- ஜாதிக்காயை அரைத்து தொப்புளைச் சுற்றி வீட்டில் உள்ள சில பாட்டிமார்கள் தடவிக்கொள்ள அறிவுறுத்துவார்கள். ஜாதிக்காய்க்கு பேதியை நிறுத்தும் குணம் உண்டு.
- ஜாதிக்காய்த் தூளை சிறிது நீரில் போட்டு ஊற வைத்து குடித்து வந்தால் நா வறட்சி சரியாகும்.
- அதேபோல் ஜாதிக்காயைன் சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கரும் தழும்புகள் மீதும் பூசிவந்தால் அது நாளடைவில் மறையும் என்று கூறுகிறது சித்த மருத்துவம்.
- அதே போல் அம்மை நோயின் போது ஜாதிக்காய், சீரகம், சுக்கு போன்றவற்றை போடி செய்து உணவிர்கு முன் சிறிது எடுத்துக் கொண்டு வந்தால் அம்மைக் கொப்புளங்கள் தணியும் என்று சித்த மருத்துவம் கூறுகிறது.
- மிகவும் வாசனை நிறைந்த இந்த ஜாதிக்காய் அதிக மருத்துவ குணம் கொண்டது.
- பல்வேறு இயற்கை வைத்திய முறைகளில் முதன்மையான இடத்தைப் பிடிப்பது இந்த ஜாதிக்காய் தான்.
- ஜாதிக்காயை உள்ளுக்கும் கொடுக்கலாம், வெளியிலும் தடவி நிவாரணம் பெறலாம்.
- பிறந்த குழந்தைகளுக்கு, தாய்க்கு இணையாக இந்த ஜாதிக்காய் பல்வேறு வகைகளில் உடல் நலனைக் காக்கிறது என்றால் அது மிகையாகாது.
- ஜாதிக்காய் குழந்தைகளுக்கு கை முட்டி மற்றும் முழங்கால் பகுதிகளில் சொரசொரப்பாக இருக்கும். இதற்கு ஜாதிக்காயை நீரில் உரைத்து அந்த இடத்தில் தடவி வர குணமாகும்.
- அம்மை நோய் கண்டவர்கள், ஜாதிக்காய், சீரகம், அத்தி பிஞ்சு, பருத்திப் பிஞ்சு இவற்றை சேர்த்து அரைத்து மோரில் கலந்து குடித்து வர கொப்புளங்கள் வாடும்.
- ஜாதிக்காயைப் பொடி செய்து அதனுடன் பிரண்டை உப்பினைக் கூட்டி, உட்கொண்டு வர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
- ஜாதிக்காய் தைலத்தை பூசிவர பல்வலி குணமாகும்.
- ஜாதிப் பத்திரியை நீர்விட்டு காய்ச்சி குடித்து வர சுரம், பெருங்கழிச்சல், நீர் நீராய் ஏற்படுகின்ற பேதி முதலியன குணமாகும்.
0 comments:
Post a Comment