இடங்களிலும் பொட்டிடும்போது, ஆதிலட்சுமி, சந்தான லட்சுமி, வித்யாலட்சுமி, தனலட்சுமி, தான்ய லட்சுமி, கஜலட்சுமி, வீர லட்சுமி, விஜயலட்சுமி ஆகியோரை தியானித்து இடவேண்டும். இதனால், வீட்டில் ஐஸ்வர்யம் பெருகும். எட்டு பொட்டுகள் வைப்பதற்கு தத்துவரீதியாவும் ஒரு காரணமும் சொல்வர். நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் என்னும் ஐந்து பூதங்கள், சூரியன், சந்திரன் ஆகிய கண்கண்ட தெய்வங்கள், ஆத்மா என்னும் உயிர் தத்துவம் ஆகியவற்றை இந்த பொட்டுகள் குறிக்கின்றன.  


வீடுகளில் நாம் குத்துவிளக்கு, அகல்விளக்கு, காமாட்சி விளக்கு, கிலியஞ்சட்டி (மண்ணால் ஆனது) என்றெல்லாம் ஏற்றுகிறோம். இவை எல்லாவற்றிலும் விட உயர்ந்தது சரவிளக்கு. வெள்ளி நெய் தீபம் ஏற்றினால் வருமானம் அதிகரிக்கும், கடன் தீரும். ஐந்துமுக குத்து விளக்கேற்றினால் திருமணத்தடை நீங்கும், குடும்ப ஒற்றுமை நிலைக்கும். செடி விளக்கு ஏற்றினால் குடும்பம் முழுமைக்கும் நோய் நீங்கும். உங்கள் குழந்தைகளும், பேரன் பேத்திகளும் சிறப்பாகப் படித்து நல்லநிலைக்கு முன்னேறுவர். ஆக, இவையெல்லாம் குறிப்பிட்ட சில பலனையே தருகின்றன. என்ன தான் பொருளும், பணமும் இருந்தாலும் மனநிம்மதி தான் முக்கியம். நிம்மதியின்மைக்கு காரணம் ஜென்ம ஜென்மமாக நாம் செய்த பாவங்களின் தாக்கமே. ஜென்மாந்திர பாவங்கள் அடியோடு அழிய தொங்கும் சரவிளக்கு ஏற்ற வேண்டும். கோயில்களிலுள்ள சரவிளக்குகளுக்கு எண்ணெய், நெய் வாங்கிக் கொடுக்க வேண்டும்.

தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.
நெய்- செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்
நல்லெண்ணெய்- ஆரோக்கியம் அதிகரிக்கும்
தேங்காய் எண்ணெய்- வசீகரம் கூடும்
இலுப்பை எண்ணெய்- சகல காரிய வெற்றி
விளக்கெண்ணெய்- புகழ் தரும்
ஐந்து கூட்டு எண்ணெய்- அம்மன் அருள்


விளக்கேற்றும் போது ஒவ்வொரு முகத்துக்கும் ஒரு பலன் உண்டு.
ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்
இரு முகம் ஏற்றினால் - குடும்பம் சிறக்கும்
மூன்று முகம் ஏற்றினால் - புத்திரதோஷம் நீங்கும்
நான்கு முகம் ஏற்றினால் - செல்வம் பெருகும்
ஐந்து முகம் ஏற்றினால் - சகலநன்மையும் உண்டாகும்


கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி
மேற்கு - கடன், தோஷம் நீங்கும்
வடக்கு - திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது.


குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில் துலக்குவது நல்லது. இதற்கு காரணம் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி (குபேரனின் பிரதிநிதியான பதுமநிதியின் துணைவி) குடியிருக்கிறாள். செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பது ஐதீகம். வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்கநிதி யட்சணி (குபேரனின் பிரதிநிதியான சங்கநிதியின் துணைவி) குடியேறுகிறாள். எனவே வெள்ளிக்கிழமை துலக்குவதைத் தவிர்த்து, வியாழன் முன்னிரவில் துலக்குவது நல்லது.

விநாயகர்- தேங்காய் எண்ணெய்
மகாலட்சுமி - பசுநெய்
குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
பைரவர் - நல்லெண்ணெய்
அம்மன் - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த ஐந்து கூட்டு எண்ணெய்
பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள்- நல்லெண்ணெய்


கந்த சஷ்டி விரதம் இருப்பது எப்படி?

கந்தசஷ்டி விரதம், தீபாவளி பண்டிகைக்குப்பின் வரும் ஆறு நாட்கள் நடைபெறுகிறது. திருச்செந்தூரில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டாலும் மற்ற தலங்களிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள். 

கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள். பொதுவாக விரத தினங்களில் மக்கள் சைவமாக இருந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டு, பலகாரங்களை விருப்பமாக உண்ணுகின்றனர். ஆனால், விரதத்தை நியமத்தோடு கூடியதாக இருப்பதே முழுபலனைத் தரும். கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும்.

காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம். ஆனால், வயோதிகர்கள், நோயாளிகள் ஆகியோர் விரதத்தின் போது அவரவர் உடல்நிலைக்கு தக்கபடி நடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு. காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடுவது நல்லது. காலை, மாலை வழிபாட்டின் போது அவசியம் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்வதோ அல்லது கேட்கவோ செய்ய வேண்டும். ஆறுநாட்களும் அருகிலுள்ள முருகன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வதும், கந்தபுராணத்தைக் கேட்பதும் அவசியம். மலைக்கோயிலாக இருப்பின், காலையிலும், மாலையிலும் முருகனுக்குரிய துதிகளை மனதில் ஜபித்தபடியே கிரிவலம் வருவது நன்மை தரும். 

சூரசம்ஹார தினத்தன்று அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, அவரவர் வழக்கப்படி நெற்றிக்கு விபூதி, சந்தனம், குங்குமம் இட்டுக்கொள்ளுங்கள். பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள். பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதார வேண்டுங்கள். அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லது சிறிய முருகன் விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனை அகம் ஒன்றிக் கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள். பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்கு பொட்டு வைத்து, பூப் போட்டு அலங்கரியுங்கள். பூஜைக்கு உரிய இடத்தில் கோலமிட்டு அதன்மீது விக்ரகம் அல்லது படத்தினை வைத்து, தீபம் ஒன்றினை ஏற்றுங்கள். ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள்.

 மனம் முழுவதும் அந்த மயில்வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லுங்கள். அல்லது கேளுங்கள். ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் என்று உங்களுக்குத் தெரிந்தபடி சரணங்களைச் சொல்லுங்கள். முன் செய்த பழிக்குத் துணை முருகா என்னும் நாமம் என்பார் அருணகிரிநாதர்.

முருகப்பெருமானுக்குரிய சஷ்டி விரத நாட்களில் முடிந்தவரை ஓம் முருகா! என்று ஜபிப்பது நன்மை தரும்.நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். பாலும், பழமும் இருந்தாலும் போதும். எளியோர்க்கும் எளியோனான கந்தக் கடவுள் அன்போடு அளிப்பதை ஏற்றருள்வான். ஆனால் முழுமனதோடு செய்வது முக்கியம்.
அன்று மாலை, ஒரு சிலர் முருகப்பெருமான் சூரனை வதம் செய்த கோலத்தை தரிசனம் செய்துவிட்டு திருச்செந்தூரில் கடலில் நீராடுவர். மற்ற ஊர்களில் அவரவர் வீட்டிலோ, இதர நீர்நிலைகளிலோ நீராடவேண்டியது அவசியம். அன்று இரவு பக்கத்திலுள்ள முருகன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்து (முடிந்தால் மாவிளக்கு போடுங்கள்)  பச்சரிசி சாதம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். வேறு சிலரோ மறுநாள் முருகன் கோயில்களில் நடக்கும் பாவாடை நைவேத்யத்தை தரிசனம் செய்தபின்னரே சாப்பிடவேண்டும் என்றும் கூறுவதும் உண்டு.

 வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும். நம் பிறவிப்பிணி நீங்கி முருகனருள் எப்போதும் துணை நிற்கும்.










ருத்ராட்சம் அள்ளித்தரும் பலன்கள்

           
இந்துக்களில் சைவம், வைணவம் என்று கூறுவது போல், கிரகங் களிலும் சைவம், வைணவம் என் றெல்லாம் உண்டு.
சூரியன், சனி, செவ்வாய், குரு ஆகிய வை சிவ கோத்திரம். சனியை இரண் டு பக்கத்திலும் வைக்கலாம்.

செவ்வாய், குரு, சூரியன் ஆகிய மூன் றும் சைவக் கிரகங்கள், சைவக் கட வுள்கள் ஆகும். செவ்வாய் – முருகன், குரு – தட்சிணாமூர்த்தி, சூரியன் சிவனுக்குரியவர்கள். இந்த ஆதிக்கம் உடையவர்கள் எல்லாம் ருத்ராட்சம்    அணிந்தால் பிரம்மாண்டமாக முன்னுக்கு வருவார்கள்.

அதிலேயும் ருத்ராட்சத்திலும் ஒன்று முதல் பல முகங்கள் கொண்ட ருத்ராட்சங்கள் உள் ளன. ஆனால் எல்லா முக ருத்ராட்சங்களும் பலன் அளிக்கக்கூடிய ருத்ராட்சங்களே. அதில் எந்த மாறுபாடும் இல்லை.
ஒவ்வொரு முகத்திற்கும் ஏற்றபடி அதில் மருத்துவ குணங்களும், ஆன்மீக குணங்களும் உள்ளன. 

ஏகமுக ருத்ராட்சம்:

ஜோதிட சாஸ்த்திரத்தின் படி ஏகமுக ருத்ராட்சம் சூரியனின் அதிர்வை பெறுகின்றது. இது இதய நோயை குணப்படுத்தும். வலது கண், தலைவலியைப் போக்கும். தோல் நோயை நீக்கும். சுவாச கோளாறுகளை நீக்கும்.இந்த நோய் உள்ளவர்களோ அல்லது சூரியனின் ஆதிக்கம் குறைந்தவர்களோ ஏகமுக ருத்ராட்சத்தை அணியலாம்.

2 முக ருத்ராட்சம்:

சந்திரனின் ஆதிக்கம் உள்ளது.
சுவாச கோளாறுகள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், இடது கண் பதிப்பு உடையவர்கள், நுரையீரல் கோளாறு உடையவர்கள் குடல் புண் உள்ளவர்கள், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இதை அணியலாம்.

3 முக ருத்ராட்சம்:

ரத்த சம்பந்தமான நோய்கள் உடையவர்கள் இதை அணியலாம். கழுத்து, காது நோய் உடையவர்கள் ரத்த இறக்கம் (B.P.) குடற்புண், தீராத காயங்கள், எலும்பு சம்பந்தமான வியாதி உடையவர்கள் இதை அணியலாம். செவ்வாயின் அதிர்வுகள் 3 முக ருத்ராட்சதிற்கு உள்ளது.

 4முக ருத்ராட்சம்:

கணிதம், எழுத்தும், அறிவும் போன்றவற்றை 4 முக ருத்ராட்சம் ஆதிக்கம் செலுத்துகின்றது. பிஸினஸ் செய்பவர்களுக்கு மிக நல்லது. வாத நோய்கள், ஜுரம், மனம் சம்பந்தப்பட்டவியாதிகளுக்கு இது நல்லது. புதன் அதிர்வுகளை கொண்டது.

5முக ருத்ராட்சம்:

கல்லீரல், கணையம், தொண்டை, பாதம், எலும்பு மஜ்ஜை போன்ற தொடர்பான வியாதிகளை போக்க வல்லது. பணப்புழக்கம், மதம் தொடர்பான விஷயங்கள், உலகாயுத விஷயங்களில் வெற்றி போன்றவற்றைத் தரவல்லது. கடுமையான ஏழ்மையிலிருந்து காப்பாற்றும் தன்மை உடையது. குரு கிரக அதிர்வுகளை கொண்டது.

6முக ருத்ராட்சம்:

ஜனனேந்திரிய உறுப்புகளை நோயை நீக்க வல்லது. வாய்ப்புண், தொண்டை எரிச்சல், இசையில் நாட்டத்தை ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கையில் பரஸ்பர அன்பைத் தரும்.

7 முக ருத்ராட்சம்:

மரண பயத்தைப் போக்கும். ஆயுளை நீடிக்கும். ஜலதோசத்தைப் போக்கும். இடுப்புக்கு கீழே உள்ள பகுதிகளில் நோயை நீக்கும். உடலில் உள்ள விசத் தன்மையை நீக்கும்.  மதுவிற்கு அடிமையானவர்களை விடுதலை தரும். கவலையைப் போக்கும். நம்பிக்கையையும், வெற்றியையும் தரும். சனியின் அதிர்வுகள் படைத்தது.

8 முக ருத்ராட்சம்:

8 முக ருத்ராட்சத்தின் கிரக தேவதை ராகு. சனிக்கு உடைய பலனே இதற்கு எனலாம். திடீர் பிரச்சனைகள், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள், கால், சருமம், கண், சிறுநீரக பிரச்சனைகள், ரத்தத்தில் விஷம் சேருதல் போன்றவை 8 முக ருத்ராட்சம் அணிவதால் நீங்கும்.

9 முக ருத்ராட்சம்:

இதன் கிரக அதி தேவதை கிரகமான கேது. நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் கண், வயது சம்பந்தப்பட்ட கோளாறுகள் எல்லாம் 9 முக ருத்ராட்சம் நீக்கும் என சாஸ்த்திரங்கள் கூறுகின்றன.

10 முக ருத்ராட்சம்:

இதற்கு தனியாக அதிதேவதை இல்லை. இது எல்லா கிரகங்களையும் கட்டுப்படுதும் சக்தி படைத்தது. எந்த தீய கிரகத்தின் தன்மையையும் இது நீக்கும்.

11 முக ருத்ராட்சம்:

தியானம் செய்பவர்களுக்கு இது உதவும். யோக, தியான, ஆன்மிக வாழ்க்கையில் உள்ள சிக்கல்களை இது நீக்கும்.

12 முக ருத்ராட்சம்:

இதன் அதிதேவதை சூரியன். சூரியன் தீய அதிர்வுகளால் ஏற்படும் தீமையை இது நீக்கும்.

13 முக ருத்ராட்சம்:

6 முக ருத்ராட்சத்திற்குள்ள பலன்களே தான் இதற்கும், தியானம், ஆன்மிக வாழ்க்கை உயர்வுக்கு இது உதவும்.

14 முக ருத்ராட்சம்:

இதுவும் 7 முக ருத்ராட்சத்தைப் போல பலன் தரும். சனியின் தீய பலன்களை இது மாற்றும்.





 ருத்ராட்சத்தை எப்படி வேண்டுமானாலும் அணியலாம். ஆனால் ருத்ராட்சத்தை தனியாக அணியாமல் ஏதாவது ஒரு உலோகத்துடன் சேர்த்து அணிந்தால் அது இல்லற வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்லது.
 
அதற்காகத்தான் ருத்ராட்சத்தின் இரு பக்கத்திலும் பூன் போன்று செய்து அதனை நூலில் கட்டித் தொங்க விடுகிறார்கள்.

ருத்ராட்சத்திற்கு இயல்பாகவே மருத்துவ குணங்கள் நிறைய உண்டு. ருத்ராட்சத்தை யார் வேண்டுமானாலும் அணியலாம்.
ஆனால், ருத்ராட்சத்தை தங்கம் அல்லது வெள்ளியில் கட்டி அணி யும் போது, மந்த்ரா உபதேசம் பெற்று, குரு நாதர் கையில் இருந்து வாங்கி அணியும் போதெல்லாம் மிகவும் நேமமிஷ்டையுடன் இருக்க வேண்டும். அதாவது தீட்சையாக தரும் ருத்ராட்சத்தை பெற்றுக் கொண்டு தவறான செயல்கள், பேச்சுவார்த்தைகளில் ஈடுபடக் கூடாது.

ஆண், பெண் என இருபாலருமே ருத்ராட்சத்தை அணியலாம். பெண் களுக்கு இருக்கக்கூடிய இயல்பான இடர்பாடான நாட்களில் கூட அணிந்திருக்கலாம். அது ஒன்று ம் குரோதம் கிடையாது.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத் தக்கூடிய சக்தியும், மன அழுத்த த்தை குறைக்கும் சக்தியும் ருத் ராட்சத்திற்கு உண்டு. பக்கவாத த்திற்கு முந்தைய காலகட்டத்தில் ருத்ராட்ச மாலையை உடம்பு முழுவதும் தேய்த்துவிடும் போது அது சரியாகிறது
சீரான இரத்த ஓட்டங்கள், கால் மறத்துப் போகாமல் இருப்பதற்கு போன்றவற்றிற்கும் ருத்ராட்சம் பயன்படும். ருத்ராட்சத்தின் சிறு துளி யை இழைத்து உள்ளுக்கு சாப்பிடும் போது நோய் எதிர்ப்புச் சக்தியெ ல்லாம் அதிகரிக்கிறது. உடலிற்கு ஒரு மினுமினுப்பைக் கொடுக்கு ம். இதுபோன்ற மருத்துவக் குணங்கள் ருத்ராட்சத்திற்கு உண்டு.