ஆசனங்கள்

உலக சிருஷ்டியில் எத்தனை உயிரினங்கள் உண்டோ அவ்வளவு ஆசனங்கள் உள்ளன. பரமசிவனால் 84 லட்சம் ஆசனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என புராணங்கள் கூறுகின்றன. அதில் 84 எல்லாவற்றிலும் சிறந்தன. அவற்றுள்ளும் 32 மிகப் பயன்படத்தக்கவை.
ஆசனங்கள் பலவகை.
1. நின்று செய்யக்கூடியன.
2. அமர்ந்து செய்யக்கூடியன.
3. படுத்துச் செய்யக்கூடியன.
4. மேலாகச் செய்யக்கூடியன.
ஒவ்வொரு ஆசனமும் ஒருசில நோய்களை நீக்குவதாகும். எனவே, நோயின் தன்மை அறிந்து அவ்வகை ஆசனங்களைச் செய்தால் நோயிலிருந்து விடுதலை பெறலாம்.
 • சிரசாசனம் 
சிரசாசனம் என்றால் ஒருவர் தலைகீழாக நிற்பது. சிரஸ் என்ற வடமொழிச்சொல்லுக்கு தலை என்று பொருள்.
 • சூரிய நமஸ்காரம்
யோகாசனங்களில் மிக முக்கியமான ஆசனங்களில் சூரிய நமஸ்காரம் ஒன்றாகும். சூரிய நமஸ்காரம் எல்லா வயதினருக்கும் பயனளிக்கக் கூடியது. அறிவுக் கூர்மைக்கும், உடல் மற்றும் மன நலத்திற்கும் ஏற்றது. 12 ஆசனங்களை ஒன்றிணைந்தது தான் இந்த சூரிய நமஸ்காரம்.
 • சக்ராசனம்
கடி என்றால் சமஸ்கிருதத்தில் நெஞ்சு என்று பொருள். அதன்படி கடி சக்ராசனம் என்பது நெஞ்சு சுழலும் ஆசனம் எனப்படுகிறது.
 • பாதஹ‌ஸ்தாசன‌ம்
பாத‌ம் எ‌ன்றா‌ல் கா‌ல்க‌ள், ஹ‌ஸ்த‌ம் எ‌ன்றா‌ல் கை எ‌ன்று பொரு‌ள். இ‌ந்த ஆசன‌த்‌தி‌ல் கா‌ல்களையு‌ம், கைகளையு‌ம் ஒ‌ன்றாக இரு‌க்கு‌ம் படி செ‌ய்வதா‌ல் இத‌ற்கு பாதஹ‌ஸ்தாசன‌ம் எ‌ன்று அழை‌க்க‌ப்படு‌கிறது.
 • அர்த்த சந்த்ராசனம்
சமஸ்கிருதத்தில் அர்த்த என்றால் பாதி என்று பொருள். சந்திரா என்றால் நிலா. இந்த ஆசனம் பாதி நிலா வடிவில் இருப்பதால் இதனை அர்த்த சந்த்ராசனம் என்று அழைக்கிறோம்.
 • தடாசன‌‌ம்
சம‌்‌ஸ்‌கிருத மொ‌‌ழி‌யி‌ல் தடா எ‌ன்றா‌ல் கு‌‌ன்று (‌சி‌றிய மலை) எ‌ன்று அ‌ர்‌த்த‌ம். இ‌ந்த தடாசன‌‌ம், சம‌ஸ்‌தி‌தி ஆசன‌ம் எ‌ன்று‌ம் அ‌றிய‌ப்படு‌கிறது. சம‌ஸ்‌தி‌‌தி எ‌ன்றா‌ல் ‌‌நிலையாக ஒரு ‌திசை‌யி‌ல் ‌நி‌ன்று செ‌ய்வது எ‌ன்று பொரு‌ள்படு‌கிறது.
 • ‌பூ‌ர்ண தனுராசன‌ம்
வட மொழியில் தனுஷ் என்றால் வில். பூர்ணம் என்றால் பூர்த்தி அல்லது முழுமை என்று பொருள். எனவே இந்த யோக நிலையில் ஒரு முழு வில்லை போன்று உடலை வளைக்க வேண்டும்
 • அர்த தனுராசனம்
வட மொழியில் தனுஷ் என்றால் வில். இந்த யோக நிலையில் உடலை படகு போல் வளைக்க வேண்டும். உடலும், தொடைகளும் வில்லின் வளைந்த பகுதியை ஒத்திருக்கும். கீழ் கால்களும் நீட்டப்பட்ட கரங்களும் வில்லில் இழுத்துக் கட்டப்பட்ட நாணை ஒத்திருக்கும்.
 • விபரீத நவ்காசனம்
மல்லாக்காக‌ப் படுத்த நிலையில் செய்யும் நவ்காசனத்தை அ‌ப்படியே குப்புறப்படுத்தபடி செய்தால் அது விபரீத நவ்காசனம் என‌ப்படு‌கிறது
 • ஷலபாசனம்
ஷலபாசனம் என்பதற்கு தாமரை நிலை என்று கூற‌ப்படு‌கிறது. பஷ்சிமோத்தாசனம் மற்றும் ஹாலசனம் ஆகியவற்றிற்கு எதிர்மறை நிலை என்று சுருக்கமாக அழைக்கலாம்.
 • புஜங்காசனம்
புஜங்கா என்ற வடமொழிச் சொல்லுக்கு பாம்பு என்று பொருள். பாம்பு படம் எடுப்பது போன்ற நிலையைக் குறிப்பதால் இந்த ஆசனத்திற்கு புஜங்காசனம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
 • பவன முக்தாசனம்
மகரம் என்ற வட மொழிச் சொல்லுக்கு முதலை என்று பொருள். மகர ஆசனம் முழுத் தளர்ச்சியை அளிக்கும் ஒரு ஆசனமாகும்.பவன முக்தாசனம் என்ற வடமொழிச் சொல் 3 கூட்டுச் சொற்களால் ஆனது. பவனம் என்றால் காற்று அல்லது வாயு, முக்தா என்பது விடுவிப்பு; ஆசனம் என்பது யோக நிலை. எனவே இது வாயு விடுவிப்பு ஆசனம் என்று அழைக்கப்படுகிறது.
 • நவ்காசனம்
படகு போன்ற ஆசன நிலை என்பதால் இது நவ்காசனம் என்று அழைக்கப்படுகிறது. நவ்கா என்றால் படகு. இந்த ஆசனம் சில வித்தியாசங்களைத் தவிர ஊர்த்வ பத –ஹஸ்தாசனத்தை பெரும்பாலும் ஒத்திருக்கும்
 • ஹலாசனம்
ஹலாசனத்தை ஒருவர் பயிற்சி செய்ய வேண்டுமென்றால் அவர் விபரீத கரணி, சர்வாங்கசனம் ஆகியவற்றை கற்றுத் தேர்ந்திருக்க வேண்டும். பஷ்ச்சி மோஸ்தாசனத்திற்கு ஹலாசனா ஒரு வகையில் உதவி ஆசனம் என்று கூறலாம்.
 • சர்வாங்காசனம்
சர்வம், அங்கம், ஆசனம் ஆகிய 3 வடமொழிச் சொற்களின் கூட்டுச் சொல்தான் சர்வாங்காசனம். சர்வம் என்றால் அனைத்து என்றும் அங்கம் என்றால் உறுப்பு என்றும் ஆசனம் என்றால் நிலை என்றும் பொருள் வழங்கப்படுகிறது.
 • விபரீத கரணி ஆசனம்
வடமொழியில் "விபரீத" என்றால் தலைகீழ் என்று பொருள். கரணி என்றால் செயல். இந்த ஆசனத்தில் உடல் தலைகீழ் நிலையில் இருக்கும்.
செத்த பிணம் போல் இருக்கும் யோக நிலை சவாசனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆசனம் மூலமே ஒருவர் மன அமைதி, உடல் தணிவடைதல் என்பதை சரியாக புரிந்து கொள்ளமுடியும்.
 • பிரம்ம முத்ராசனம்
பத்மாசனம், சுகாசனம், வஜ்ராசனம் போன்ற எந்த ஆசன நிலையிலும் உட்காரலாம். நாற்காலியில் உட்காரலாம் அல்லது சாதாரணமாக நின்று கொண்டு இடுப்பில் கைகளை வைத்துக் கொள்ளவும்.
 • பஷ்ச்சிமுத்தாசனம்
பஷ்ச்சிமுத்தாசனம் என்பது வடமொழியின் கூட்டுச்சொல். பஷ்ச்சிம் என்றால் "மேற்கு", "பின்னால்" அல்லது "முன்னால்" ஆகிய பொருள்கள் உண்டு. உத்தனா என்றால் நீட்டுதல் அல்லது விரித்தல்.
 • உஷ்த்ராசனம்
உஷ்த்ரம் என்ற வடமொழிச் சொல்லுக்கு ஒட்டகம் என்று பொருள். இதனால் இந்த ஆசனமும் ஒட்டக நிலை ஆசனம் என்று வழங்கப்படுகிறது. இது தனுராசனம் என்ற வில் நிலைக்கும் ஊர்த்வ தனுராசனம் என்ற மேல் நோக்கிய வில் நிலைக்கும் நடுவே உள்ள நிலை உஷ்த்ராசனம்
 • வ‌க்ராசன‌ம்
இ‌ந்த ஆசன‌ம், முதுகெலும்பை ஒழுங்குபடுத்தும் , முதுகுத் தண்டெலும்புகளின் வளைந்து கொடுக்கும் தன்மையை அதிகரிக்கும் சீரணத் தன்மையை அதிகரிக்கும்
 • அர்த மத்ஸ்யேந்த்ராசனா
இந்த யோகாசனத்தில் இடுப்பை பாதியாக பக்கவாட்டில் வளைக்கவேண்டும். இந்தப் பெயர் ஹட யோகத்தை சிறப்பான முறையில் விளக்கிய மத்ஸ்யேந்திர நாத் என்ற யோகியின் பெயரால் அறியப்படுகிறது.
 • மச்சாசனம்
மச்சாசனம் என்ற யோகாசனம் செய்பவர் மீன் நீந்துவது போன்ற நிலையில் இருப்பார். மச்சம் என்ற தமிழ்ச் சொல்லுக்கு மீன் என்ற பொருளும் உண்டு.
 • வஜ்ராசனம்
வஜ்ராசனத்தை தொடர்ந்து பயிற்சி செய்து வந்தால் உடல் பலப்பட்டு உறுதியாகும். சமஸ்கிருதத்தில் ‘வஜ்ரா’ என்றால் ‘வைராக்கியமானவன்’ என்று பொருள்.
 • பத்மாசனம்
பத்மாசனம்’ என்ற பெயருக்குப் பொருள் ‘தாமரை மலரின் நிலை’ என்பதே. ‘பத்மா’ என்ற சமஸ்கிருத சொல்லில் இருந்து ‘தாமரை’ என்று பொருளில் இவ்வார்த்தை பிறந்துள்ளது. ‘ஆசனம்’ என்பதற்கு ‘நிலை’ என்று பொருள்.
 • மயூராசனம்
உள்ளங்கைகளை தரையில் ஊன்றி, முழங்கையால் வயிற்றின் இருபுறமும் அழுத்தமாக வைத்துக் கொண்டு, முழு உடலையும் ஒரு கொ‌ம்பை‌ப் போல தரையைத் தொடாமல் மேலெழும்பிய நிலையில் வைத்திருக்கும் ஆசனத்திற்கு மயூராசனம். என்று பெயர்.
 • சவாசனம்!

செத்த பிணம் போல் இருக்கும் யோக நிலை சவாசனம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆசனம் மூலமே ஒருவர் மன அமைதி, உடல் தணிவடைதல் என்பதை சரியாக புரிந்து கொள்ளமுடியும்.

0 comments:

Post a Comment