உணவு முறை

ணவே உயிர். இதை நிரூபிக்க தேவையில்லை. நாம் கண்கூடாக காணும், உணரும் ஒரு உண்மை இது.
மக்களின் உணவுப் பழக்கங்கள் ஒரு நாளில் தோன்றியவையல்ல. படிப்படியாக மாற்றம் அடைந்தவை. 1570ம் ஆண்டில் ஸ்பானியரிகள் தென் அமெரிக்காவிலிருந்து உருளைக்கிழங்கை கொண்டுவந்தனர். அது ஜரோப்பியா முழுவதும் பரவியது. ஆனால் சுமார் 200 ஆண்டுகள் ஆங்கிலேயர்கள் உருளைக்கிழங்கை விஷமுள்ளது என்று கருதி, உபயோகிக்கவே இல்லை. இப்போது உருளைக்கிழங்கு இல்லாத உணவு இல்லை. இதே போல் தக்காளியும் விஷமென்று ஒதுக்கப்பட்ட காலமும் உண்டு. மீனையே அதிகமாக உண்டு வந்து ஜப்பானியர்கள் இப்போது இதர இறைச்சி உணவுகளையும் தங்கள் உணவில் சேர்த்துக்கொண்டு வருகின்றனர். இதனால் சாதாரணமாக குள்ளமான ஜப்பானியர்கள், இப்போது நல்ல உயரமாக வளர ஆரம்பித்திருக்கின்றனர்.
சத்துணவு விஞ்ஞானம் தற்போது மிகவும் முன்னேறிவிட்டது. வயதுக்கேற்ப, வியாதிக்கேற்ப, பல உணவு முறைகள் பரிந்துரைக்கப்படுகின்றன.
இதிலும் ஆயுர்வேதம் உணவு முறை மாற்றங்கள் சத்துணவு விவரங்கள் போன்றவற்றை விளக்கி விவரிக்கிறது. தூய்மையான உணவால் தூய்மையான மனது கிடைக்கும். ஆயுர்வேதத்தின் படி, தினமும் இரண்டு சுழற்சிகள், கப, பித்த, வாயு தோஷங்களுடன் எற்படுகின்றன.

முதற் சுழற்சி
காலை 6 மணி – 10 மணி – கபத்தின் நேரம்.
10 மணி – பிற்பகல் 2 மணி – பித்தம்
2 மணி – 6 மணி – வாதம்
இரண்டாம் சுழற்சி
சாயங்காலம் – 6 மணி – 10 மணி – கபம்
இரவு    - 10 மணி – 2 மணி – பித்தம்
2 மணி – 6 மணி – வாதம்
காலையில் எழுந்திருப்பது வாத சமயத்தில் நேர்ந்தால் நல்லது. ஒரு டம்ளர் வெந்நீர் குடிப்பது மலம் சுலபமாக வெளியேற உதவும். மத்தியான உணவை பகல் 12 மணியிலிருந்த 2 மணிக்குள் முடித்துவிட வேண்டும். ஏனென்றால் இந்த 2 மணி நேரம் பித்த நேரம். ஜீரணம் நன்கு ஆகும் வேளை. ஆயுர்வேதம் காலை உணவை விட, மதிய உணவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது. மதிய உணவுக்கு பின் 100 அடி நடக்கவும். சில நிமிடங்கள் ‘பூனைத்’ தூக்கம் தூங்கலாம்! பகலில் உறங்குவது ஆயுர்வேதத்தின் படி நல்லதல்ல. இரவு உணவை 7 மணி அளவில் – அதாவது தூங்குவதற்கு 3 மணி நேரம் முன்பே முடித்துக் கொள்ள வேண்டும். சாப்பிட்ட பின் 10-15 நிமிடங்கள் நடக்கவும் இரவு உணவு மதிய உணவை விட ‘லகு’ வாக (குறைவாக) இருக்க வேண்டும். ஆயுர்வேதத்தின் படி உணவு, காலம் (ஸீஸன்), உண்பவர் வசிக்கும் தேசம், இடம் போன்றவற்றை பொருத்தது.
உணவுப் பொருட்களின் இயற்கையான தன்மை. ஏற்கும் உணவு எத்தகையது? கீழ்க்கண்டவற்றை தெரிந்து கொள்ள வேண்டும்
 உணவு லகுவானதா (அரிசி, சாறுள்ள பழங்கள்)
கனமான உணவா (மாவிலானவை, கிழங்கு போன்றவை)
உஷ்ண உணவா (சுக்கு, மிளகு, மிளகாய்)
 சீத (குளிர்ச்சி) உணவா (தயிர் போன்றவை).
உங்களின் உடலுக்கு ஏற்றவற்றை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.
சமைக்கும்  முறை
சமைக்கும் போது ஏற்படும் மாறுதல்களை கவனிக்க வேண்டும். அதிக எண்ணையில் தயாரிக்கப்பட்டவைகளை தவிர்க்க வேண்டும். எந்தெந்த வாசனை திரவியங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. என்று கவனிக்க வேண்டும். தயிர், மோர் இவற்றை சூடாக்கக் கூடாது. ஊறுகாய்களை உணவோடு சேர்த்து சூடு செய்யக்கூடாது.
 கலந்த பொருட்கள்- இரண்டு இரண்டுக்கு மேற்பட்ட பொருட்கள் கலக்கப்பட்டிருந்தால், கூட்டுப் பொருட்கள் என்ன வென்று கவனிக்க வேண்டும். வெல்லமும் நிலக்கடலையும், பலாப்பழமும் தேனும் போன்ற சேர்க்கைகள் நல்லவை. தேனும் நெய்யும் சேர்த்தால் கேடு விளைவிக்கும்.
பாலுடன் தயிருடன் தக்காளி, உருளைக்கிழங்கு, மிளகாய், கத்திரிக்காய் இவற்றுடன்   முட்டையுடன்எலுமிச்சம் பழம் உப்பு, மாம்பழம், வாழைப்பழம், மீன், மாமிசம், தர்பூசணி முலாம் பழங்கள், சாத்துக்குடி, ஆரஞ்ச்,பால், சூடான உணவுகள், சீஸ், மீன், மாமிசம், தர்பூசணி, முலாம் பழங்கள்.
வெள்ளிரிக்காய், பால், தயிர் ,பால், மாமிசம், முலாம், தர்பூசணி பழங்கள், மீன் வாழைப்பழம்.,தயிர், தக்காளி, பால், டீ, வெள்ளரிக்காய் - சாப்பிட வேண்டிய அளவை வயிறுதான் நிர்ணயிக்கும். அளவாக சாப்பிடுதல் நல்லது.

ஒரு தேசத்தில் விளையும் உணவு, வேறு தேசத்தவர்க்கு ஒத்து வராது. சில இடங்கள் சில உணவுகளுக்கு பிரசித்தமானவை.
 உணவுப்பொருட்களை வாங்கும் பருவம், உபயோகிக்கும் பருவம்
ஆயுர்வேத நூல்கள் இதை இரண்டுவிதமாக கூறுகின்றன. புதிய அரிசியை விட, 1 வருடம் வரை பழைமையான அரிசி நல்லது. அதாவது சில உணவுப் பொருட்களை சில காலம் வைத்து “பழையதாக” மாற்ற வேண்டும். சமைத்த உணவை ஒரு நாளின் எந்த நேரங்களில் உண்ண வேண்டும். என்பதும் ஆயுர்வேதம் சொல்கிறது. உதாரணமாக, கீரை தயிர் இவற்றை இரவில் உண்ணுவதில்லை. அந்தந்த ஸீஸன்களுக்கு ஏற்ற உணவை உட்கொள்ள வேண்டும். தவிர உண்ணும் உணவு வயதுக்கு ஏற்றதாக இருக்க வேண்டும்.
உண்ண வேண்டிய சமயம்- முதலில் உண்ட உணவு ஜீரணமான பிறகே
அடுத்த உணவை உட்கொள்ள வேண்டும்.
 உணவு உண்பவரின் நிலை- அவரவரின் உடல்வாக்கு தகுந்த உணவை உட்கொள்ள வேண்டும் என்ற பழமொழி உண்டு. ஒருவரின் ரொட்டி, மற்றொருவருக்கு விஷமாகும்.
இது தவிர உணவில் அறுசுவைகளும் இருக்க வேண்டும் என்கிறது
ஆயுர்வதேம். இந்த அறு சுவைகள் – இனிப்பு, புளிப்பு, உப்பு, துவர்ப்பு, கசப்பு, உரைப்பு.
உணவு உண்ணும்போது
1. கை, கால்களை சுத்தமாக கழுவிய பின்பே உணவு உட்கொள்ள அமரவும்
2. முன்பு உட்கொண்ட உணவு ஜீரணமான பின்பே அடுத்த உணவை உட்கொள்ள வேண்டும். வயிறு காலியாகிருக்க வேண்டும். மலஜலம், சிறுநீர் கழித்தல் இவை முடிந்திருக்க வேண்டும்.
3. இனிப்பு, பழங்கள் இவற்றை முதலிலும், உப்பு, புளிப்பு நிறைந்த உணவுகள் அடுத்ததாகவும், பின்னர் கசப்பு, துவப்பு, உரைப்பு உள்ள உணவுகளை கடைசியாகவும் உண்ண வேண்டும். முதல் கவளத்தை நெய்யுடன் கலந்து சாப்பிட வேண்டும்.
4. உணவை நாவில் உமிழ்நீருடன் சேர்ந்து, நன்றாக மென்று விழுங்க வேண்டும்.
5. குளிர்ந்த பானங்களை உணவுக்கு முன்போ, இல்லை உண்ணும் போதோ குடிக்க வேண்டாம். தண்ணீரையும் அதிகமாக குடிக்காமல், மிகக் குறைந்த அளவில், உணவின் நடுவே குடிக்கலாம். சில ஆயுர்வேத வைத்தியர்கள் சாப்பிட்ட பிறகே நீர் குடிக்க வேண்டும் என்கின்றனர்.
6. அதிக கார உணவுகள் பலவீனத்தை உண்டாக்கும். குளிர்ந்த, உலர்ந்த உணவுகள் ஜீரணத்தை தாமதப்படுத்தும். அதிசூடான உணவு வயிற்றை பாதிக்கும்.
7. டி.வி. பார்த்துக் கொண்டோ, புத்தகம் படித்துக் கொண்டோ, சாப்பிடாதீர்கள். கோப, தாபங்களும் வேண்டாம்.
8. உணவு முடிந்தவுடனே பழங்களை சாப்பிட வேண்டாம். வாய்வு, உப்புசத்தை உண்டாக்கும். ஒன்றிரண்டு மணி நேரத்திற்கு பிறகு பழங்களை சாப்பிடலாம். இல்லை உணவுக்கு ஒரு மணி முன்பு சாப்பிடலாம்.
9. உணவிற்குபின் ஒரு முஹ§ர்த்தம் (45 நிமிடம்) வரை கடின வேலைகளில் ஈடுபடக்கூடாது. ஓய்வு தேவை.
வயிற்றின் நான்கின் 2 பகுதியில் அன்னத்தையும் (திட உணவு), 1 பகுதியில்
திரவஉணவையும், நிரப்ப வேண்டும். மீதி ஒரு பகுதியை காலியாக விட வேண்டும்.
பசியறிந்து உண்ணவும், பசி எடுத்தால் உண்ணவும்.பசியுடன் நீண்ட நேரம் சாப்பிடாமல் இருக்கக் கூடாது. ஏன்? பசித்தால் வயிற்றுக்கு உணவு வருமுன்பே “வேகஸ்” நரம்பு மூலமாக, மூளை வழியே, உணவு வரப்போவதை வயிற்றுக்கு தெரிவிக்கும். அடுத்த விநாடியில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் சுரக்க ஆரம்பித்துவிடும். சாதாரணமாகவே, ஒரு மணிக்கு ஒரு தடவை, வயிற்றில் சிறிது அமிலம் சுரக்கும். வயிறு காலியாக இருந்தால், அமிலம் வயிற்று, குடல் சுவர்களை ‘பதம்’ பார்த்துவிடும். அல்சர் புண்களை உண்டாக்கும்.
எனவே சரியான உணவுகளை சரியான சமயத்தில் உட்கொள்வது அவசியம். காலையில் எழுந்தவுடன் 2 மணி நேரத்திற்குள் காலை உணவை எடுத்துக் கொள்வது வயிற்றுக்கு நல்லது. மூளைக்கும் நல்லது. காலை உணவுக்கும் மதிய உணவுக்கும் நடுவில் ‘சிற்றுண்டி’ தேவைப்பட்டால், பழங்கள், பழச்சாறு, பாப்கார்ன் (எண்ணை, வெண்ணை இல்லாதது), பாதாம் போன்றவைகளை சாப்பிடவும். மதிய உணவு தயிர், சாதம் இவற்றுடன் அதிக காய்கறிகளை சேர்த்துக் கொள்ளவும். மதிய உணவுக்கும் இரவு உணவுக்கும் நடுவே சிற்றுண்டி ஏதாவது சாப்பிடலாம். இனிப்பு, கேக் இவைகள் வேண்டாம்.

0 comments:

Post a Comment