குழந்தைகளுக்கு, என்ன மாதிரியான உணவு கொடுக்க வேண்டும்

      0-6 மாதங்கள் வரை :
  • தாய்ப்பால் மட்டுமே கொடுக்கவேண்டும். தாய்ப்பால் பற்றாக்குறை எனும் பட்சத்தில் அரிசிக்கஞ்சி, பருப்புத் தண்ணீர், ஆப்பிள், ஆரஞ்சு ஜூஸ், காய்கறி சூப் கொடுக்கலாம். அதிலும் பாதிக்குப் பாதி ஆறிய வெந்நீர் சேர்த்து, முதன் முறையாக கொடுக்கும்போது அரை டீஸ்பூன் மட்டுமே கொடுக்க வேண்டும். 
  • குழந்தை உடல் அதை ஏற்றுக் கொண்டு, மறுநாள் எந்தத் தொந்தரவுமின்றி ஆரோக்கியமாக இருந்தால், அதே அரை டீஸ்பூன் மறுநாளும் கொடுங்கள். மெது மெதுவாக அதை ஒரு டீஸ்பூன் அளவாக உயர்த்திக் கொள்ளலாம். .
     6 லிருந்து 8 மாதம் வரை :
  • இந்தத் தருணத்தில் குழந்தைக்கு இரும்புச் சத்து, புரதச்சத்து அதிகம் தேவைப்படும். எனவே கொழுப்பில்லாத மட்டன் சூப்பில் மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து முதல் நாள் சிறிதளவு கொடுத்துப் பாருங்கள். 
  • குழந்தைக்கு ஜீரணமானால் இந்த சூப்பை வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்கள் கொடுக்கலாம். இதைத்தவிர சிக்கன் சூப், வேகவைத்து மசித்த பசலைக்கீரை, முருங்கைக்கீரை, பருப்புசாதம் கொடுக்கலாம்.
    9லிருந்து 10 மாதம் வரை :
  • இந்த சமயத்தில்தான் குழந்தைக்குப் பல்முளைக்கும். மென்று சாப்பிடும் உணவுகளை ரசித்துச் சாப்பிட ஆரம்பிப்பார்கள். சிப்ஸ் போன்றவைகளை அதிகம் வாங்கிக் கொடுத்துப் பழக்கிவிட்டால், குழந்தைகள் லைஃப்லாங் அந்தப் பழக்கத்திற்கு அடிமையாகிவிடுவார்கள்
  • குழந்தைகள் கடிப்பதற்கு வசதியாக ஆப்பிள், காரட் போன்று கொடுத்துப் பழக்குங்கள். வீட்டில் செய்த இனிப்பு, லேசான காரம், லேசான புளிப்பு உணவு வகைகளையும் கொடுத்து பழக்கப்படுத்துங்கள். அப்போதுதான் குழந்தை எல்லா சுவைக்கும் பழக்கப்படும்.
    10லிருந்து 12 மாதங்கள் வரை :
  •  இந்தப் பருவத்தில் குழந்தைகள் உணவின் கலரை பிடித்துப்போய் சாப்பிட ஆசைப்படுவார்கள். இந்த தருணத்தில் நமது பாரம்பரிய உணவையே வகைவகையாக சமைத்துச் சாப்பிடக் கொடுக்கலாம். 
  • கலர்கலரான காய்கறிகளைச் சாப்பிட வைக்கலாம். ஸ்நாக்ஸுக்கு கடைகளில் விற்கும் சிப்ஸ் அது இதுவென்று கொடுக்காமல், வேகவைத்த வேர்க்கடலை, எண்ணெயின்றி வறுத்த வேர்க்கடலை, எனர்ஜி மில்க், வேகவைத்த தானியங்கள், முளை கட்டிய தானியங்களை பவுடராக்கி கஞ்சி வைத்து, இப்படி விதவிதமாகக் கொடுக்கலாம்.
  1லிருந்து 3 வயது வரை :
  • இந்தக் காலகட்டத்தில் குழந்தைகளுக்கு உணவின்மேல் ஈர்ப்பை உருவாக்கி உணவு ஊட்டுவது என்பது மிகக் கடினமான வேலை. புதிது புதிதாக சுவையை மாற்றி மாற்றிக் கொடுத்து உணவின்மேல் ஈர்ப்பை உருவாக்கவேண்டும். 
  • நிறைய கலர்ஃபுல்லான காய்கறிகள், பழங்கள் என்று சாப்பிடும் ஆசையைத் தூண்டிவிடலாம். சாண்ட்விச், முந்திரி, பாதாம், உலர்ந்த திராட்சை, வேகவைத்த வேர்க்கடலை போன்ற கால்சியம், புரோட்டீன் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடக் கொடுக்க வேண்டும்.
.
    3 வயதிற்கு மேல் :
  • குழந்தைகள் பள்ளி செல்ல ஆரம்பிக்கும் வயது. என்னதான் நீங்கள் பார்த்துப் பார்த்து லன்ச் கட்டிக் கொடுத்தாலும், அவர்கள் சாப்பிடுகிறார்களா, கொட்டிவிடுகிறார்களா என்று தெரியாது. எனவே காலை ப்ரேக் ஃபாஸ்ட், மாலை ஸ்நாக்ஸ், இரவு டின்னரில் நீங்கள் வெகு அலர்ட்டாக இருக்கவேண்டும்.
  • நீங்கள் கவனிக்காமல் விட்டுவிட்டீர்கள் என்றால் போதிய நியூட்ரிஷியன்ஸ் இல்லாமல் குழந்தைகள் நார்மல் சுறுசுறுப்பை இழந்து எப்போதும் தூங்கிவழிந்து கொண்டே இருப்பார்கள். ரொம்ப அசதியாகவும் காணப்படுவார்கள். மூளைத்திறனும் குறைவாகவே இருக்கும்.
  • இட்லி, தோசை, பால் குறைவான மில்க்ஷேக் சப்பாத்தி, எனர்ஜி மில்க், தானிய சுண்டல், முட்டை, பருப்புசாதம், மிக்ஸ்ட் ரைஸ், பழங்கள் சாப்பிடக் கொடுத்துப் பழக்க வேண்டும்.
  • புளிக்காத, ஃப்ரிட்ஜில் வைக்காத தயிர்சாதம் குழந்தைகளுக்குக் கட்டாயம் கொடுக்க வேண்டும். இதுபோன்ற தயிரில் நல்ல பாக்டீரியா இருப்பதால் உடல்நலனுக்கு மிகவும் நல்லது.
    12லிருந்து 14 வயது வரை :
  • இந்தப் பருவத்தில் குழந்தைகளுக்கு அபார வளர்ச்சி உண்டாகும். பெண் குழந்தைகளுக்குத்தான் அபாரவளர்ச்சி இந்த சமயத்தில் ஏற்படும். எனவே நிறைய நியூட்ரிஷியன்ஸ், புரதம், இரும்புச்சத்து, விட்டமின்ஸ், மினரல்ஸ் என எல்லாவிதமான சத்துகளும் தேவைப்படும். 
  • சில பெண் குழந்தைகள் பூப்பெய்துவிடும் வயது என்பதால் நிறைய அயர்ன் தேவைப்படும். இரும்புச் சத்து நிறைந்த உணவுகள் (முருங்கைக் கீரை, பேரீச்சை, வெல்லம்) போன்றவற்றை உணவில் அதிகம் சேருங்கள்.
  • அதே சமயம் நிறைய ஊளைச்சதைபோடும் இந்த வயதில் ஜங்க் ஃபுட் தவிர்த்தால்தான் உடலில் எதிர்ப்புச்சக்தி கூடும். பின் நாட்களில் நோய் அணுகாமல் தடுக்க இந்த வயதில் குழந்தைகள் சாப்பிடும் உணவுதான் தாங்கிப் பிடிக்கும். எனவே கவனமாக இருங்கள்.
  •   வீட்டிலேயே விதவிதமான உணவுகளை குழந்தைகளுக்குத் தயாரித்துக் கொடுத்து அவர்களை சாப்பிட வைத்து அவர்களின் வளர்ச்சியைப் பார்த்து ரசியுங்கள்.

0 comments:

Post a Comment